Monday 30 December 2013

தனிமங்களின் சமான நிறை

தனிமங்களின் சமான நிறை 

தனிமங்களின் சமான நிறை ஹைட்ரஜன் இடப்பெயர்ச்சி முறை, ஆக்சைடு முறை, குளோரைடு முறை, உலோக ிடப்பெயர்ச்சி முறை போன்றவற்றின் மூலம் கண்டறியப்படுகிறது.


ஹைட்ரஜன் இடப்பெயர்ச்சி முறை 

நீர்த்த அமிலங்களுடன் வினைபுரிந்து ஹைட்ரஜனை இடப்பெயர்ச்சி செய்யும் உலோகங்களாகிய மக்னீசியம், துத்தநாகம் மற்றும் அலுமினியம் போன்ற தனிமங்களின் சமான எடைகளைக் கண்டறிய ஹைட்ரஜன் இடப்பெயர்ச்சி முறை பயன்படுகிறது.

குளோரைட் இடப்பெயர்ச்சி முறை 

குளோரைடுகளை எளிதாகத் தரக்கூடிய தனிமங்களின் சமான நிறை குளோரைடுகள் முறையில் கண்டறியப்படுகிறது.


திங்கள்கிழமை


Sunday 29 December 2013

மோலாரிட்டி

மோலாரிட்டி

ஒரு லிட்டர் கரைசலில் கரைந்துள்ள கரைபொருளின் கிராம் மோல்களின் எண்ணிக்கையே கரைசலின் மோலாரிட்டி ஆகும்.


மோல் எண்ணிக்கை

 ஒரு கரைசலின் மோலாலிட்டி (m) என்பது 1000 கிராம் கரைப்பானில் கரைந்துள்ள கரைபொருளின் மோல் எண்ணிக்கை ஆகும்.

மோல் பின்னம்

ஒரு கரைசலில் காணும் ஒரு கூறின் மோல் எண்ணிக்கைக்கும், கரைசலில் காணும் மொத்த கூறுகளின் எண்ணிக்கைக்கும் உள்ள விகிதமே கரைசலின் மோல் பின்னமாகும்.

ஒரு நீர்க்கரைசலில் 3 கிராம் யூரியா 250 கிராம் நீரில் கரைந்துள்ளது எனில் கரைசலின் மோலாலிட்டி 0.2 m ஆகும்.


நார்மாலிட்டி

நார்மாலிட்டி

ஒரு கரைசலின் நார்மாலிட்டி என்பது ஒரு லிட்டர் கரைசலில் கரைந்துள்ள கரைபொருளின் கிராம் சமான நிறை ஆகும். இச்செறிவு N என்ற அலகால் குறிக்கப்படுகிறது.


ஞாயிற்றுக்கிழமை


Saturday 28 December 2013

விக்டர் மேயர் முறை

விக்டர் மேயர் முறை
விக்டர் மேயர் முறையில் எளிதில் ஆவியாகக் கூடிய சேர்மத்தின் மூலக்கூறு நிறையைக் கணக்கிடலாம்.

ஒட்சிசனேற்ற எண் அல்லது ஒட்சிசன்னேற்ற நிலை

ஒட்சிசனேற்ற எண் அல்லது ஒட்சிசன்னேற்ற நிலை

ஒரு மூலக்கூறில், பிற எல்லா அணுக்களும் அயனிகளாக வெளியேறிய பின் அணுவின் மீதுள்ள எஞ்சிய மின்னூட்டமே தனிமத்தின் ஒட்சிசனேற்ற எண் ஆகும்.

எல்லா சேர்மங்கலிலும் ஃப்ளோரினின் ஒட்சிசனேற்ற எண் - 1 ஆக அமைகிறது. பொதுவாக எல்லா சேர்மங்களிலும் ஹைட்ரஜனி ன் ஒட்சிசனேற்ற எண் +1 ஆகும்.

எல்லா சேர்மங்களிலும் ஒட்சிசனின் ஒட்சிசனேற்ற எண் -2 ஆகும். எனினும் H2O2, BaO2, Na2O2 போன்ற பெர்ஒட்சைடுகளி ல் ஒட்சிசனின் ஒட்சிசனேற்ற எண் -1 ஆகும்.

 உலோக ஹைட்ரைடுகளில்ல ஹைட்ரஜனின் ஒட்சிசனேற்ற எண் -1 ஆகும்.

Cr2O72-யில் காணும் குரோமியத்தின்  ஒட்சிசனேற்ற எண் +6 ஆகும்.

ஒரு இரசாயன வினையில் ஒரு தனிமத்தின் ஒட்சிசனேற்ற எண் அதிகரித்தால் அது ஒட்சிசனேற்றம் ஆகும். 

ஒரு இரசாயன வினையில் ஒரு தனிமத்தின் ஒட்சிசனேற்ற எண் குறைந்தால் அது ஆக்சிஜன் ஒடுக்கமாகும்.

