Tuesday, 20 October 2015

நிலக்கரி


நிலக்கரி

இயற்கையில் மடிந்து மண்ணாகிய உயிரிப் படிவங்களிலும், பெட்ரோலியம், நிலக்கரி மறஅறும் பீட் ஆகியவைகளிலும் ஹைட்ரோ கார்பன்கள் காணப்படுகின்றன.

நிலக்கரி இயற்கையில் பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது. இந்தியாவின் தொழில் வர்த்தகத்துக்குத் தேவையான ஆற்றலில் 67 சதவிகித ஆற்றல் நிலக்கரி மூலம் கிடைக்கிறது.


*ஹைட்ரோ கார்பன்களின் முக்கிய மூலம் நிலக்கரியாகும். 

பிட்டுமினஸ் நிலக்கரியைக் காற்றின்றி வெப்பப்படுத்தும் போது (கார்பன் மயமாதல்) நிலக்கரித் தார் ஆவியாகவும், கல்கரி வீழ்படிவாகவும் கிடைக்கிறது.

நிலக்கரித் தாரைப் பின்னக் காய்ச்சி வடிக்கும்போது பலவிதப் பொருட்கள் கிடைக்கின்றன.

பீட் நிலக்கரியில் 60 சதவிகித கார்பனும், லிக்னைட் நிலக்கரியில் 70 சதவிகித கார்பனும், பிட்டுமினஸ் நிலக்கரியில் 87 சதவீத கார்பனும், ஆந்தரசைட் நிலக்கரியில் 90 சதவிகித கார்பனும் உள்ளது.

Wednesday, 8 January 2014

அட்டவனை,


Tuesday, 7 January 2014

வினாவிடை,

அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்?
தண்ணீர்.

Monday, 6 January 2014

கொக்கோகோலா ,அவித்தமுட்டை




திங்கள்கிழமை


Sunday, 5 January 2014

எத்திலீன்

எத்திலீன்

ஈத்தீனின் பொதுப்பெயர் எத்திலீன். இதன் மூலக்கூறு வாய்ப்பாடு C2H4 ஆகும். பெரிய அல்கேன் மூலக்கூறை வெப்பத்தின் உதவியால் சிறிய ஹைட்ரோ கார்பன்களாக சிதைக்கும் முறை கிராக்கிங் எனப்படும்.

எத்திலீன் பழங்களைக் கனிய வைக்கவும், பாலிதீன், பாலி புரப்பிலீன் மற்றும் PVC (பாலி வினைல் குளோரைடு) தயாரிக்கவும் பயன்படுகிறது.

எத்திலீன் டை குளோரைடு, செயற்கை இரப்பரான தயோக்கால் தயாரிப்பில் பயன்படுகிறது. கிளைக்கால் தயாரித்தலிலும் பயன்படுகிறது.

ஹைட்ரோ கார்பன்கள்

ஹைட்ரோ கார்பன்கள்

கார்பன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியவற்றால் ஆக்கப்பட்ட எளிய கரிமச் சேர்மங்கள் ஹைட்ரோ கார்பன்கள் எனப்படுகின்றன. இவற்றில் கார்பன் நான்கு இணைதிறனையும், ஹைட்ரஜன் ஒரு இணைதிறனையும் உடையன.

கரிமச் சேர்மங்கள் இரு முக்கிய வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அவை: 

1.  திறந்த சங்கிலித் தொடர் அல்லது அலிபாட்டிச் சேர்மங்கள் 

2. மூடிய அமைப்புள்ள அல்லது வளையச் சேர்மங்கள்

கார்பன் அணுக்களின் நான்கு இணைதிறன்களும் நான்கு அணுக்கள் அல்லது  தொகுதிகளுடன் ஒற்றைப் பிணைப்பின் மூலம் பிணைக்கப்பட்டிருப்பதால் இத்தகைய கார்பன்கள் உள்ள சேர்மங்கள் நிறைவுற்ற ஹைட்ரோ கார்பன்கள் எனப்படுகின்றன. ஏனெனில் அவை மேலும் சில அணுக்களுடனோ அல்லது தொகுதிகளுடனோ பிணைப்பு ஏற்படுத்த முடியாது.

