Wednesday 8 January 2014

அட்டவனை,


Tuesday 7 January 2014

வினாவிடை,

அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்?
தண்ணீர்.

Monday 6 January 2014

கொக்கோகோலா ,அவித்தமுட்டை




திங்கள்கிழமை


Sunday 5 January 2014

எத்திலீன்

எத்திலீன்

ஈத்தீனின் பொதுப்பெயர் எத்திலீன். இதன் மூலக்கூறு வாய்ப்பாடு C2H4 ஆகும். பெரிய அல்கேன் மூலக்கூறை வெப்பத்தின் உதவியால் சிறிய ஹைட்ரோ கார்பன்களாக சிதைக்கும் முறை கிராக்கிங் எனப்படும்.

எத்திலீன் பழங்களைக் கனிய வைக்கவும், பாலிதீன், பாலி புரப்பிலீன் மற்றும் PVC (பாலி வினைல் குளோரைடு) தயாரிக்கவும் பயன்படுகிறது.

எத்திலீன் டை குளோரைடு, செயற்கை இரப்பரான தயோக்கால் தயாரிப்பில் பயன்படுகிறது. கிளைக்கால் தயாரித்தலிலும் பயன்படுகிறது.

ஹைட்ரோ கார்பன்கள்

ஹைட்ரோ கார்பன்கள்

கார்பன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியவற்றால் ஆக்கப்பட்ட எளிய கரிமச் சேர்மங்கள் ஹைட்ரோ கார்பன்கள் எனப்படுகின்றன. இவற்றில் கார்பன் நான்கு இணைதிறனையும், ஹைட்ரஜன் ஒரு இணைதிறனையும் உடையன.

கரிமச் சேர்மங்கள் இரு முக்கிய வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அவை: 

1.  திறந்த சங்கிலித் தொடர் அல்லது அலிபாட்டிச் சேர்மங்கள் 

2. மூடிய அமைப்புள்ள அல்லது வளையச் சேர்மங்கள்

கார்பன் அணுக்களின் நான்கு இணைதிறன்களும் நான்கு அணுக்கள் அல்லது  தொகுதிகளுடன் ஒற்றைப் பிணைப்பின் மூலம் பிணைக்கப்பட்டிருப்பதால் இத்தகைய கார்பன்கள் உள்ள சேர்மங்கள் நிறைவுற்ற ஹைட்ரோ கார்பன்கள் எனப்படுகின்றன. ஏனெனில் அவை மேலும் சில அணுக்களுடனோ அல்லது தொகுதிகளுடனோ பிணைப்பு ஏற்படுத்த முடியாது.

கார்பன் அணுக்கள் தமிமிடையே பல பிணைப்புக்களால் (குறைந்த அளவு ஒரு இரட்டைப் பிணைப்பு அல்லது முப்பிணைப்பு) பிணைக்கப்பட்டிருந்தால் அத்தகைய சேர்மங்கள் நிறைவுறா ஹைட்ரோ கார்பன்கள் எனப்படும்
.
நிறைவுற்ற ஹைட்ரோ கார்பன்கள் CnH2n+2 (n-ன் மதிப்பு = 1,2,3,4...) என்ற பொதுவான வாய்ப்பாட்டால் குறிக்கப்படுகின்றன.

ஆல்கேன்களில் முதல் சேர்மம் மீத்தேன். மீத்தேனின் வாய்பாடு CH4+ இரண்டாவது சேர்மம் ஈத்தேன். இதன் வாய்ப்பாடு C2H6 . மற்றவைகளை ஒப்பிடுகையில் இவை நிலைத்தன்மை உடையவை. ஏனெனில் அவை நிறைவுத் தன்மை உடையவை. எனவே அவை பாரஃபீன்கள் என அழைக்கப்படுகின்றன.

நிறைவுறா ஹைட்ரோ கார்பன்களான அல்கீன்கள் CnH2n என்ற பொதுவான வாய்ப்பாட்டால் குறிக்கப்படுகிறது. இவை ஒலிஃபீன்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. எளிய ஒலிஃபீனின் வாய்ப்பாடு C2H4 இதன் சாதாரணப் பெயர் எத்திலீன்.

அல்கீன்கள், கார்பன் அணுக்களுக்கிடையே ஒன்று அல்லது அதற்கு அதிகமான இரட்டைப் பிணைப்பைக் கொண்டுள்ளன.

இரு அணுக்களுக்கிடையே இரு எலக்ட்ரான் இணை பங்கிடப்பட்டு இரு சகப்பிணைப்பு ஏற்பட்டால், அவ்வணுக்கள் இரட்டைப் பிணைப்பால் சேர்ந்துள்ளன என அறியலாம்.

 நிறைவுறா ஹைட்ரோ கார்பன்களின் மற்றொரு வகை அல்கைன்களாகும். அதன் பொதுவான வாய்ப்பாடு CnH2n-2 இதன் சிறப்பம்சம் இதிலுள்ள கார்பன் - கார்பன் அணுக்களுக்கிடையேயான முப்பிணைப்பாகும்.

ஆல்கைன் வரிசையில் முதல் சேர்மத்தின் வாய்ப்பாடு C2H2 ஆகும். இது அசிட்டிலின் எனப்படும். எனவே அல்கைன்கள், அசிட்டிலீன்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

ஞாயிற்றுக்கிழமை


Saturday 4 January 2014

கிராஃபைட்

கிராஃபைட்

கிராபைட்டில் கார்பன் அணுக்கள் தட்டையான அடுக்குகளாக அமைந்துள்ளன. ஒவ்வொரு அடுக்கும் கார்பன் அணுக்கள் அடங்கிய அறுகோண வளையங்களால் ஆனது.

ஒவ்வொரு கார்பன் அணுவும் மற்ற மூன்று கார்பன் அணுக்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது.

கிராபைட்டின் பல்வேறு அடுக்குகளுக்கிடையே உள்ள பிணைப்பு விசை வலுவிழந்த வாண்டர்வால்ஸ் விசை ஆகும். இந்த அடுக்குகள் ஒன்றின் மீது ஒன்றும் நழுவும் தன்மை உடையது.

இதனால் தான் கிராபைட் மென்மையாகவும் வழவழப்பாகவும் காணப்படுகிறது. இப்பண்பினால் தான் கிராபைட்டை எந்திரங்களில் உயவுப்பொருளாக பயன்படுத்துகிறோம்.

கிராபைட் கருஞ்சாம்பல் நிறமுடையது, மின்சாரத்தை நன்கு கடத்தும், கிராபைட்டின் உருகுநிலை 3700 டிகிரி செல்சியஸ் ஆகும்.

மின்கலங்களில் மின்வாய்களாகவும், இயந்திரங்களில் உயவுப்பொருளாகவும், பென்சில் லெட் செய்யவும், வண்ணங்கள் (பூச்சு) தயாரிக்கவும், அணுக்கரு உலைகளில் நியூட்ரானை உறிஞ்சும் பொருளாகவும் (Moderator) கிராபைட் பயன்படுகிறது.

