Monday 25 November 2013

விகித வாய்பாடு

விகித வாய்பாடு

ஒரு சேர்மத்தின் விகித வாய்பாடு அல்லது முற்றுப் பெறாத வாய்பாடு என்பது அச்சேர்மத்தின் ஒருமூலக்கூறில் அடங்கியுள்ள பல்வேறு தனிமங்Kளின் அணுக்களின் எண்ணிக்கையின் சுருக்கிய விகிதமாகும்.

திங்கள்கிழமை


Sunday 24 November 2013

மோல் கொள்கை

மோல் கொள்கை

கார்பன் 12 ஐசோடோப்பில், 12 கிராம் நிறையில் காணப்படும் கார்பன் அணுக்களின் எண்ணிக்கைக்கு சமமான அளவு ஆதாரத் துகள்களைக் கொண்டுள்ள பொருளின் நிறைவே மோல் எனப்படும்.

மோலார் நிறை

ஒரு மோல் பொருளி்ன் நிறையே அதன் மோலார் நிறை ஆகும்.


ஞாயிற்றுக்கிழமை


Saturday 23 November 2013

சனிக்கிழமை


அவகோட்ரோ எண்

அவகோட்ரோ எண்

12 கிராம் கார்பனில் காணும் அணுக்களின் எண்ணிக்கையே அவகோட்ரோ எண்ணாகும்.

அவகோட்ரோ எண்ணின் மதிப்பு 6.023 X 1023

Friday 22 November 2013

உலோகங்கள் அலோகங்கள்-3

தங்கம், பிளாட்டினம் போன்ற சில உலோகங்கள் மட்டுமே தனிம நிலையில் காணப்படுகின்றன.

நைட்ரஜன், ஹைட்ரஜன், கார்பன் மற்றும் சல்பர் போன்ற அலோகங்கள் தனித்த நிலையிலும், சேர்மங்களாகவும் காணப்படுகின்றன. பெரும்பாலான பிற அலோகங்கள் இணைந்த நிலையில் சேர்மங்களாகவே காணப்படுகின்றன.

அடர்த்தி

அடர்த்தி

ஒரு பொருளின் அடர்த்தி என்பது ஒரு குறிப்பிட்ட அலகு பருமனில் காணும் அதன் நிறையாகும். 

அடர்த்தி = நிறை/ பருமன்

அடர்த்தி எண்

ஒரு பொருளின் அடர்த்திக்கும் சம கன அளவு நீரின் அடர்த்திக்கும் உள்ள விகிதமே ஒப்படர்த்தி அல்லது அடர்த்தி எண் ஆகும். இது ஒர் அலகற்ற அளவாகும்.

எண் மதிப்பில் இது பொருளின் அடர்த்திக்குச் சமமாகும்.
மூலக்கூறு வாய்பாட்டு எடை

ஒரு சேர்மத்தின் மூலக்கூறு வாய்பாட்டில் காணும் அனைத்து அணுக்களின் அணு நிறைகளின் கூட்டுத் தொகையே அச்சேர்மத்தின் மூலக்கூறு வாய்பாட்டு எடை ஆகும்.

NaClன் வாய்பாட்டு எடை 58.44 amu ஆகும்.

உலோகங்கள் அலோகங்கள்-2

உலோகங்கள் பொதுவாகக் கடினமானவை. அவற்றை எளிதில் தகடாகவும், கம்பியாகவும் மாற்றலாம். பளபளப்பான தோற்றமுடையவை மற்றும் எளிதில் வெப்பத்தையும் மின்சாரத்தையும் கடத்தக்கூடியவை.

அலோகங்கள் பொதுவாக நொருங்கும் தன்மை உடையவை, பளபளப்பற்றவை மற்றும் மின்சாரத்தையும் வெப்பத்தையும் கடத்தாதவை.

இயற்கையில் பெரும்பாலான உலோகங்கள் அவற்றின் சேர்மங்களாகக் கிடைக்கின்றன.

இரசாயனவியல்,

இரசாயனவியல் (வேதியியல்) கணக்கீடுகள்

1799ம் ஆண்டில் மெட்ரிக் முறை முதன் முதலில் பிரான்ஸ் நாட்டில் பயன்படுத்தப்பட்டது. இறுதியில் 1960ம் ஆண்டு நடைபெற்ற எடைகள் மற்றும் அளவீடுகள் பொது மாநாட்டில் மெட்ரிக் முறையை மாற்றி அமைத்து ஒரு புதுமுறை உருவாக்கப்பட்டது.

இம்முறையே பன்னாட்டு அலகு முறை (S.I) அல்லது திருத்திய மெட்ரிக் முறை என அழைக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை


Thursday 21 November 2013

உலோகங்கள் ,அலோகங்கள்



தனிமங்களை விரிவாக உலோகங்கள் என்றும் அலோகங்கள் என்றும் வகைப்படுத்தலாம். இயற்கையில் 92 தனிமங்கள் உலோகங்களாகவும், 20 தனிமங்கள் அலோகங்களாகவும் உள்ளன.

 தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு மற்றும் சோடியம் போன்ற தனிமங்கள் உலோகங்கள் ஆகும். கார்பன், சல்பர், குளோரின் ஆக்சிஜன் மறஅறும் ஹீலியம் போன்ற தனிமங்கள் அலோகங்கள் ஆகும்.

தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு மற்றும் சோடியம் போன்ற தனிமங்கள் உலோகங்கள் ஆகும். கார்பன், சல்பர், குளோரின் ஆக்சிஜன் மற்றும் ஹீலியம் போன்ற தனிமங்கள் அலோகங்கல் ஆகும்.

வியாழக்கிழமை