Wednesday 30 November 2011

நவீன ஆவர்த்தன விதி

நவீன ஆவர்த்தன விதி

 1912-ல் மோஸ்லே என்ற அறிவியலறிஞர் 
தனிமங்களின் இயற்பியல் மற்றும்  
வேதியியல் பண்புகள் அணு எண்களின் 
அடிப்படையில் அமைந்துள்ளன 
என்று அறிந்தார்.

இதன் அடிப்படையில் நவீன ஆவர்த்தன
 விதி உருவானது. 

இவ்விதிப்படி தனிமங்களின் இயற்பியல் 
மற்றும் வேதிப் பண்புகள் அத்
தனிமங்களின் அணு எண்களுக்கு ஏற்ப 
ஆவர்த்தன முறையில் மாற்றமடைகின்றன.

தனிமங்களை அவற்றின் அணு எண்களின் 
ஏறுவரிசையி்ல் அமைத்தால்
 ஒத்த பண்புகளையுடைய தனிமங்கள் 
சீரான இடைவெளிக்குப் பின் அமைகின்றன.

 இதுவே ஆவர்த்தனத் தன்மை எனப்படுகிறது.

அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட
 தனிம வரிசை அட்டவணை நீள் வரிசை 
அட்டவணை ஆகும்.

தனிமங்கள் அவற்றின் எலக்ட்ரான் 
அமைப்பின் அடிப்படையில் 1. மந்தவாயு 
தனிமங்கள் 2. பிரதிநிதித்துவ தனிமங்கள்
 3. இடைநிலைத் தனிமங்கள் 4. உள் 
இடைநிலைத் தனிமங்கள் என 
வகைப்படுத்தப்பட்டுள்ளன.

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Saturday 5 November 2011