வைரம்

வைரம் 

வைரத்தில் ஒவ்வொரு கார்பன் அணுவும் மற்ற நான்கு கார்பன் அணுக்களுடன் வலுவான விசைகளால் பிணைக்கப்பட்டுள்ளன. இத்தகைய கார்பன் பிணைப்பு முப்பரிமான அளவில் படிகம் முழுவதும் வலுவான வலைப்பின்னல் போல் அமைந்துள்ளது.

வைரம் நிறமற்ற ஒளி ஊடுருவக் கூடிய பொருள். பட்டை தீட்டப்பட்ட வைரம், ஒளி எதிரொளிப்பு மற்றும் ஒளி விலகல் காரணமாக மிகவும் பளபளப்பாக காட்சியளிக்கிறது.

வைரத்தின் அடர்த்தி 3.5 கி/செ.மீ3. வைரம் மின்சாரத்தைக் கடத்தாது. கருப்பு வைரத்தைக் கொண்டு கண்ணாடியை வெட்டலாம், பளிங்கு கற்களை அறுக்கலாம், மற்றும் பாறைகளைத் துளை இடலாம். உயர் நுட்ப வெப்பமானிகளில் வைரம் பயன்படுகிறது.

சனிக்கிழமை


Friday 3 January 2014

பெட்ரோலியம்

பெட்ரோலியம்

 பெட்ரோலியம் என்பற்கு பாறைகளின் எண்ணெய் என்று பொருள் பெட்ரோலியத்தில் ஹைட்ரோ கார்பன்கள் அடங்கிய இயற்கை வாயுக்களும் கசடு எண்ணெயும் அடங்கும்.

பெட்ரோலியம் என்பது பல்வேறு ஹைட்ரோ கார்பன்களும் (கார்பன் மற்றும் ஹைட்ரஜனின் சேர்மங்கள்) மேலும் ஆக்சிஜன், நைட்ரஜன் மற்றும் கந்தகத்தைக் கொண்ட கரிம சேர்மங்கள் சிலவற்றையும் உடைய சிக்கலான கலவையாகும்.

சுமார் 100-200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கடல்வாழ் நுண்ணுயிர்த் தாவரங்களும், விலங்குகளும், பாறைகள் மற்றும் படிவங்களில் கலந்து ஆக்சிஜன் இன்றி அதிக வெப்பம், அழுத்தத்திற்கு உட்பட்டு பெட்ரோலியமாக கடலுக்கடியில் மாறியுள்ளன.

வெள்ளிக்கிழமை


Thursday 2 January 2014

கார்பன்

கார்பன்

முக்கிய தனிமங்களுள் கார்பனும் ஒன்று. இது ஒரு தனித்தன்மை வாய்ந்த தனிமம்.

தாவரமோ அல்லது விலங்கோ எதுவாயினும் அதில் கார்பன் உள்ளது. இயற்கையில் காணப்படும் நிலக்கரி, பெட்ரோலியம், பளிங்கு கல் மற்றும் சுண்ணாம்புக் கல் போன்றவற்றில் கார்பன் உள்ளது.

 கார்பன் ஒரு அலோகம் அது C என்ற குறியீட்டால் குறிப்பிடப்படுகிறது.

கார்போ என்ற இலத்தீன் மொழி சொல்லிலிருந்து கார்பன் என்ற பெயர் வந்தது.

கார்பன் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று தங்களுக்குள் இணைந்து வெவ்வேறு அளவுடைய சங்கிலித் தொடர்களையும் வளையங்களையும் தோற்றுவிக்கும். கார்பனின் இந்தப் பண்பிற்கு கேட்டினேஷன் என்று பெயர்.


உலோகக் கலவைகள்


உலோகக் கலவைகள்

டியூராலுமினியத்தில் 95 சதவீதம் அலுமினியமும், 4 சதவீத செம்பும் உள்ளது.


அல்நிக்கோ என்பது அலுமினியம், நிக்கல், கோபால்ட் சேர்ந்த கலவையாகும்.

பிட்டானியா உலோகம் என்பது 93 சதவீத தகரமும், 5 சதவீத அண்டிமணியும், 2 சதவீத செம்பும் கொண்ட கலவையாகும்

90 சதவீத தகரம், 7 சதவீத அண்டிமணி, 3 சதவீத செம்பும் கொண்ட கலவை பாபிட் உலோகம் எனப்படும்.

64 சதவீத இரும்பும், 36 சதவீத நிக்கல் கொண்ட கலவை இன்வார் எனப்படும் நிக்கல் கலவையாகும்.

மோனா உலோகம் என்பது 67 சதவீத நிக்கல் மற்றும் 28 சதவீத செம்பு கொண்ட கலவையாகும்.

பித்தளை என்பது 60 முதல் 90  சதவீத செம்பும், 10 முதல் 40 சதவீத துத்தநாகமும் கொண்ட கலவையாகும்.

80 சதவீத செம்பும், 20 சதவீத தகரமும் கொண்டது பெல் உலோகம் எனப்படும்.

ஜெர்மன் வெள்ளி எனப்படும் கலவையில் செம்பு, துத்தநாகம், நிக்கல் ஆகியவை காணப்படும்.

90 சதவீத செம்பும், 10 சதவீத துத்தநாகமும் கொண்டது பிரான்ஸ் தங்கம் ஆகும்.

கன் மெட்டல் அல்லது கன் உலோகம் என்பது 89 சதவீத செம்பும், 10 சதவீத தகரம் மற்றும் 1 சதவீத துத்தநாகமும் கொண்டதாகும்.

எவர்சில்வர் என்பது இரும்பு, குரோமியம், நிக்கல் கலந்த கலவையாகும்.

தாதுபொருட்கள்

 தாதுபொருட்கள்

மேக்னடைட் ஹேமடைட், சிட்ரைட், லிமோடைட், இரும்பு கந்தகக்கல் ஆகியன இரும்பின் தாதுக்களாகும்.


ரூடைல், இல்மடைட் ஆகியவை டைட்டானியத்தின் தாதுக்களாகும்.

பிச்சு பிளெண்ட், கார்னோடைட் ஆகியன யுரேனியத்தின் தாதுக்கள்.

ஜிர்கான், பேடிலைட் ஆகியன ஜிர்கோனியத்தின் தாதுக்கள்.

கார்னோடைட், பேட்ரோனைட், வெனடினைட் ஆகியன வனேடியத்தின் தாதுக்களாகும்.

பைரோலுசைட், ஹிஸ்மனைட், மாங்கனைட் ஆகியவை மாங்கனீன் தாதுக்கள்.

குரோடைட், குரோகாயிசைட் ஆகியன குரோமியத்தின் தாதுக்களாகும்.

பெண்டலன்டைட், சோனபைட், குப்பல் நிக்கல் அல்லது நிக்கோலைட், கார்னிரைட் ஆகியன நிக்கலின் தாதுக்கள்.

பாக்சைட், கிரியோலைட், பெல்ஸ்பார் ஆகியன அலுமினியத்தின் தாதுக்கள்.