கார்பன் அணுக்கள் தமிமிடையே பல பிணைப்புக்களால் (குறைந்த அளவு ஒரு இரட்டைப் பிணைப்பு அல்லது முப்பிணைப்பு) பிணைக்கப்பட்டிருந்தால் அத்தகைய சேர்மங்கள் நிறைவுறா ஹைட்ரோ கார்பன்கள் எனப்படும்
.
நிறைவுற்ற ஹைட்ரோ கார்பன்கள் CnH2n+2 (n-ன் மதிப்பு = 1,2,3,4...) என்ற பொதுவான வாய்ப்பாட்டால் குறிக்கப்படுகின்றன.

ஆல்கேன்களில் முதல் சேர்மம் மீத்தேன். மீத்தேனின் வாய்பாடு CH4+ இரண்டாவது சேர்மம் ஈத்தேன். இதன் வாய்ப்பாடு C2H6 . மற்றவைகளை ஒப்பிடுகையில் இவை நிலைத்தன்மை உடையவை. ஏனெனில் அவை நிறைவுத் தன்மை உடையவை. எனவே அவை பாரஃபீன்கள் என அழைக்கப்படுகின்றன.

நிறைவுறா ஹைட்ரோ கார்பன்களான அல்கீன்கள் CnH2n என்ற பொதுவான வாய்ப்பாட்டால் குறிக்கப்படுகிறது. இவை ஒலிஃபீன்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. எளிய ஒலிஃபீனின் வாய்ப்பாடு C2H4 இதன் சாதாரணப் பெயர் எத்திலீன்.

அல்கீன்கள், கார்பன் அணுக்களுக்கிடையே ஒன்று அல்லது அதற்கு அதிகமான இரட்டைப் பிணைப்பைக் கொண்டுள்ளன.

இரு அணுக்களுக்கிடையே இரு எலக்ட்ரான் இணை பங்கிடப்பட்டு இரு சகப்பிணைப்பு ஏற்பட்டால், அவ்வணுக்கள் இரட்டைப் பிணைப்பால் சேர்ந்துள்ளன என அறியலாம்.

 நிறைவுறா ஹைட்ரோ கார்பன்களின் மற்றொரு வகை அல்கைன்களாகும். அதன் பொதுவான வாய்ப்பாடு CnH2n-2 இதன் சிறப்பம்சம் இதிலுள்ள கார்பன் - கார்பன் அணுக்களுக்கிடையேயான முப்பிணைப்பாகும்.

ஆல்கைன் வரிசையில் முதல் சேர்மத்தின் வாய்ப்பாடு C2H2 ஆகும். இது அசிட்டிலின் எனப்படும். எனவே அல்கைன்கள், அசிட்டிலீன்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

ஞாயிற்றுக்கிழமை


Saturday, 4 January 2014

கிராஃபைட்

கிராஃபைட்

கிராபைட்டில் கார்பன் அணுக்கள் தட்டையான அடுக்குகளாக அமைந்துள்ளன. ஒவ்வொரு அடுக்கும் கார்பன் அணுக்கள் அடங்கிய அறுகோண வளையங்களால் ஆனது.

ஒவ்வொரு கார்பன் அணுவும் மற்ற மூன்று கார்பன் அணுக்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது.

கிராபைட்டின் பல்வேறு அடுக்குகளுக்கிடையே உள்ள பிணைப்பு விசை வலுவிழந்த வாண்டர்வால்ஸ் விசை ஆகும். இந்த அடுக்குகள் ஒன்றின் மீது ஒன்றும் நழுவும் தன்மை உடையது.

