Saturday 31 August 2013

கார உலோகங்கள்





கார உலோகங்கள்

கார உலோகங்கள் பளபளப்பானவை, வெண்ணிற மானவை, மிருதுவானவே. அனைத்து கார உலோகங்களும் +1 ஆக்சிஜனேற்ற நிளையைப் பெற்றுள்ளன. ஏனெனில் அவை வெளிக்கூட்டில் உள்ள ஒற்றை எலக்ட்ரானை எளிதாக இழக்கின்றன.

கார உலோகத் தொகுதியின் இறுதியில் உள்ள பிரான்சியம் கதிரியக்கத் தனிமமாகும்.

கார உலோகங்கள் புன்சன் சுடரில் குறிப்பிட்ட நிறத்தை அளிக்கின்றன. லித்தியம் அடர்சிவப்பு நிறத்தையும், சோடியம் மஞ்சள் நிறத்தையும். ரூபிடியம், சீசியம் ஆகியவைஊதா நிறத்தையும் தருகின்றன.

எல்லா கார உலோகங்களும் திண்ம நிலையில் வலுக்குறைந்த பிணைப்பைப் பெற்றிருப்பதால் குறைவான உருகுநிலையும், கொதிநிலையும் பெற்றுள்ளன.

கார உலோகங்களை கத்தியால் வெட்ட இயலும். கார உலோகங்கள் வீரியம் மிகுந்தவை. எனவே இயற்கையில் சேர்மங்களாக மட்டுமே காணப்படுகின்றன.

 கார உலோகத் தொகுதியில் லித்தியத்திலிருந்து சீசியத்திற்கு கீழ்நோக்கிச் செல்லும்போது அணுப்பருமன் அதிகரிக்கிறது. இதே காரணத்தால் அணு ஆரமும், அயனி ஆரமும் படிப்படியாக உயருகின்றன.

கார உலோகங்களின் அயனியாக்கும் ஆற்றல் மற்றவைகளை விடக் குறைவு. கார உலோகங்கள் ஒரு இணைத்திறன் எலக்ட்ரான்களை இழந்து ஒடுக்க வினைகளைத்தருகின்றன. எனவே இவை சிறந்த ஒடுக்கிகளாகச் செயல்படுகின்ரன.

கார உலோகங்களின் வினைதிறன் லித்தியத்திலிருந்து சீசியம் வரை கீழே செல்லும்போது அதிகரிக்கிறது.

சோடியம் டெளன் முறையின் மூலம் பிரித்தெடுக்கப்படுகிறது. சோடியம் லேசான உலோகக் கலவை தயாரிப்பிலும் சில அரிய மண் உலோகங்களை அதன்ஆக்சைடுகளிலிருந்து தயாரிக்கும்போதும் ஆக்சிஜன் நீக்கியாகப் பயன்படுகிறது.

ஐசோப்ரினை பலபடியாக்கி செயற்கை இரப்பர் தயாரிப்பில் சோடியம் வினையூக்கியாகப் பயன்படுகிறது.


சனிக்கிழமை


Thursday 29 August 2013

எலக்ட்ரான் நாட்டம்

எலக்ட்ரான் நாட்டம்

வாயு நிலையில் உள்ள நடுநிலை அணுவிற்கு ஒரு எலக்ட்ரானை சேர்த்து எதிர்மின்சுமையுடைய அயனியை உருவாக்கும்போது வெளியிடப்படும் ஆற்றலே எலக்ட்ரான் நாட்டம் அல்லது எலக்ட்ரான் கவர் என்தால்பி எனப்படும்.

ஒரு தொகுதியில் கீழிறங்கும்போது எலக்ட்ரான் கவர் ஆற்றலின் மதிப்புக்கள் குறைந்து கொண்டே வருகிறது.

எலக்ட்ரான் கவர் என்தால்பி மதிப்புக்களில் எதிர்பார்த்தது போல அல்லாமல் ஃப்ளூரினின் எலக்ட்ரான் கவர் என்தால்பியானது குளோரினை விட குறைவாக உள்ளது.

எலக்ட்ரான் கவர் என்தால்பி ஒரு வரிசையில் இடமிருந்து வலமாகச் செல்லும்போது அதிகரிக்கும்.

அணுக்கருவின் மின்சுமை அதிகரிப்பதால் எலக்ட்ரான் கவர்ச்சி விசையும் அதிகரிப்பதே இதற்குக் காரணமாகும்.

 எலக்ட்ரான் நாட்டத்தின் எண் மதிப்பை பாதிக்கும் காரணிகள் 1. அணுவின் உருவளவு 2. பயனுடைய அணுக்கரு மின்சுமை 3. உள் எலக்ட்ரான்களின் மறைத்தல் விளைவு ஆகியன.


வியாழக்கிழமை


Wednesday 28 August 2013

அணு அமைப்பு

அணு அமைப்பு

டால்டனின் அணுக்கொள்கையின்படி பருப்பொருட்கள் மிக நுண்ணிய துகள்களால் ஆனவை. அணுக்கள் பிளக்க முடியாதவை. 

வேதிவினையின்போது அணுக்களை ஆக்கவோ அழிக்கவோ முடியாது.

ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும் அளவு, வடிவம், நிறை, அமைப்பு ஆகியவற்றில் ஒத்திருக்கின்றன. வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் வெவ்வேறானவை.