மாலகைட், தாமிரபைரைட், காப்பர் கிளான்ஸ், க்யூப்ரைட் ஆகியவை தாமிரத்தின் தாதுக்கள்.

சின்னபார் என்பது பாதரசத்தின் தாதுவாகும்.

கலீனா, துத்தநாக கந்தகக் கல் ஆகியவை கந்தகத்தின் தாதுப் பொருட்கள்.

காலமின், சிங்கைட் ஆகியவை துத்தநாகத்தின் தாதுப் பொருட்கள்.

டாலமைட், ஜிப்சம், ஃப்ளூரோஸ்பார், சுண்ணாம்புக்கல் ஆகியவை கல்சியத்தின் தாதுக்கள்.

 மேக்னசைட், டாலமைட், கார்னலைட், எப்சம் உப்பு ஆகியவை மக்னீசியத்தின் தாதுக்கள்.

கேசிட்டரைட் அல்லது டின்ஸ்டோன் எனப்படுவது வெள்ளீயத்தின் தாதுப்பொருளாகும்.

கயோலின், பெல்ஸ்பார் ஆகியன சிலிகானின் தாதுப் பொருட்கள்.

சில்வனைட், காரனைட், சால்ப் பீட்டர் ஆகியவை பொட்டாசியத்தின் தாதுப்பொருட்கள்.

சாதாரண உப்பு மற்றும் சிலிசால்ட் பீட்டர் ஆகியவை சோடியத்தின் தாதுப் பொருட்கள்.

ஸ்பெரிலைட், க்யூப்ரைட், பிராக்கைட் ஆகியவை பிளாட்டினத்தின் தாதுப் பொருட்களாகும்.

அர்ஜெண்டைட், குளோரார்ஜிரைட், பெரார்ஜிரைட் ஆகியவை வெள்ளியின் தாதுப் பொருட்கள் ஆகும்.

கலீனா, செருசைட் ஆகியவை காரீயத்தின் தாதுக்கள்.

சில்வனைட், காலவரைட், பிஸ்மத் ஆரைட் ஆகியவை தங்கத்தின் தாதுப் பொருட்கள்.

வேதியியல் என்று ஒரு தனி பிரிவே உள்ளது.

புவியின் ஒட்டுப்பகுதியில் 0.03 சதவீத அளவே கார்பன் உள்ளது. வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு உள்ளது.

இயற்கையில் நிலக்கரி மட்டுமல்லாமல் கிராபைட் மற்றும் வைரம் என்ற இருவகைகளிலும் கார்பன் காணப்படுகிறது. ஃபுல்லரின் என்ற இன்னொரு வகை கார்பனும் கண்டறியப்பட்டுள்ளது.

புவியின் ஒட்டுப் பகுதியில் கார்பன் பலவகைப்பட்ட பொருட்களில் காணப்படுகிறது.

பஞ்சு, காகிதம், மரம், சர்க்கரை மற்றும் உணவு வகைகள் போன்ற பொருட்களில் கார்பன் உள்ளது.

ஒரு தனிமம் ஒரே இயற்பியல் நிலையில் ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்கலில் காணப்படலாம்.

தனிமங்களின் இத்தகைய பண்பிற்கு புற வேற்றுமை என்றும், பல்வேறு வடிவங்களுக்கு புற வேற்றுமை வடிவங்கள் என்றும் பெயர்.

இத்தகைய புற வேற்றுமை வடிவங்கள் ஒரே மாதிரியான இயற்பியல் பண்புகளையும் மாறுபட்ட வேதியில் பண்புகளையும் பெற்றுள்ளன.

கார்பனுக்கு புறவேற்றுமை பண்பு காணப்படுகிறது. கார்பனின் பல்வேறு புற வேற்றுமை வடிவங்களை படிகங்கள் மற்றும் படிக வடிவமற்றவை என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

கிராபைட்டும், வைரமும் கார்பனின் இரு படிக புற வேற்றுமை வடிவங்களாகும்.

நிலக்கரி, அடுப்புக்கரி, மற்றும் விளக்குக் கரி ஆகியவை கார்பனின் படிகவடிவமற்ற புற வேற்றுமை வடிவங்கள் ஆகும்.

 கிராபைட் என்பது கருப்பான, மென்மையான மற்றும் வழவழப்பான கார்பனாகும்.

இயற்கையில் காணப்படும் அனைத்துப் பொருட்களிலும் மிகக் கடினமானது வைரமாகும்.

1985-ம் ஆண்டு பக்மினிஸ்டர் புல்லரீன் எனப்படும் கார்பனின் மற்றொரு வகை புற வேற்றுமை வடிவம் கண்டுபிடிக்கப்பட்டது.

அணுக்களின் அணைப்பு

அணுக்களின் அணைப்பு

ஹீலியத்தில் அணுக்களின் அமைப்பின்படி புரோட்டான்களின் எண்ணிக்கை 2, எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 2, நியூட்ரான்களின் எண்ணிக்கை 2, எல்க்ட்ரான் அமைப்பு (2) ஆகும்.

நியான் தனிமத்தில் புரோட்டான்களின் எண்ணிக்கை 10, எலக்ட்ரான் எண்ணிக்கை 10, நியூட்ரான் எண்ணிக்கை 10, எல்க்ட்ரான் அமைப்பு (2,8) ஆகும்.

சோடியத்தில் புரோட்டான்களின் எண்ணிக்கை 11, எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 11, நியூட்ரான்களின் எண்ணிக்கை 12, எலக்ட்ரான் அமைப்பு (2,8,1) ஆகும்.

குளோரினில் புரோட்டான் எண்ணிக்கை 17, எலக்ட்ரான் எண்ணிக்கை 17, நியூட்ரான் எண்ணிக்கை 18, எலக்ட்ரான் அமைப்பு (2,8,7) ஆகும்.

கதிரியக்கம்

கதிரியக்கம்

1896 ஆம் ஆண்டு ஹென்றி பெக்கோரல் என்பவர் யுரேனியத் தனிமத்திலிருந்து கதிரியக்கத்தை முதலாவதாகக் கண்டறிந்தார்.

கியூரி அம்மையார் கதிரியக்கத் தன்மை கொண்ட மேலும் இரு புதிய தனிமங்களைக் கண்டறிந்தார். அவை ரேடியம், பொலேனியம் ஆகும்.

தோரியமும் ஒரு கதிரியக்கத் தனிமமாகும்.

தற்போது செயற்கை கதிரியக்க தனிமங்கள் தயார்க்கப்பட்டுள்ளன.
கதிரியக்கத் தன்மையற்ற தனிமங்கள் கதிரியக்கத் தனிமங்களாக செயற்கை அணுக்கரு மாற்று முறையில் மாற்றப்படுகின்றன.

யுரேனியம், தோரியம், பொலேனியம், ரேடியம் ஆகியவை இயற்கையிலேயே கதிரியக்கத் தன்மையுள்ள தனிமங்களாகும்.