MnO2 + 4HCl --> MnCl2 + Cl2 + 2H2O

மேற்கூறிய வினையில் மாங்கனீசு + 4ல் இருந்து, +2 ஒட்சிசனேற்ற எண்ணாக குறைகிறது. எனவே MnO2 ஒடுக்கத்திற்கு உட்படுவதால் இது ஒரு ஒட்சிசனேற்றி ஆகும். 

HCl ல் உள்ள குளோரினின் ஒட்சிசனேற்ற எண் -1லிருந்து பூச்சியத்திற்கு உயர்கிறது. எனவே ஒட்சிசனேற்றம் பெறுவதால் இது ஒரு ஒடுக்கியாகும்.


சனிக்கிழமை


Friday 27 December 2013

உலோகங்களின் பண்புகள்-1

உலோகங்களின் பண்புகள்

 பொதுவாக உலோகங்கள் உயர் கொதிநிலைகளைப் பெற்றிருக்கின்றன. எனவே, பாதரசம் தவிர அனைத்து உலோகங்களும் அறை வெப்பநிலையில் திண்மநிலையில் காணப்படுகின்றன.

அறைவெப்பநிலையில் கார்பன், சல்பர் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை திண்மங்களாகவும், புரோமின் நீர்மமாகவும், ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன் மற்றும் ஹீலியம் முதலியவை வாயுக்களாகவும் உள்ளன.

உலோகங்களுக்குப் பொலிவுத் தன்மை (பளபளப்புத் தன்மை) உண்டு. அலோகங்களுக்கு இத்தன்மை இல்லை.

ஒட்சிசன் ஒடுக்கம் - ஒட்சிசன்ஏற்றம் வினைகள்

ஒட்சிசன் ஒடுக்கம் - ஒட்சிசன்ஏற்றம் வினைகள்

ஒட்சிசனை சேர்த்தல் அல்லது ஹைட்ரஜனை நீக்கல் ஒட்சிசனேற்றம் ஆகும். ஹைட்ரஜனை சேர்த்தல் அல்லது ஒட்சிசனை நீக்கல் ஒடுக்கமாகும்.

 இலத்திரன் கொள்கையின்படி ஒரு இரசாயண வினையில் ஈடுபடும் அணு, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இலத்திரன்களை இழந்தால் , ஒட்சிசனேற்றம் எனப்படும். 

இவ்வாறு ஏற்படும்  இலத்திரன்இழப்பு அப்பொருளின் நேர் மின்னூட்டத்தை அதிகரித்தும், எதிர் மின்னூட்டத்தைக் குறைக்கவும் செய்யும்.

இரசாயனவினைகளில் இலத்திரன்களை இழக்கும் பொருட்கள் ஒடுக்கும் பொருட்கள் ்ல்லது ஒடுக்கிகளாகும்.

ஆக்சிஜன் ஒடுக்கம் என்பது ஒரு இரசாயன வினையில் பங்கு பெறும் அணு அல்லது அணுத்தொகுதிகள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இலத்திரன்களைப் பெற்றுக்கொண்டால் அதுவே ஒடுக்கமாகும். இவ்வாறு இலத்திரன்களைப் பெறுவதால் பொருட்களின் மேல் உள்ள நேர் மின்னூட்டம் குறைந்தும், எதிர் மின்னூட்டம் அதிகரிக்கவும் செய்கிறது.

தலைகீழ் விகித விதி

தலைகீழ் விகித விதி

இரு தனிமங்கள் தனித்தனியே குறிப்பிட்ட நிறையுடைய மூன்றாம் தனிமத்துடன் சேர்வதாகக் கொண்டால், அவ்விரு தனிமங்கல் சேர்ந் து ஒரு சேர்மத்தை உருவாக்கும்போது அவை தனித்தனியே சேர்ந்த எடை விகிதத்திலோ அல்லது விகித மடங்கிலோ தான் சேரும்.


வெள்ளிக்கிழமை


Thursday 26 December 2013

பெருக்க விகித விதி

பெருக்க விகித விதி

இரு தனிமங்கள் இணைந்து இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சேர்மங்களை உருவாக்கினால் இவ்விரு தனிமங்களின் குறிப்பிட்ட எடையுடன் இணையும் மற்றொரு தனிமத்தின் எடை எளிய விகிதத்தில் அமையும்.

வியாழக்கிழமை


Saturday 21 December 2013

வேதி வினைகள்

வேதி வினைகள் 

 நிறைமாறா விதி, இயைபு மாறா விதி, பெருக்க விகித விதி, தலைகீழ் விகித விதி, கே லூசாக்கின் பருமன் சேர்ப்பு விதி போன்ற விதிகளின் அடிப்படையில் வேதி வினைகள் நிகழ்கின்றன.


சனிக்கிழமை