Wednesday 1 January 2014

ஆல்ஃபா தத்துவம்

ஆல்ஃபா தத்துவம்

தாழ்நிலையில் இருக்கும் அணுக்களில் எலக்ட்ரான்கள் ஆர்பிட்டால்களின் ஆற்றலைப் பொறுத்து ஏறுமுக வரிசையில் நிரம்பும்.

அதாவது எலக்ட்ரான்கள் முதலில் ஆற்றல் மிக்ககுறைந்த ஆர்பிட்டால்களில் நிரம்பிய பின்னர் அதர்கு அடுத்த அதிக ஆற்றலை உடைய ஆர்பிட்டால்களுக்குச் செல்லும். அந்த ஆர்பிட்டால்களில் எல்க்ட்ரான்கள் நிரப்புதல் ஏறுமுக வரிசையில் அமையும்.

தனிமத்தின் வேதிப்பண்புகள் வெளிக்கூட்டில் காணும் எண்ணிக்கை மற்றும் அவற்றின் அமைப்பைப் பொறுத்து அமைகின்றன.

 ஒரே மாதிரி வெளிக்கூட்டு எலக்ட்ரான் அமைப்பைப் பெற்றுள்ள தனிமங்கள் பல தொகுதிகளாகப் பிரிகிகப்ப்டடுள்ளன. எனவே ஒரே தொகுதியில் உள்ள தனிமங்களின் வேதியில் மற்றும் இயற்பியல் பண்புகள் ஒத்திருக்கும்.

எனவே தனித்தனியாக ஒவ்வொரு தனிமத்தின் பண்புகளை அறிவதற்குப் பதிலாக ஒவ்வொரு தொகுதியின் அறிந்தால் மட்டுமே போதுமானது.

வெளிக்கூட்டில் ஒரு s எலக்ட்ரான் உடைய தனிமங்கள் 1ம் தொகுதி என்றும், இரு s எலக்ட்ரான்கள் வெளிக்கூட்டில் அமையப்பெற்ற தனிமங்களின் 2ம் தொகுதி காரமண் உலோகங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவ்விரு தொகுதிகளும் s தொகுதி தனிமங்கள் என அழைக்கப்படுகின்றன.

தனிமங்கள் தங்களின் வெளிக்கூட்டில் 3 எலக்ட்ரான்கள் அதாவது இரு s  எலக்ட்ரான்கள் மற்றும் ஒரு p எலக்ட்ரான்கள் அமைப்பினைப் பெற்ற தனிமங்களின் தொகுதி 13ம் தொகுதி என அழைக்கப்படுகிறது.

 13, 14, 15, 16, 17, 18ம் தொகுதித் தனிமங்களில் s ஆர்பிட்டால்கள் நிரம்பிய நிலையிலும் இருப்பதால் இத்தனிமங்களின் பண்புகள் p ஆர்பிட்டால் எல்க்ட்ரான்களைப் பொருத்து அமைகிறது. இத்தொகுதிகள் இணைந்து p தொகுதி தனிமங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இதே போன்று d ஆக்பிட்டால்களை நிரப்பும் தன்மையுடைய தனிமங்கள் d தொகுதி தனிமங்கள் அல்லது இடைநிலைத் தனிமங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

f  ஆர்பிட்டால்களில் எலக்ட்ரான் நிரவுதல் செய்யும் தனிமங்கள் f தொகுதி தனிமங்கள் என அழைக்கப்படுகின்றன.


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.