 வேதிவினைகள் அணுக்களின் உட்கருவுக்கு வெளியே நடைபெறும் மாற்றங்கள் ஆகும்.

கதிரியக்க வீச்சு என்பது அணுக்கருவிற்குள் ஏற்படும் மாற்றங்கள் ஆகும்.

கதிரியக்கத்தில் வெளியிடப்படும் மின்சுமை கொண்ட துகள்களின் பாதை மற்றும் தன்மையை ஆராய மேகப்பெட்டகம் முறை பயன்படுத்தப்பட்டது.

செயற்கை முறையில் தயார்க்கப்பட்ட கதிரியக்க ஐசோடோப்புகள் ரேடியோ நியூக்கிளியைடு அல்லது கதிரியக்க ஐசோடோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.

காமா கதிர்கள்

காமா கதிர்கள்

காமா கதிர்கள் ஆல்ஃபா, பீட்டா துகள்கள் போன்ற பொருண்மைத் துகள்கள் அல்ல. ஆனால், அவை மின்காந்த அலைகளாகும். அவற்றின் அலை நீளம் மிகச்சிறியது.

காமாக் கதிர்கள் கண்ணிற்குப் புலப்படாது. இவை காற்றினை அயனியாக்கும். இக்கதிர் நின்றொளிர்தலை உண்டாக்கும்.

இவை மின்காந்தக் கதிர்களானதால் மின் காந்தப் புலங்களால் பாதிக்கப்படுவதில்லை. படிகங்களால் இக்கதிரிகள் விளிம்பு விளைவு அடைகின்னறன.

எக்ஸ் கதிர்களை விட இவற்றின் ஊடுருவும் திறன் அதிகம். ஏனெனில், எக்ஸ் கதிர்களை விட இவற்றின் அலைநீளம் குறைவு.

காமா கதிர்களின் தாக்குதலால் உயிர் திசுக்கள் இறந்துவிடலாம். எனவே இவை ஆபத்தானவை.

காமாக் கதிர்களை வெளியிடும் கதிரியக்க தனிமத்தின் உட்கரு வேதிப்பண்புகளில் மாறுவதில்லை.

ஒரு ரேடியோ ஐசோடோப்பு கதிரியக்கத்தினால் அதன் தொடக்க நிறையில் இருந்து சரிபாதி நிறையாக மாறுவதற்கு ஆகும் காலம் அரை ஈயுட்காலம் எனப்படும்.

இதனைப் பயன்படுத்தி, பாறைகள், மரம் மற்றும் புவியில் கிடைக்கும் கரிமப் பொருட்களின் வயதினை ரேடியோ கார்பன் தேதியிடல் முறையில் கண்டறிகிறார்கள்.



கதிரியக்க வீச்சுகளை அறியப் பயன்படும் கருவிகள் எலக்ட்ரோ மீட்டர், மேகப்பெட்டகம், கெய்கர்-முல்லர் எண்ணி மற்றும் குறைகடத்தி மின்சுற்றுகள் ஆகியன.

பீட்டா கதிரியக்கம்

பீட்டா கதிரியக்கம்

பீட்டா கதிர்கள் பொருண்மைத் துகள்களாகும். அவை எல்க்ட்ரான்கள் ஆகும்.

காற்றை இக்கதிர்கள் மிதமான முறையில் அயனியாக்குகிறது. இதன் இயக்க எல்லை, அல்ஃபா கதிர்களைப் போன்று தெளிவாக வரையறுக்கப்படவில்லை.

இவை அதிக திசைவேகம் பெற்று இயங்குகின்றன. சில நேரங்களில் ஒளியின் திசைவேகத்தை ஒத்துள்ளன.

பீட்டா கதிர்கள் புகைப்படத் தாள்களைப் பாதிக்கின்றன. இவை மின்சுமை பெற்றிருப்பதால் மின் மற்றும் காந்தப் புலங்களால் விலக்கமடைகின்றன.

 இவை அயனியாக்கல் வினைக்கு ஆற்றலைச் செலவழிப்பதில்லை. எனவே, இவை ஆல்ஃபா துகள்களை விட காற்றில் அதிக தூரம் கடக்கவல்லவை.

 பீட்டா துகள்கள், அல்ஃபா துகள்களை விட 7000 மடங்கு இலேசானது. இவை நின்றொளிர்தல் நிகழ்வினைச் செய்கின்றன.


அல்ஃபா கதிரியக்கம்

ஆல்ஃபா கதிரியக்கம்

அல்ஃபா துகள்கள் ( துகள்கள்) ஹீலியத்தின் (2He4) உட்கருவைப் பெற்றவை. ஹைட்ரஜனின் அணு நிறையை விட 4 ம"்ஙகு கனமானது.

அதிகயளவில் காணப்படும் U-238 ஐசோடோப்பு அல்ஃபா கதிர்கள் முக்கிய மூலம் ஆகும். இவை கதிரியக்கத் தனிமங்கள் வெளியிடும் மிகப் பெரிய துகள்  ஆகும்.

அல்ஃபா துகள்களுக்கு ஊடுருவும் திறன் மிகக் குறைவு. மேலும் அதிக நிறையும் அதிக திசைவேகத்தையும் பெற்றிருப்பதால் இவறஅறின் இயக்க ஆற்றல் அதிகமாகும்.

எனவே இவை செயற்கை தனிமங்களை உருவாக்கப் பயன்படும் தாக்கிகளாகப் பயன்படுகின்றன.

காற்றினை தொடர்ந்து அயனியாக்குவதால் இதன் ஆற்றல் விரைவாகக் குறைந்துவிடுகிறது. இதனால் இவை காற்றில் சிறிது தூரத்திலேயே தடுத்து நிறுத்தப் படுகின்றன. இத்துகள்கள் காற்றில் அதிகபட்ச தூரம் எவ்வளவு கடக்குமோ அதை அல்ஃபா கதிரின் இயக்க எல்லை என்று அழைக்கிறோம்.

அல்ஃபா கதிர்கள் மின் சுமை பெற்றவையாதலால் அவை மின் மற்றும்
காந்தப் புலங்களினால் விலக்கமடைகின்றன. புகைப்படத்தாளை அல்ஃபா கதிர்கள் பாதிக்கின்றன.

கதிரியக்க தனிமத்திலிருந்து ஒரு அல்ஃபா கதிர் வெளியாகையில் அதன் நிறையில் 4 அலகுகளும், அதன் மின் சுமையில் 2 அலகுகளும் குறைகின்றன. புதிதாக உருவாகும் தனிமம் வேதிப்பண்புகளில் வேறுபட்டுக் காணப்படுகிறது. இதுவே கதிரியக்க மாற்றம் எனப்படும். இதனைக் கண்டறிந்தவர் சாடி என்ற அறிஞர் ஆவார்.

கதிரியக்கத்தின் பயன்கள்

கதிரியக்கத்தின் பயன்கள்

கதிரியக்க கோபால்ட் Co-60, U-238 ஆகியவை புற்றுநோய் மற்றும் கட்டுகளைக் குணப்படுத்தும் சிகிச்சையில் பயன்படுகின்றன.

