Wednesday 1 January 2014

மெண்டலீஃபின் தனிம வரிசை அட்டவணை

மெண்டலீஃபின் தனிம வரிசை அட்டவணை

 மெண்டலீஃப் அறிமுகப்படுத்திய தனிமங்களை வகைப் படுத்தும் முறையானது ஆவர்த்தன விதி எனப்படும். இவ்விதிப்படி தனிமங்களின் பண்புகளானது அவற்றின் அணு நிறைகளின் சார்பாக இருக்கும்.

மெண்டலீஃப் தனிம வரிசை அட்டவணை பற்றிய விவரம் பின்வருமாறு:

தனிம வரிசை அட்டவணையில் செங்குத்தாக அமைந்துள்ள பத்திகள் தொகுதிகள் என அழைக்கப்பட்டன. இவை I முதல் VIII மற்றும் 0 எனக் குறிக்கப்பட்டன. பூஜ்ஜியத் தொகுதி தனிமங்கள் மெண்டலீஃப் காலத்தில் கண்டறியப்படவில்லை.

தனிம வரிசை அட்டவணையில் கிடை மட்டத்தில் உள்ளவை வரிசைகள் எனப்படும். இவை 1 முதல் 7 என்ற எண்களால் குறிக்கப்படுகின்றன.

முதல் விரிசையில் 2 தனிமங்கள், 2 மற்றும் 3 வது வரிசையில் 8 தனிமங்கள், 4 மற்றும் 5ம் வரிசைகளில் 18 தனிமங்கள் உள்ளன.

6வது வரிசையில் 32 தனிமங்கள் உள்ளன. 7வது வரிசை முற்றுப்பெறாமல் 19 தனிமங்களைப் பெற்றுள்ளன.

1913ல் ஆங்கிலேய இயற்பியல் வல்லுநர் ஹென்றி மோஸ்லி என்பவர் ஒரு தனிமத்தின் அணு எண்ணானது அணு நிறையை விட முக்கியமான அடிப்படைப் பண்பு என்பதைக் கண்டறிந்தார்.

இதன் விளைவாக புதிய ஆவர்த்தன விதிப்படி தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் அணு எண்களை அடிப்படையாகக் கொண்டதாகும். இதுவே புதிய ஆவர்த்தன விதியாகும்.


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.