இதனால் தான் கிராபைட் மென்மையாகவும் வழவழப்பாகவும் காணப்படுகிறது. இப்பண்பினால் தான் கிராபைட்டை எந்திரங்களில் உயவுப்பொருளாக பயன்படுத்துகிறோம்.

கிராபைட் கருஞ்சாம்பல் நிறமுடையது, மின்சாரத்தை நன்கு கடத்தும், கிராபைட்டின் உருகுநிலை 3700 டிகிரி செல்சியஸ் ஆகும்.

மின்கலங்களில் மின்வாய்களாகவும், இயந்திரங்களில் உயவுப்பொருளாகவும், பென்சில் லெட் செய்யவும், வண்ணங்கள் (பூச்சு) தயாரிக்கவும், அணுக்கரு உலைகளில் நியூட்ரானை உறிஞ்சும் பொருளாகவும் (Moderator) கிராபைட் பயன்படுகிறது.

வைரம்

வைரம் 

வைரத்தில் ஒவ்வொரு கார்பன் அணுவும் மற்ற நான்கு கார்பன் அணுக்களுடன் வலுவான விசைகளால் பிணைக்கப்பட்டுள்ளன. இத்தகைய கார்பன் பிணைப்பு முப்பரிமான அளவில் படிகம் முழுவதும் வலுவான வலைப்பின்னல் போல் அமைந்துள்ளது.

வைரம் நிறமற்ற ஒளி ஊடுருவக் கூடிய பொருள். பட்டை தீட்டப்பட்ட வைரம், ஒளி எதிரொளிப்பு மற்றும் ஒளி விலகல் காரணமாக மிகவும் பளபளப்பாக காட்சியளிக்கிறது.

வைரத்தின் அடர்த்தி 3.5 கி/செ.மீ3. வைரம் மின்சாரத்தைக் கடத்தாது. கருப்பு வைரத்தைக் கொண்டு கண்ணாடியை வெட்டலாம், பளிங்கு கற்களை அறுக்கலாம், மற்றும் பாறைகளைத் துளை இடலாம். உயர் நுட்ப வெப்பமானிகளில் வைரம் பயன்படுகிறது.

சனிக்கிழமை


Friday, 3 January 2014

பெட்ரோலியம்

பெட்ரோலியம்

 பெட்ரோலியம் என்பற்கு பாறைகளின் எண்ணெய் என்று பொருள் பெட்ரோலியத்தில் ஹைட்ரோ கார்பன்கள் அடங்கிய இயற்கை வாயுக்களும் கசடு எண்ணெயும் அடங்கும்.

பெட்ரோலியம் என்பது பல்வேறு ஹைட்ரோ கார்பன்களும் (கார்பன் மற்றும் ஹைட்ரஜனின் சேர்மங்கள்) மேலும் ஆக்சிஜன், நைட்ரஜன் மற்றும் கந்தகத்தைக் கொண்ட கரிம சேர்மங்கள் சிலவற்றையும் உடைய சிக்கலான கலவையாகும்.

சுமார் 100-200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கடல்வாழ் நுண்ணுயிர்த் தாவரங்களும், விலங்குகளும், பாறைகள் மற்றும் படிவங்களில் கலந்து ஆக்சிஜன் இன்றி அதிக வெப்பம், அழுத்தத்திற்கு உட்பட்டு பெட்ரோலியமாக கடலுக்கடியில் மாறியுள்ளன.

வெள்ளிக்கிழமை


Thursday, 2 January 2014

கார்பன்

கார்பன்

முக்கிய தனிமங்களுள் கார்பனும் ஒன்று. இது ஒரு தனித்தன்மை வாய்ந்த தனிமம்.

தாவரமோ அல்லது விலங்கோ எதுவாயினும் அதில் கார்பன் உள்ளது. இயற்கையில் காணப்படும் நிலக்கரி, பெட்ரோலியம், பளிங்கு கல் மற்றும் சுண்ணாம்புக் கல் போன்றவற்றில் கார்பன் உள்ளது.