கதிரியக்க அயோடின் (I-123) தைராய்டு புற்று நோய் சிகிச்சைக்குப் பயன்படுகிறது.

பால்பரஸ்-32 அல்லது ஸ்ட்ரான்சியம்-90 ஆகியவை தோல் புற்றுநமோயைக் குணப்படுத்துகிறது.

மருத்துவக் கருவிகளில் உள்ள கிருமிகளை நீக்கக் கதிர்வீச்சுப் பயன்படுகிறது.

டிரிட்டியம், கார்பன்-14 போன்றவை உயிரியல் மூலக்கூறுகளைக் கண்டறியப் பயன்படுகிறது.

காமா, பீட்டா கதிர்கள் ஆலைகளிலுள்ள நிரப்பப் பட்டுள்ள கொள்கலனில் பொருட்களின் நிரம்பிய அளவினைக் காட்டப் பயன்படுகிறது.

கதிரியக்கத் தனமையுள்ள அயர்ன் (Fe-59)-ஐப் பயன்படுத்தி இரத்த சோகை நோயைக் குணப்படுத்தலாம்.

கதிரியக்க பாஸ்பரஸ் (P-32) உரங்களுடன் சேர்க்கபட்டு வளரும் தாவரங்கள் உரத்தை எவ்வளவு கிரகித்துக் கொள்கிறது என அறியப்பயன்படுகிறது.

ரேடியோ ஐசோடோப்பிலிருந்து வெளிவரும் கதிரியக்கத்தைப் பயன்படுத்தி உயர் விளைச்சல் தரும் புதிய ரக நெல், கோதுமை ஆகியவை உருவாக்கப் படுகின்றன.

காமா கதிர்களைப் பயன்படுத்தி அணு உட்கருவின் அமைப்பு மற்றும் பண்பை  அறியமுடிகிறது. பொருட்களின் அமைப்பு வாய்ப்பாட்டை கண்டறிய கதிர்வீச்சுகள் உதவுகின்றன.

கதிரயக்க அயோடினைப் பயன்படுத்தி கரைசல்களில் தங்கியிருக்கும் மிகச்சிறிய அளவு சில்வர் கசடுகளையும் கண்டுபிடிக்க முடியும்.

நியூட்ரான் கிளர்வு ஆய்வு மூலம் ஆர்சனிக் நச்சுத் தன்மையைக் கண்டறிவதில் கதிரியக்க ஐசோடோப்புகள் பயன்படுகின்றன.

ரேடியோ ஐசோடோப்புகள் குழாய்களில் ஏற்படும் கசிவினைக் கண்டறியப் பயன்படுகின்றன.

உலோகங்களின் தடிமன் மற்றும் தாளின் தடிமன் ஆகியவற்றை அறிய காமா கதிர் பயன்படுகிறது.

காமா, பீட்டா கதிர்கள் ஆலைகளிலுள்ள நிரப்பப் பட்டுள்ள கொள்கலனில் பொருட்களின் நிரம்பிய அளவினைக் காட்டப் பயன்படுகின்றன.

தொல்பொருள் மற்றும் பழம்பொருட்களின் வயதை அறிய C-14 ஐசோடோப்பு  பயன்படுகிறது. கதிரியக்க கார்பனின் அரை ஆயுட்காலம் 5730 ஆண்டுகள் இக்கதிரியக்கத்தைக் கொண்டு பாறைகள் மற்றும் படிவங்களின் வயதினைத் தீர்மானிக்கலாம்.

இம்முறையில் ககண்டுபிடிக்கப்பட்ட உலகிலேயே மிகப்பழமையான பாறை வட கனடாவில் உள்ளது. இது 3.96 X 10p வருடங்கள் பழமையானது.

காமாக் கதிர் வீச்சு பாக்டீரியாவை அழிக்கப் பயன்படுகிறது.

செயற்கைக் கதிரியக்கம்

செயற்கைக் கதிரியக்கம்

ஒரு தனிமம் வேறொரு தனிமமாக செயற்கை கதிரியக்க முறையில் மாற்றப்படுதலுக்கு தூண்டப்பட்ட கதிரியக்கம் அல்லது செயற்கைக் கதிரியக்கம் என்று பெயர்.

தூண்டப்பட்ட கதிரியக்க தனிமங்கள் செயற்கை கதிரியக்க ஐசோசோப்புகள் எனப்படும். கதிரியக்க ஐசோடோப்புக்களைக் கொண்டு நோய்களைக் கணப்படுத்துதல் கதிரியக்க சிகிச்சை எனப்படும்.

ஒரு அமிலத்தின் சமான நிறை

ஒரு அமிலத்தின் சமான நிறை

1,008 பங்கு இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய ஹைட்ரஜனைப் பெற்றுள்ள அமிலத்தின் பங்குகளின் எண்ணிக்கையே அந்த அமிலத்தின் சமான நிறையாகும்.

 ஒரு மூலக்கூறு அமிலத்தின் உள்ள இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய ஹைட்ரஜன் எண்ணிக்கையே அதன் காரத்துவம் எனப்படும். கந்தக அமிலத்தின் சமான நிறை 49 ஆகும்.


மூலக்கூறு நிறைக்கும் ஆவி அடர்த்திக்கும் இடையே உள்ள தொடர்பு

மூலக்கூறு நிறைக்கும் ஆவி அடர்த்திக்கும் இடையே உள்ள தொடர்பு

 2 X ஆவி அடர்த்தி = மூலக்கூறு நிறை

உப்பின் சமான நிறை

உப்பின் சமான நிறை

ஒரு சமான நிறை அமிலமும், ஒரு சமான நிறை காரமும் சேர்ந்து உண்டாகும் உப்பின் நிறையே உப்பின் சமான நி்றையாகும்.


நீல்ஸ்போர் அணுமாதிரியினன் குறைபாடுகள்

நீல்ஸ்போர் அணுமாதிரியினன் குறைபாடுகள்

 ஒரு எலக்ட்ரான் ஒரு குறிப்பிட்ட ஆற்றல் மட்டத்திலிலருந்து மற்றொரு ஆற்றல் மட்டத்திற்கு தாவுகிற போது கதிரிவீச்சு ஏற்படுகிறது. ஆனால் எவ்வாறு இக்கதிர்வீச்சு நிகழ்கிறது என்பதை விளக்க இயலவில்லை.

போரின் கொள்கை ஹைட்ரஜன் அணு மற்றும் ஹைட்ரஜனைப் போன்று அமையும் அயனிகளின் நிற நிரலை வெற்றிகரமாக விளக்கினாலும் அதிக எண்ணிக்கை பெற்றுள்ள எலக்ட்ரான்களை உடைய நிற நிரல் தொடர்களை விளக்க முடியவில்லை.


 h/2 பை என்ற மடங்கில் அமையும் mvr  கோண உந்தத்தைப் பெரும் எலக்ட்ரான் மட்டுமே குறிப்பிட்ட வலைய பாதையில் சுற்றும் என்ற கருத்திற்கு திருப்தியளிக்கும் உறுதிப்பாடு ஏதும் இல்லை.