கதிரியக்கத்தின் கண்டிபிடிப்பு அணுக்களைப் பிளக்க முடியும் என்பதைத் தெளிவாக்கியது. உட்கரு வினையில் அணுக்கள் தோற்றுவிக்கப்படுகின்றன அல்லது அழிக்கப்படுகின்றன.

ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும் அனைத்துப் பண்புகளிலும் ஒத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மேற்கூறிய அனைத்துப் பண்புகளையும் டால்டனின் கொள்கையால் விளக்க முடியவில்லை.


புதன்கிழமை


Saturday 24 August 2013

நடுநிலையாக்கல்

நடுநிலையாக்கல் 

ஒரு அமிலத்திற்கும், காரத்திற்குமிடையேயான நடுநிலையாக்கல் வினையில் இடப்பெயர்ச்சி செய்யப்பட வேண்டிய ஹைட்ரஜன் மற்றும் ஹைட்ராக்சில் அயனிகளில் சில இடப்பெயர்ச்சி அடையாமல் இருந்தால் அவ்வினை பகுதியளவு நடுநிலையாக்கல் எனப்படும்.


இவ்வகை வினையில் கிடைக்கும் விளை பொருட்கள் அமில அல்லது கார உப்புக்களாக இருக்கும்.

ஒரு அமிலத்தை ஒரு காரத்தால் பகுதியளவு நடுநிலையாக்கல் செய்யும்போது அமில உப்புக் கிடைக்கும். அமில உப்பில் குறைந்த அளவு ஒரு ஹைட்ரஜன் அயனியாவது காணப்படும்.

 சோடியம் ஹைட்ரஜன் பொஸ்பேட் , சோடியம் பைசல்பேட் போன்ற உப்புக்கள் அமில உப்புக்களுக்கு பிற எடுத்துக்காட்டுகள் ஆகும்.

ஒரு காரத்தை அமிலத்தால் பகுதி அளவு நடுநிலையாக்குமேபோதும் கார உப்பு கிடைக்கும் கார உப்புக்களில் குறைந்தது ஒரு ஹைட்ராக்சைடு அயனியாவது காணப்படும்.

சோடியம் குளோரைடு உணவுப் பொருட்கள் தயார் செய்யவும். ஊறுகாய், மீன், இறைச்சி, காய்கறி போன்றவை கெடமால் பாதுகாக்கவும் பயன்படுகிறது.

ரொட்டிச் சோடா, ரொட்டி மற்றும் கேக்குகள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

சலவைச் சோடா துணிகளை சலவை செய்யப் பயன்படுகிறது. 

சலவைத் தூள் துணிகள் மற்றும் தண்ணீரை சுத்தம் செய்யப் பயன்படுகிறது.

கல்சியம் கார்பனேட் சுண்ணாம்புக் கட்டி செய்யப் பயன்படுகிறது.

பொட்டாஷ் படிகாரம், நீரில் உள்ள மாசுகளை விரைவாக வீழ்படியச் செய்து நீரைத் தூய்மையாக்குகிறது.

சோடியம் பென்சோயேட் உணவு கெடாமல் பாதுகாக்கும் பொருளாகப் பயன்படுகிறது. சில்வர் நைட்ரேட் முடிச்சாயம் தயாரிக்கப் பயன்படுகிறது.

அம்மோனியம் குளோரைடு, அம்மோனியம் சல்பேட், கல்சியம் சூப்பர் பொ ஸ்பேட் ஆகியவை உரங்களாகப் பயன்படுகின்றன.

NPK (நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம்) வகை உரங்களில் அம்மோனியம் நைட்ரேட், அம்மோனியம் சல்பேட், அம்மோனியம் பாஸ்பேட், பொட்டாசியம் குளோரைடு உப்புக்கள் அடங்கியுள்ளன.

காப்பர் சல்பேட் உப்பு காளான் கொல்லியாகப் பயன்படுகிறது. நைட்டர் (பொட்டாசியம் நைட்ரேட்) ஒரு உரமாகப் பயன்படுகிறது.

பாரிஸ் சாந்து (Plaster of Paris) எலும்பு முறிவு சிகிச்சையில் பயன்படுகிறது. 

எப்சம் உப்பு மலச்சிக்கலைத் தீர்க்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

முகரும் உப்பு சளித்தொல்லைகளிலிருந்து விடுபெறப் பயன்படுகிறது. ரொட்டிச் சோடா வயிற்றில் அமிலத் தன்மையைக் குறைக்கும் 

ஆன்டாசிட் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகிறது.

சில்வர் நைட்ரேட், சில்வர் புரோமைடு, சோடியம் தயோ சல்பேட் (ஹைப்போ) ஆகியவை புகைப்படத் தொழிலில் பயன்படுகின்றன.

பொட்டாசியம் நைட்ரேட் பட்டாசுகள் தயாரிக்கவும், சோடியம் நைட்ரேட் துப்பாக்கித் தூள் மற்றும் பட்டாசுகள் செய்யவும், பொட்டாஷ் படிகாரம் தோல் பதனிடுதலிலும், காகிதங்களின் தரத்தை உயர்த்தவும், நிறமூன்றியாகவும் பயன்படுகிறது.

பொட்டாசியம் குளோரேட் தீப்பெட்டித் தொழிற் சாலைகளில் பயன்படுகிறது. காப்பர் சல்பேட் சாயத்தொழிலிலும், அச்சுத் தொழிலிலுலம், முலாம் பூசுதலிலும் பயன்படுகிறது.

சனிக்கிழமை