 கார்பன் ஒரு அலோகம் அது C என்ற குறியீட்டால் குறிப்பிடப்படுகிறது.

கார்போ என்ற இலத்தீன் மொழி சொல்லிலிருந்து கார்பன் என்ற பெயர் வந்தது.

கார்பன் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று தங்களுக்குள் இணைந்து வெவ்வேறு அளவுடைய சங்கிலித் தொடர்களையும் வளையங்களையும் தோற்றுவிக்கும். கார்பனின் இந்தப் பண்பிற்கு கேட்டினேஷன் என்று பெயர்.


உலோகக் கலவைகள்


உலோகக் கலவைகள்

டியூராலுமினியத்தில் 95 சதவீதம் அலுமினியமும், 4 சதவீத செம்பும் உள்ளது.


அல்நிக்கோ என்பது அலுமினியம், நிக்கல், கோபால்ட் சேர்ந்த கலவையாகும்.

பிட்டானியா உலோகம் என்பது 93 சதவீத தகரமும், 5 சதவீத அண்டிமணியும், 2 சதவீத செம்பும் கொண்ட கலவையாகும்

90 சதவீத தகரம், 7 சதவீத அண்டிமணி, 3 சதவீத செம்பும் கொண்ட கலவை பாபிட் உலோகம் எனப்படும்.

64 சதவீத இரும்பும், 36 சதவீத நிக்கல் கொண்ட கலவை இன்வார் எனப்படும் நிக்கல் கலவையாகும்.

மோனா உலோகம் என்பது 67 சதவீத நிக்கல் மற்றும் 28 சதவீத செம்பு கொண்ட கலவையாகும்.

பித்தளை என்பது 60 முதல் 90  சதவீத செம்பும், 10 முதல் 40 சதவீத துத்தநாகமும் கொண்ட கலவையாகும்.

80 சதவீத செம்பும், 20 சதவீத தகரமும் கொண்டது பெல் உலோகம் எனப்படும்.

ஜெர்மன் வெள்ளி எனப்படும் கலவையில் செம்பு, துத்தநாகம், நிக்கல் ஆகியவை காணப்படும்.

90 சதவீத செம்பும், 10 சதவீத துத்தநாகமும் கொண்டது பிரான்ஸ் தங்கம் ஆகும்.

கன் மெட்டல் அல்லது கன் உலோகம் என்பது 89 சதவீத செம்பும், 10 சதவீத தகரம் மற்றும் 1 சதவீத துத்தநாகமும் கொண்டதாகும்.

எவர்சில்வர் என்பது இரும்பு, குரோமியம், நிக்கல் கலந்த கலவையாகும்.

தாதுபொருட்கள்

 தாதுபொருட்கள்

மேக்னடைட் ஹேமடைட், சிட்ரைட், லிமோடைட், இரும்பு கந்தகக்கல் ஆகியன இரும்பின் தாதுக்களாகும்.


ரூடைல், இல்மடைட் ஆகியவை டைட்டானியத்தின் தாதுக்களாகும்.

பிச்சு பிளெண்ட், கார்னோடைட் ஆகியன யுரேனியத்தின் தாதுக்கள்.

ஜிர்கான், பேடிலைட் ஆகியன ஜிர்கோனியத்தின் தாதுக்கள்.

கார்னோடைட், பேட்ரோனைட், வெனடினைட் ஆகியன வனேடியத்தின் தாதுக்களாகும்.

பைரோலுசைட், ஹிஸ்மனைட், மாங்கனைட் ஆகியவை மாங்கனீன் தாதுக்கள்.

குரோடைட், குரோகாயிசைட் ஆகியன குரோமியத்தின் தாதுக்களாகும்.

