Monday 31 October 2011

மெண்டலீஃப் அட்டவணையின் குறைபாடுகள்

மெண்டலீஃப் அட்டவணையின்
குறைபாடுகள்

ஹைட்ரஜனிற்கு முறையான இடம் 
தரப்படவில்லை.

அதிக அணு நிறையைப் பெற்ற தனிமங்கள்
 குறைந்த அணு நிறையைப் பெற்ற 
தனிமங்களுக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ளன.

அணு எண் 57 முதல் 71 வரை உள்ள 15 
தனிமங்கள் லாந்தனைடுகள் அல்லது 
அரிய மண் தனிமங்கள் என்று அழைக்கிறோம்.

 இவை III B தொகுதியில் 6-வது தொடரில் 
அமைக்கப்பட்டுள்ளன.

இதே போன்று ஆக்டினைடுகள் எனப்படும் 
மற்றொரு வகை தனிமங்களுக்கு தனிம 
வரிசை அட்டவணையில் சரியான இடம் 
அளிக்கப்படவில்லை.

தனிமங்களின் ஐசோடோப்புக்கள் அ
த்தனிமங்கள் இருக்கும் இடத்திலேயே 
காணப்படுகின்றன. 

ஆனால் மெண்டலீஃபின் கொள்கைப்படி 
அவற்றின் அணுநிறைக்கேற்ப வெவ்வேறு 
இடத்தில் வைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

வேதிப்பண்புகளின் அடிப்படையில் ஒத்த 
பண்புகளை உடைய தனிமங்களான காப்பர்
, மெர்குரி போன்றவை வெவ்வேறு 
தொகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் வேறுபட்ட பண்புகளையுடைய 
தனிமங்களான காப்பர், சில்வர், கோல்டு 
ஆகியவை ஒரே தொகுதியில் அமைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.