சீமென் விளைவு பற்றி எந்த விளக்கமும் தரப்படவில்லை.


நீல்ஸ்போர் அணு மாதிரிக் கொள்கை

நீல்ஸ்போர் அணு மாதிரிக் கொள்கை

உட்கருவைச் சுற்றி அமையும் குறிப்பிட்ட வளையப் பாதைகள் அதாவது குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்பிட்களில் மட்டுமே எலக்ட்ரான்கள் உட்கருவைச் சுற்றி வருகின்றன.

இவ்வளையப் பாதைகள் குறிப்பிட்ட ஆற்றல்களைப் பெற்றுள்ளதால் இவை ஆற்றல் கூடுகள் அல்லது ஆற்றல் மடட்ங்கள் அல்லது குவாண்டம் மட்டங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

எலக்ட்ரான்கள் குறிப்பிட்ட ஆர்பிட்டில் இருக்கும்போது ஆற்றலைப் பெறவோ அல்லது இழக்கவோ செய்யாது. ஒரு எலக்ட்ரான் ஒரு நிலையிலிருந்து வேறொரு நிலைக்கு மாறினால் எலக்ட்ரான் குறிப்பிட்ட அதிரிவெண் உடைய கதிரிவீச்சை உறிஞ்சும் அல்லது வெளித்தள்ளும்.

வளைய ஆர்பிட்டில் சுற்றி வரும் எலக்ட்ரானில் கோண உந்தம் mvr ஆகும். இதில் m என்பது எலக்ட்ரானின் நிறையும், v என்பது கோண உந்தத்தையும் குறிக்கும்.


டாபர்னீரின் மும்மை வகைப்படுத்துதல்

டாபர்னீரின் மும்மை வகைப்படுத்துதல்

ஒத்த பண்புடைய மூன்று தனிமங்கள் கொண்ட தொகுதிகளாக டோபரினர் என்பவர் வகைப்படுத்தினார். இத்தொகுதி தனிமங்கள் மும்மைகள் எனப்படும்.

இவ்விதிகளின்படி மூன்று தனிமங்கள் அவற்றின் அணுநிறை எண் ஏறு வரிசையில் வரிசைப்படுத்தப்படுகின்றன. நடுவில் உள்ள தனிமத்தின் அணு நிறையானது மற்ற இரு தனிமங்களின் அணு நிறைகளின் இயற்கணித சராசரியாக இருக்கும்.


வியாழக்கிழமை


Wednesday 1 January 2014

அயனியாக்கும் ஆற்றலைப் பாதிக்கும் காரணிகள் அணுவின் உருவளவு, அணுக்ருவின் மின்சுமை, எலக்ட்ரான் திரை விளைவு, எலக்ட்ரான் நாட்டம் போன்ற காரணிகள் மூலம் பாதிக்கப்படுகிறது.

அயனியாக்கும் ஆற்றலைப் பாதிக்கும் காரணிகள்

அணுவின் உருவளவு, அணுக்ருவின் மின்சுமை, எலக்ட்ரான் திரை விளைவு, எலக்ட்ரான் நாட்டம் போன்ற காரணிகள் மூலம் பாதிக்கப்படுகிறது.

அணுவின் உருவளவு, அணுக்ருவின் மின்சுமை, எலக்ட்ரான் திரை விளைவு, எலக்ட்ரான் நாட்டம் போன்ற காரணிகள் மூலம் பாதிக்கப்படுகிறது.

அயனியாக்கும் ஆற்றல்

அயனியாக்கும் ஆற்றல்

அயனியாக்கும் ஆற்றலானது அயனியாக்கும் என்தால்பி என அழைக்கப்படுகிறது. 

ஒரு அணுவிலிருந்து ஒரு எலக்ட்ரானை நீக்குவதற்கு தேவைப்படும் ஆற்றல் அயனியாக்கும் என்தால்பி எனப்படும்.

தனித்த வாயு நிலையில் உள்ள ஒரு அணுவில் இருந்து ஒரு எலக்ட்ரானை நீக்குவதற்கு தேவைப்படும் ஆற்றல் முதல் அயனியாக்கும் என்தால்பி எனப்படும்.

அதே தனிமத்திலிருந்து இரண்டாவது எலக்ட்ரானை நீக்குவதற்கு முதல் எலக்ட்ரானை நீக்குவதை விட அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. ஏனெனில் ஒரு நடுநிலை அணுவை விட நேர்மின்சுமை கொண்ட அயனியிலிருந்து எலக்ட்ரானை நீக்குவது கடினமாகும்.

பொதுவாக தனிம வரிசை அட்டவணையில் உள்ள தொகுதியில் மேலிருந்து கீழிறங்கும்போது அயனியாக்கும் என்தால்பி குறைகிறது. அயனியாக்கும் என்தால்பி ஒருவரிசையில் இடமிருந்து வலமாகச் செல்லும்போது அதிகரிக்கிறது.


தணிமங்களின் வகைகள் தொகுதிகள்

தணிமங்களின் வகைகள் தொகுதிகள்

தனிமங்களின் வகைகள் - s, p, d, f தொகுதிகள்

தொகுதி 1 (கார உலோகங்கள்) மற்றும் தொகுதி 2 (காரமண் உலோகங்கள்) தனிமங்கள் முறையே வெளிக்கூட்டு எலக்ட்ரான் அமைப்பை ns1 மற்றும் ns2எனப்பெற்றிருப்பதால் அவை s தொகுதி தனிமங்கள் எனப்படும். இவை குறைந்த அயனியாக்கும் என்பதால் பி கொண்ட வினைத் திறன் மிக்க உலோகங்கள்.

தொகுதிகள் 13 முதல் 18 வரை உள்ள தனிமங்கள் p தொகுதி தனிமங்கள் ஆகும். s தொகுதி தனிமங்களும் சேர்ந்து இவற்றை முதன்மைத் தொகுதி தனிமங்கள் என்றும் அழைப்பர்.

ஒவ்வொரு தொகுதியிலும் வெளிச்சுற்று எல்க்ட்ரான் அமைப்பு ns2 np1லிருந்து ns2np6 வரை மாறுபடுகிறது. ஒவ்வொரு வரிசையும் மந்தவாயு எலக்ட்ரான் அமைப்புடன் முடிவுறுகிறது.

மந்த வாயுக்கள் மிகக் குறைந்த வினைதிறனைப் பெற்றுள்ளன. மந்த வாயுக்கள் தொகுதிக்கு முன்னதாக இரு முக்கிய வேதியியல் தொகுதிகள் உள்ளன. அவை ஹாலஜன்கள் (தொகுதி 17) மற்றும் சால்கோஜென்கள் (தொகுதி 16) ஆகும்.

தொகுதி 3 முதல் 12 வரை உள்ள தனி வரிசை அட்டவணையின் மையத்தில் உள்ள தனிமங்கள் d தொகுதி தனிமங்கள் அல்லது இடைநிலைத் தனிங்கள் ஆகும்.