பெண்டலன்டைட், சோனபைட், குப்பல் நிக்கல் அல்லது நிக்கோலைட், கார்னிரைட் ஆகியன நிக்கலின் தாதுக்கள்.

பாக்சைட், கிரியோலைட், பெல்ஸ்பார் ஆகியன அலுமினியத்தின் தாதுக்கள்.

மாலகைட், தாமிரபைரைட், காப்பர் கிளான்ஸ், க்யூப்ரைட் ஆகியவை தாமிரத்தின் தாதுக்கள்.

சின்னபார் என்பது பாதரசத்தின் தாதுவாகும்.

கலீனா, துத்தநாக கந்தகக் கல் ஆகியவை கந்தகத்தின் தாதுப் பொருட்கள்.

காலமின், சிங்கைட் ஆகியவை துத்தநாகத்தின் தாதுப் பொருட்கள்.

டாலமைட், ஜிப்சம், ஃப்ளூரோஸ்பார், சுண்ணாம்புக்கல் ஆகியவை கல்சியத்தின் தாதுக்கள்.

 மேக்னசைட், டாலமைட், கார்னலைட், எப்சம் உப்பு ஆகியவை மக்னீசியத்தின் தாதுக்கள்.

கேசிட்டரைட் அல்லது டின்ஸ்டோன் எனப்படுவது வெள்ளீயத்தின் தாதுப்பொருளாகும்.

கயோலின், பெல்ஸ்பார் ஆகியன சிலிகானின் தாதுப் பொருட்கள்.

சில்வனைட், காரனைட், சால்ப் பீட்டர் ஆகியவை பொட்டாசியத்தின் தாதுப்பொருட்கள்.

சாதாரண உப்பு மற்றும் சிலிசால்ட் பீட்டர் ஆகியவை சோடியத்தின் தாதுப் பொருட்கள்.

ஸ்பெரிலைட், க்யூப்ரைட், பிராக்கைட் ஆகியவை பிளாட்டினத்தின் தாதுப் பொருட்களாகும்.

அர்ஜெண்டைட், குளோரார்ஜிரைட், பெரார்ஜிரைட் ஆகியவை வெள்ளியின் தாதுப் பொருட்கள் ஆகும்.

கலீனா, செருசைட் ஆகியவை காரீயத்தின் தாதுக்கள்.

சில்வனைட், காலவரைட், பிஸ்மத் ஆரைட் ஆகியவை தங்கத்தின் தாதுப் பொருட்கள்.

வேதியியல் என்று ஒரு தனி பிரிவே உள்ளது.

புவியின் ஒட்டுப்பகுதியில் 0.03 சதவீத அளவே கார்பன் உள்ளது. வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு உள்ளது.

இயற்கையில் நிலக்கரி மட்டுமல்லாமல் கிராபைட் மற்றும் வைரம் என்ற இருவகைகளிலும் கார்பன் காணப்படுகிறது. ஃபுல்லரின் என்ற இன்னொரு வகை கார்பனும் கண்டறியப்பட்டுள்ளது.

புவியின் ஒட்டுப் பகுதியில் கார்பன் பலவகைப்பட்ட பொருட்களில் காணப்படுகிறது.

பஞ்சு, காகிதம், மரம், சர்க்கரை மற்றும் உணவு வகைகள் போன்ற பொருட்களில் கார்பன் உள்ளது.

ஒரு தனிமம் ஒரே இயற்பியல் நிலையில் ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்கலில் காணப்படலாம்.

தனிமங்களின் இத்தகைய பண்பிற்கு புற வேற்றுமை என்றும், பல்வேறு வடிவங்களுக்கு புற வேற்றுமை வடிவங்கள் என்றும் பெயர்.

இத்தகைய புற வேற்றுமை வடிவங்கள் ஒரே மாதிரியான இயற்பியல் பண்புகளையும் மாறுபட்ட வேதியில் பண்புகளையும் பெற்றுள்ளன.

