Thursday 2 January 2014

கதிரியக்கத்தின் பயன்கள்

கதிரியக்கத்தின் பயன்கள்

கதிரியக்க கோபால்ட் Co-60, U-238 ஆகியவை புற்றுநோய் மற்றும் கட்டுகளைக் குணப்படுத்தும் சிகிச்சையில் பயன்படுகின்றன.

கதிரியக்க அயோடின் (I-123) தைராய்டு புற்று நோய் சிகிச்சைக்குப் பயன்படுகிறது.

பால்பரஸ்-32 அல்லது ஸ்ட்ரான்சியம்-90 ஆகியவை தோல் புற்றுநமோயைக் குணப்படுத்துகிறது.

மருத்துவக் கருவிகளில் உள்ள கிருமிகளை நீக்கக் கதிர்வீச்சுப் பயன்படுகிறது.

டிரிட்டியம், கார்பன்-14 போன்றவை உயிரியல் மூலக்கூறுகளைக் கண்டறியப் பயன்படுகிறது.

காமா, பீட்டா கதிர்கள் ஆலைகளிலுள்ள நிரப்பப் பட்டுள்ள கொள்கலனில் பொருட்களின் நிரம்பிய அளவினைக் காட்டப் பயன்படுகிறது.

கதிரியக்கத் தனமையுள்ள அயர்ன் (Fe-59)-ஐப் பயன்படுத்தி இரத்த சோகை நோயைக் குணப்படுத்தலாம்.

கதிரியக்க பாஸ்பரஸ் (P-32) உரங்களுடன் சேர்க்கபட்டு வளரும் தாவரங்கள் உரத்தை எவ்வளவு கிரகித்துக் கொள்கிறது என அறியப்பயன்படுகிறது.

ரேடியோ ஐசோடோப்பிலிருந்து வெளிவரும் கதிரியக்கத்தைப் பயன்படுத்தி உயர் விளைச்சல் தரும் புதிய ரக நெல், கோதுமை ஆகியவை உருவாக்கப் படுகின்றன.

காமா கதிர்களைப் பயன்படுத்தி அணு உட்கருவின் அமைப்பு மற்றும் பண்பை  அறியமுடிகிறது. பொருட்களின் அமைப்பு வாய்ப்பாட்டை கண்டறிய கதிர்வீச்சுகள் உதவுகின்றன.

கதிரயக்க அயோடினைப் பயன்படுத்தி கரைசல்களில் தங்கியிருக்கும் மிகச்சிறிய அளவு சில்வர் கசடுகளையும் கண்டுபிடிக்க முடியும்.

நியூட்ரான் கிளர்வு ஆய்வு மூலம் ஆர்சனிக் நச்சுத் தன்மையைக் கண்டறிவதில் கதிரியக்க ஐசோடோப்புகள் பயன்படுகின்றன.

ரேடியோ ஐசோடோப்புகள் குழாய்களில் ஏற்படும் கசிவினைக் கண்டறியப் பயன்படுகின்றன.

உலோகங்களின் தடிமன் மற்றும் தாளின் தடிமன் ஆகியவற்றை அறிய காமா கதிர் பயன்படுகிறது.

காமா, பீட்டா கதிர்கள் ஆலைகளிலுள்ள நிரப்பப் பட்டுள்ள கொள்கலனில் பொருட்களின் நிரம்பிய அளவினைக் காட்டப் பயன்படுகின்றன.

தொல்பொருள் மற்றும் பழம்பொருட்களின் வயதை அறிய C-14 ஐசோடோப்பு  பயன்படுகிறது. கதிரியக்க கார்பனின் அரை ஆயுட்காலம் 5730 ஆண்டுகள் இக்கதிரியக்கத்தைக் கொண்டு பாறைகள் மற்றும் படிவங்களின் வயதினைத் தீர்மானிக்கலாம்.

இம்முறையில் ககண்டுபிடிக்கப்பட்ட உலகிலேயே மிகப்பழமையான பாறை வட கனடாவில் உள்ளது. இது 3.96 X 10p வருடங்கள் பழமையானது.

காமாக் கதிர் வீச்சு பாக்டீரியாவை அழிக்கப் பயன்படுகிறது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.