அணுக்களின் உட்கூட்டில் உள்ள d ஆர்பிட்டால்கள் எலக்ட்ரான்களால் நிரப்பப்படுகின்றன. எனவே இவை d தொகுதி தனிமங்கள் எனப்படுகின்றன. இவற்றின் வெளிச்சுற்றின் எலக்ட்ரான் அமைப்பு (n-1) d1-10 ns1-2 இவை அனைத்தும் உலோகங்கள் ஆகும். பெரும்பாலும் நிறமுள்ள அயனிகளைத் தருகின்றன.

தனிம வரிசை அட்டவணையின் கீழ்ப்பகுதியில் உள்ள லாந்தனைடுகள் மற்றும் ஆக்டினைடுகள் உள் இடைநிலைத் தனிமங்கள் எனப்படும். இவற்றின் இணைதிறன் கூட்டு எலக்ட்ரான் அமைப்பு (n-2) f1-14 (n-1) d0-1 ns2

நியூலாண்டின் எண்ம விதி

நியூலாண்டின் எண்ம விதி

இவ்விதிகளின்படி தனிமங்களை அணு நிறைகளின் ஏறு வரிசையில் வரிசைப்படுத்தும்போது எட்டாவது தனிமமானது முதலாவது தனிமத்தின் பண்புகளை ஒத்திருக்கும். இதுவே நியூலாண்டின் எண்ம விதி எனப்படும்.

ஆனால் இவ்விதி அதிக அணு நிறை கொண்ட தனிமங்களுக்குப் பொருந்தாது.


மெண்டலீஃபின் தனிம வரிசை அட்டவணை

மெண்டலீஃபின் தனிம வரிசை அட்டவணை

 மெண்டலீஃப் அறிமுகப்படுத்திய தனிமங்களை வகைப் படுத்தும் முறையானது ஆவர்த்தன விதி எனப்படும். இவ்விதிப்படி தனிமங்களின் பண்புகளானது அவற்றின் அணு நிறைகளின் சார்பாக இருக்கும்.

மெண்டலீஃப் தனிம வரிசை அட்டவணை பற்றிய விவரம் பின்வருமாறு:

தனிம வரிசை அட்டவணையில் செங்குத்தாக அமைந்துள்ள பத்திகள் தொகுதிகள் என அழைக்கப்பட்டன. இவை I முதல் VIII மற்றும் 0 எனக் குறிக்கப்பட்டன. பூஜ்ஜியத் தொகுதி தனிமங்கள் மெண்டலீஃப் காலத்தில் கண்டறியப்படவில்லை.

தனிம வரிசை அட்டவணையில் கிடை மட்டத்தில் உள்ளவை வரிசைகள் எனப்படும். இவை 1 முதல் 7 என்ற எண்களால் குறிக்கப்படுகின்றன.

முதல் விரிசையில் 2 தனிமங்கள், 2 மற்றும் 3 வது வரிசையில் 8 தனிமங்கள், 4 மற்றும் 5ம் வரிசைகளில் 18 தனிமங்கள் உள்ளன.

6வது வரிசையில் 32 தனிமங்கள் உள்ளன. 7வது வரிசை முற்றுப்பெறாமல் 19 தனிமங்களைப் பெற்றுள்ளன.

1913ல் ஆங்கிலேய இயற்பியல் வல்லுநர் ஹென்றி மோஸ்லி என்பவர் ஒரு தனிமத்தின் அணு எண்ணானது அணு நிறையை விட முக்கியமான அடிப்படைப் பண்பு என்பதைக் கண்டறிந்தார்.

இதன் விளைவாக புதிய ஆவர்த்தன விதிப்படி தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் அணு எண்களை அடிப்படையாகக் கொண்டதாகும். இதுவே புதிய ஆவர்த்தன விதியாகும்.


ஆல்ஃபா தத்துவம்

ஆல்ஃபா தத்துவம்

தாழ்நிலையில் இருக்கும் அணுக்களில் எலக்ட்ரான்கள் ஆர்பிட்டால்களின் ஆற்றலைப் பொறுத்து ஏறுமுக வரிசையில் நிரம்பும்.

அதாவது எலக்ட்ரான்கள் முதலில் ஆற்றல் மிக்ககுறைந்த ஆர்பிட்டால்களில் நிரம்பிய பின்னர் அதர்கு அடுத்த அதிக ஆற்றலை உடைய ஆர்பிட்டால்களுக்குச் செல்லும். அந்த ஆர்பிட்டால்களில் எல்க்ட்ரான்கள் நிரப்புதல் ஏறுமுக வரிசையில் அமையும்.

தனிமத்தின் வேதிப்பண்புகள் வெளிக்கூட்டில் காணும் எண்ணிக்கை மற்றும் அவற்றின் அமைப்பைப் பொறுத்து அமைகின்றன.

 ஒரே மாதிரி வெளிக்கூட்டு எலக்ட்ரான் அமைப்பைப் பெற்றுள்ள தனிமங்கள் பல தொகுதிகளாகப் பிரிகிகப்ப்டடுள்ளன. எனவே ஒரே தொகுதியில் உள்ள தனிமங்களின் வேதியில் மற்றும் இயற்பியல் பண்புகள் ஒத்திருக்கும்.

எனவே தனித்தனியாக ஒவ்வொரு தனிமத்தின் பண்புகளை அறிவதற்குப் பதிலாக ஒவ்வொரு தொகுதியின் அறிந்தால் மட்டுமே போதுமானது.

வெளிக்கூட்டில் ஒரு s எலக்ட்ரான் உடைய தனிமங்கள் 1ம் தொகுதி என்றும், இரு s எலக்ட்ரான்கள் வெளிக்கூட்டில் அமையப்பெற்ற தனிமங்களின் 2ம் தொகுதி காரமண் உலோகங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவ்விரு தொகுதிகளும் s தொகுதி தனிமங்கள் என அழைக்கப்படுகின்றன.

தனிமங்கள் தங்களின் வெளிக்கூட்டில் 3 எலக்ட்ரான்கள் அதாவது இரு s  எலக்ட்ரான்கள் மற்றும் ஒரு p எலக்ட்ரான்கள் அமைப்பினைப் பெற்ற தனிமங்களின் தொகுதி 13ம் தொகுதி என அழைக்கப்படுகிறது.

 13, 14, 15, 16, 17, 18ம் தொகுதித் தனிமங்களில் s ஆர்பிட்டால்கள் நிரம்பிய நிலையிலும் இருப்பதால் இத்தனிமங்களின் பண்புகள் p ஆர்பிட்டால் எல்க்ட்ரான்களைப் பொருத்து அமைகிறது. இத்தொகுதிகள் இணைந்து p தொகுதி தனிமங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இதே போன்று d ஆக்பிட்டால்களை நிரப்பும் தன்மையுடைய தனிமங்கள் d தொகுதி தனிமங்கள் அல்லது இடைநிலைத் தனிமங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

f  ஆர்பிட்டால்களில் எலக்ட்ரான் நிரவுதல் செய்யும் தனிமங்கள் f தொகுதி தனிமங்கள் என அழைக்கப்படுகின்றன.


