Monday 31 October 2011

மெண்டலீஃப் அட்டவணையின் குறைபாடுகள்

மெண்டலீஃப் அட்டவணையின்
குறைபாடுகள்

ஹைட்ரஜனிற்கு முறையான இடம் 
தரப்படவில்லை.

அதிக அணு நிறையைப் பெற்ற தனிமங்கள்
 குறைந்த அணு நிறையைப் பெற்ற 
தனிமங்களுக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ளன.

அணு எண் 57 முதல் 71 வரை உள்ள 15 
தனிமங்கள் லாந்தனைடுகள் அல்லது 
அரிய மண் தனிமங்கள் என்று அழைக்கிறோம்.

 இவை III B தொகுதியில் 6-வது தொடரில் 
அமைக்கப்பட்டுள்ளன.

இதே போன்று ஆக்டினைடுகள் எனப்படும் 
மற்றொரு வகை தனிமங்களுக்கு தனிம 
வரிசை அட்டவணையில் சரியான இடம் 
அளிக்கப்படவில்லை.

தனிமங்களின் ஐசோடோப்புக்கள் அ
த்தனிமங்கள் இருக்கும் இடத்திலேயே 
காணப்படுகின்றன. 

ஆனால் மெண்டலீஃபின் கொள்கைப்படி 
அவற்றின் அணுநிறைக்கேற்ப வெவ்வேறு 
இடத்தில் வைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

வேதிப்பண்புகளின் அடிப்படையில் ஒத்த 
பண்புகளை உடைய தனிமங்களான காப்பர்
, மெர்குரி போன்றவை வெவ்வேறு 
தொகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் வேறுபட்ட பண்புகளையுடைய 
தனிமங்களான காப்பர், சில்வர், கோல்டு 
ஆகியவை ஒரே தொகுதியில் அமைக்கப்பட்டுள்ளன.

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


Sunday 30 October 2011

மெண்டலீஃப் அட்டவணையின் பயன்கள்

மெண்டலீஃப் அட்டவணையின் 
பயன்கள்

புதிய தனிமங்கள் இருக்கும் என முன்பே 
அறிந்து கூறப்பட்டது. 

அட்டவணையில் சில காலியிடங்கள் 
இருந்தன. 

இக்காலியிடங்கள், அதுவரை 
கண்டுபிடிக்கப் படாத புதிய 
தனிமங்கள் இப்பூமியில் உள்ளதை உணர்த்தின.

இத்தனிமங்களை மெண்டலீஃப், ஈகா-
அலுமினியம், ஈகா-சிலிக்கான் என 
அழைத்தார். 

பின்னர் அவை கண்டுபிடிக்கப்பட்ட 
முறையே காலியம், ஜெர்மேனியம் 
என அழைக்கப்பட்டன.

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்