கார்பனுக்கு புறவேற்றுமை பண்பு காணப்படுகிறது. கார்பனின் பல்வேறு புற வேற்றுமை வடிவங்களை படிகங்கள் மற்றும் படிக வடிவமற்றவை என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

கிராபைட்டும், வைரமும் கார்பனின் இரு படிக புற வேற்றுமை வடிவங்களாகும்.

நிலக்கரி, அடுப்புக்கரி, மற்றும் விளக்குக் கரி ஆகியவை கார்பனின் படிகவடிவமற்ற புற வேற்றுமை வடிவங்கள் ஆகும்.

 கிராபைட் என்பது கருப்பான, மென்மையான மற்றும் வழவழப்பான கார்பனாகும்.

இயற்கையில் காணப்படும் அனைத்துப் பொருட்களிலும் மிகக் கடினமானது வைரமாகும்.

1985-ம் ஆண்டு பக்மினிஸ்டர் புல்லரீன் எனப்படும் கார்பனின் மற்றொரு வகை புற வேற்றுமை வடிவம் கண்டுபிடிக்கப்பட்டது.

அணுக்களின் அணைப்பு

அணுக்களின் அணைப்பு

ஹீலியத்தில் அணுக்களின் அமைப்பின்படி புரோட்டான்களின் எண்ணிக்கை 2, எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 2, நியூட்ரான்களின் எண்ணிக்கை 2, எல்க்ட்ரான் அமைப்பு (2) ஆகும்.

நியான் தனிமத்தில் புரோட்டான்களின் எண்ணிக்கை 10, எலக்ட்ரான் எண்ணிக்கை 10, நியூட்ரான் எண்ணிக்கை 10, எல்க்ட்ரான் அமைப்பு (2,8) ஆகும்.

சோடியத்தில் புரோட்டான்களின் எண்ணிக்கை 11, எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 11, நியூட்ரான்களின் எண்ணிக்கை 12, எலக்ட்ரான் அமைப்பு (2,8,1) ஆகும்.

குளோரினில் புரோட்டான் எண்ணிக்கை 17, எலக்ட்ரான் எண்ணிக்கை 17, நியூட்ரான் எண்ணிக்கை 18, எலக்ட்ரான் அமைப்பு (2,8,7) ஆகும்.

கதிரியக்கம்

கதிரியக்கம்

1896 ஆம் ஆண்டு ஹென்றி பெக்கோரல் என்பவர் யுரேனியத் தனிமத்திலிருந்து கதிரியக்கத்தை முதலாவதாகக் கண்டறிந்தார்.

கியூரி அம்மையார் கதிரியக்கத் தன்மை கொண்ட மேலும் இரு புதிய தனிமங்களைக் கண்டறிந்தார். அவை ரேடியம், பொலேனியம் ஆகும்.

தோரியமும் ஒரு கதிரியக்கத் தனிமமாகும்.

தற்போது செயற்கை கதிரியக்க தனிமங்கள் தயார்க்கப்பட்டுள்ளன.
கதிரியக்கத் தன்மையற்ற தனிமங்கள் கதிரியக்கத் தனிமங்களாக செயற்கை அணுக்கரு மாற்று முறையில் மாற்றப்படுகின்றன.

யுரேனியம், தோரியம், பொலேனியம், ரேடியம் ஆகியவை இயற்கையிலேயே கதிரியக்கத் தன்மையுள்ள தனிமங்களாகும்.

 வேதிவினைகள் அணுக்களின் உட்கருவுக்கு வெளியே நடைபெறும் மாற்றங்கள் ஆகும்.

கதிரியக்க வீச்சு என்பது அணுக்கருவிற்குள் ஏற்படும் மாற்றங்கள் ஆகும்.

கதிரியக்கத்தில் வெளியிடப்படும் மின்சுமை கொண்ட துகள்களின் பாதை மற்றும் தன்மையை ஆராய மேகப்பெட்டகம் முறை பயன்படுத்தப்பட்டது.

