Monday, 30 December 2013

தனிமங்களின் சமான நிறை

தனிமங்களின் சமான நிறை 

தனிமங்களின் சமான நிறை ஹைட்ரஜன் இடப்பெயர்ச்சி முறை, ஆக்சைடு முறை, குளோரைடு முறை, உலோக ிடப்பெயர்ச்சி முறை போன்றவற்றின் மூலம் கண்டறியப்படுகிறது.


ஹைட்ரஜன் இடப்பெயர்ச்சி முறை 

நீர்த்த அமிலங்களுடன் வினைபுரிந்து ஹைட்ரஜனை இடப்பெயர்ச்சி செய்யும் உலோகங்களாகிய மக்னீசியம், துத்தநாகம் மற்றும் அலுமினியம் போன்ற தனிமங்களின் சமான எடைகளைக் கண்டறிய ஹைட்ரஜன் இடப்பெயர்ச்சி முறை பயன்படுகிறது.

குளோரைட் இடப்பெயர்ச்சி முறை 

குளோரைடுகளை எளிதாகத் தரக்கூடிய தனிமங்களின் சமான நிறை குளோரைடுகள் முறையில் கண்டறியப்படுகிறது.


திங்கள்கிழமை


Sunday, 29 December 2013

மோலாரிட்டி

மோலாரிட்டி

ஒரு லிட்டர் கரைசலில் கரைந்துள்ள கரைபொருளின் கிராம் மோல்களின் எண்ணிக்கையே கரைசலின் மோலாரிட்டி ஆகும்.


மோல் எண்ணிக்கை

 ஒரு கரைசலின் மோலாலிட்டி (m) என்பது 1000 கிராம் கரைப்பானில் கரைந்துள்ள கரைபொருளின் மோல் எண்ணிக்கை ஆகும்.

மோல் பின்னம்

ஒரு கரைசலில் காணும் ஒரு கூறின் மோல் எண்ணிக்கைக்கும், கரைசலில் காணும் மொத்த கூறுகளின் எண்ணிக்கைக்கும் உள்ள விகிதமே கரைசலின் மோல் பின்னமாகும்.

ஒரு நீர்க்கரைசலில் 3 கிராம் யூரியா 250 கிராம் நீரில் கரைந்துள்ளது எனில் கரைசலின் மோலாலிட்டி 0.2 m ஆகும்.


நார்மாலிட்டி

நார்மாலிட்டி

ஒரு கரைசலின் நார்மாலிட்டி என்பது ஒரு லிட்டர் கரைசலில் கரைந்துள்ள கரைபொருளின் கிராம் சமான நிறை ஆகும். இச்செறிவு N என்ற அலகால் குறிக்கப்படுகிறது.


ஞாயிற்றுக்கிழமை


Saturday, 28 December 2013

விக்டர் மேயர் முறை

விக்டர் மேயர் முறை
விக்டர் மேயர் முறையில் எளிதில் ஆவியாகக் கூடிய சேர்மத்தின் மூலக்கூறு நிறையைக் கணக்கிடலாம்.

ஒட்சிசனேற்ற எண் அல்லது ஒட்சிசன்னேற்ற நிலை

ஒட்சிசனேற்ற எண் அல்லது ஒட்சிசன்னேற்ற நிலை

ஒரு மூலக்கூறில், பிற எல்லா அணுக்களும் அயனிகளாக வெளியேறிய பின் அணுவின் மீதுள்ள எஞ்சிய மின்னூட்டமே தனிமத்தின் ஒட்சிசனேற்ற எண் ஆகும்.

எல்லா சேர்மங்கலிலும் ஃப்ளோரினின் ஒட்சிசனேற்ற எண் - 1 ஆக அமைகிறது. பொதுவாக எல்லா சேர்மங்களிலும் ஹைட்ரஜனி ன் ஒட்சிசனேற்ற எண் +1 ஆகும்.

எல்லா சேர்மங்களிலும் ஒட்சிசனின் ஒட்சிசனேற்ற எண் -2 ஆகும். எனினும் H2O2, BaO2, Na2O2 போன்ற பெர்ஒட்சைடுகளி ல் ஒட்சிசனின் ஒட்சிசனேற்ற எண் -1 ஆகும்.

 உலோக ஹைட்ரைடுகளில்ல ஹைட்ரஜனின் ஒட்சிசனேற்ற எண் -1 ஆகும்.

Cr2O72-யில் காணும் குரோமியத்தின்  ஒட்சிசனேற்ற எண் +6 ஆகும்.

ஒரு இரசாயன வினையில் ஒரு தனிமத்தின் ஒட்சிசனேற்ற எண் அதிகரித்தால் அது ஒட்சிசனேற்றம் ஆகும். 

ஒரு இரசாயன வினையில் ஒரு தனிமத்தின் ஒட்சிசனேற்ற எண் குறைந்தால் அது ஆக்சிஜன் ஒடுக்கமாகும்.

MnO2 + 4HCl --> MnCl2 + Cl2 + 2H2O

மேற்கூறிய வினையில் மாங்கனீசு + 4ல் இருந்து, +2 ஒட்சிசனேற்ற எண்ணாக குறைகிறது. எனவே MnO2 ஒடுக்கத்திற்கு உட்படுவதால் இது ஒரு ஒட்சிசனேற்றி ஆகும். 

HCl ல் உள்ள குளோரினின் ஒட்சிசனேற்ற எண் -1லிருந்து பூச்சியத்திற்கு உயர்கிறது. எனவே ஒட்சிசனேற்றம் பெறுவதால் இது ஒரு ஒடுக்கியாகும்.