செயற்கை முறையில் தயார்க்கப்பட்ட கதிரியக்க ஐசோடோப்புகள் ரேடியோ நியூக்கிளியைடு அல்லது கதிரியக்க ஐசோடோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.

காமா கதிர்கள்

காமா கதிர்கள்

காமா கதிர்கள் ஆல்ஃபா, பீட்டா துகள்கள் போன்ற பொருண்மைத் துகள்கள் அல்ல. ஆனால், அவை மின்காந்த அலைகளாகும். அவற்றின் அலை நீளம் மிகச்சிறியது.

காமாக் கதிர்கள் கண்ணிற்குப் புலப்படாது. இவை காற்றினை அயனியாக்கும். இக்கதிர் நின்றொளிர்தலை உண்டாக்கும்.

இவை மின்காந்தக் கதிர்களானதால் மின் காந்தப் புலங்களால் பாதிக்கப்படுவதில்லை. படிகங்களால் இக்கதிரிகள் விளிம்பு விளைவு அடைகின்னறன.

எக்ஸ் கதிர்களை விட இவற்றின் ஊடுருவும் திறன் அதிகம். ஏனெனில், எக்ஸ் கதிர்களை விட இவற்றின் அலைநீளம் குறைவு.

காமா கதிர்களின் தாக்குதலால் உயிர் திசுக்கள் இறந்துவிடலாம். எனவே இவை ஆபத்தானவை.

காமாக் கதிர்களை வெளியிடும் கதிரியக்க தனிமத்தின் உட்கரு வேதிப்பண்புகளில் மாறுவதில்லை.

ஒரு ரேடியோ ஐசோடோப்பு கதிரியக்கத்தினால் அதன் தொடக்க நிறையில் இருந்து சரிபாதி நிறையாக மாறுவதற்கு ஆகும் காலம் அரை ஈயுட்காலம் எனப்படும்.

இதனைப் பயன்படுத்தி, பாறைகள், மரம் மற்றும் புவியில் கிடைக்கும் கரிமப் பொருட்களின் வயதினை ரேடியோ கார்பன் தேதியிடல் முறையில் கண்டறிகிறார்கள்.



கதிரியக்க வீச்சுகளை அறியப் பயன்படும் கருவிகள் எலக்ட்ரோ மீட்டர், மேகப்பெட்டகம், கெய்கர்-முல்லர் எண்ணி மற்றும் குறைகடத்தி மின்சுற்றுகள் ஆகியன.

பீட்டா கதிரியக்கம்

பீட்டா கதிரியக்கம்

பீட்டா கதிர்கள் பொருண்மைத் துகள்களாகும். அவை எல்க்ட்ரான்கள் ஆகும்.

காற்றை இக்கதிர்கள் மிதமான முறையில் அயனியாக்குகிறது. இதன் இயக்க எல்லை, அல்ஃபா கதிர்களைப் போன்று தெளிவாக வரையறுக்கப்படவில்லை.

இவை அதிக திசைவேகம் பெற்று இயங்குகின்றன. சில நேரங்களில் ஒளியின் திசைவேகத்தை ஒத்துள்ளன.

பீட்டா கதிர்கள் புகைப்படத் தாள்களைப் பாதிக்கின்றன. இவை மின்சுமை பெற்றிருப்பதால் மின் மற்றும் காந்தப் புலங்களால் விலக்கமடைகின்றன.

 இவை அயனியாக்கல் வினைக்கு ஆற்றலைச் செலவழிப்பதில்லை. எனவே, இவை ஆல்ஃபா துகள்களை விட காற்றில் அதிக தூரம் கடக்கவல்லவை.

 பீட்டா துகள்கள், அல்ஃபா துகள்களை விட 7000 மடங்கு இலேசானது. இவை நின்றொளிர்தல் நிகழ்வினைச் செய்கின்றன.