ஹூண்ட் விதி

ஹூண்ட் விதி

இவ்விதியின்படி p, d அல்லது f ஆர்பிட்டால்களை நிரப்பும்போது, இணை சேர்வதர்கு முன்னர், எத்தனை இணை சேரா எலக்ட்ரான்கள் இருக்க வேண்டுமோ அத்தனை எலக்ட்ரான்கள் ஆர்பிட்டாலில் காணுதல் வேண்டும்.

தரப்பட்டுள்ள துணை மட்டத்தில் எல்லா ஆர்பிட்டால்களிலும் பாதி நிரவல் நிரம்பும் வரை எலக்ட்ரான் இணை நடக்காது. இதுவே ஹூண்ட் விதி ஆகும்.


பெளலியின் தவிர்ப்புத் தத்துவம்

பெளலியின் தவிர்ப்புத் தத்துவம்

ஒரு அணுவில் உள்ள இரு எலக்ட்ரான்கள் அனைத்து நான்கு குவாண்டம் மதிப்புக்களையும் ஒரே மாதிரியாகப் பெற்றிருக்க முடியாது.

ஒரு குறிப்பிட்ட அணுவில் இரு எலக்ட்ரான்கள் அதிகபட்சமாக மூன்றும் குவாண்டம் எண்களின் மதிப்பை ஒரே அளவாகப் பெற்றிருக்கலாம். ஆனால் நான்காம் குவாண்டம் எண்ணின் மதிப்பு மாறுபடும்.

எனவே s = +1/2 என ஒரு எலக்ட்ரான் பெற்றிருந்தால் மற்றொரு எலக்ட்ரானின் s மதிப்பு -1/2 என அமையும். அதாவது ஒரே ஆர்பிட்டாலில் எலக்ட்ரான்கள் எதிர் சுழற்சிகளைப் பெற்றிருக்கும்.


ரூதர்ஃபோர்டின் சிதறல் சோதனை

ரூதர்ஃபோர்டின் சிதறல் சோதனை

எலக்ட்ரான்கள் மற்றும் புரோட்டான்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதை அறிவதற்காக 1911ம் ஆண்டு ரூதர்ஃபோர்டு சிதறும் சோதனையை நடத்தினார்.

இவரின் கருத்துப்படி அணுவின் பருமனை ஒப்பிடும் போது, உட்கரு அடைத்துக் கொள்ளும் பருமன் மிகச்சிறியது.

அணுவின் ஆரம் 10 -10 m எனப்படும்போது உட்கருவின் ஆரம் 10 -15 m ஆகும்.

மேலும் இவரது கருத்தின்படி ஒர் அணுவின் மையப்பகுதில் நுண்ணிய நேர்மின்னூட்டமுடைய உட்கரு உள்ளது. உட்கருவின் நேர்மின்னூட்டத்திற்கு புரோட்டான்களே காரணமாகும்.

புரோட்டான்கள் மற்றும் புரோட்டான்களின் நிறையைப் போலவே பெற்றுள்ள  நடுநிலைத் துகள்களைப் பொறுத்து உட்கருவின் நிறை அமைகிறது. இவ்வகை  நடுநிலைத்துகளே நியூட்ரான் ஆகும்.

1932-ல் சாட்விக் என்பவர் நியூட்ரான்களைக் கண்டறிந்தார்.

 உட்கருவினைச் சுற்றி எல்கட்ரான்கள் பல்வேறு வட்ட வடிவப் பாதைகளில் வேகமாக இயங்குகின்றன.

இவ்வட்ட வடிவ கோளப் பாதைகள் ஆர்பிட் அல்லது வளையங்கள் என அழைக்கப்படுகின்றன.

ஒர் அணுவில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அதில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கைக்குச் சமம்.

 ஒர் அணுவில் காணும் புரோட்டான்களின் எண்ணிக்கையே அவ்வணுவின் அணு எண்ணாகும். எலக்ட்ரான்கள் மற்றும் உட்கரு ஒன்றுடன் ஒன்று மின்னியக்கு விசையால் கவரப்பட்டு ஒருங்கே உள்ளன.

ரூதர்ஃபோர்டின் அணுமாதிரியின் குறைபாடு அணுக்களின் நிலைப்புத் தன்மையை விளக்க முடியாததாகும். மேலும் எலக்ட்ரான் அமைப்பைப் பற்றி எதுவும் கூறவில்லை.

எலக்ட்ரான்கள் எவ்வாறு உட்கருவைச் சுற்றி அமைகின்றன மற்றும் எலக்ட்ரான்களின் ஆற்றல்கள் அமைகின்றன என்பது போன்றவற்றை விளக்க இயலவில்லை.


தாம்சனின் அணு மாதிரி

தாம்சனின் அணு மாதிரி

தாம்சனின் அணுக்கொள்கையின்படி அணுவானது ஒழுங்கான 10-10  mஅளவிற்கு நேர் மின்னூட்டப்பட்ட கோளங்களினால் ஆனது.

இதனுள் அணுவில் காணும் நேர்மின்னூட்டத் துகள்களுக்குச் சமமாக எலக்ட்ரான்கள் பதிக்கப்பட்டுள்ளன என்பதாகும்.



s தொகுதி தனிமங்கள்


s தொகுதி தனிமங்கள்

இவை பிரதிநித்துவ தனிமங்கள் என்றும் குறிப்பிடப்படும். அதாவது ஆவர்த்தன அட்டவணையில் 1 ஆம் தொகு, 2 ஆம் தொகுதி மற்றும் 13 முதல் 17 ஆம் தொகு ஆகியவற்றில் உள்ள தனிமங்கள் பிரதிநிதித்துவ தனிமங்கள் எனப்படுகின்றன.

இவற்றில் முதல் தொகுதி தனிமங்கள் கார உலோகங்கள் எனப்படும். இரண்டாவது தொகுதி தனிமங்கள் காரமண் உலோகங்கள் எனப்படும்.

இவை இரண்டும் சேர்ந்து s தொகுதி தனிமங்கள் எனப்படும்.

பெரிலியம், மெக்னீசியம், கால்சியம், ஸ்டாரன்சியம், பேரியம் மற்றும் ரேடியம் ஆகியவை கார மண் உலோகங்கள் எனப்படும்.

லித்தியம், சோடியம், பொட்டாசியம், ரூபிடியம், சீசியம் மற்றும் பிரான்சியம் ஆகிய தனிமங்கள் கார உலோகங்கள் எனப்படும். இவை தாவர சாம்பல் என்றும் குறிப்பிடப்படும்.


மந்த வாயுக்கள்

மந்த வாயுக்கள்

ஹீலியம், நியான், ஆர்கான், கிரிப்டான், செனான், ரேடான் ஆகிய தனிமங்கள் 18வது தொகுதியில் அமைந்துள்ளன. இவையே மந்த வாயுக்கள் ஆகும்.

இந்த தனிமங்கள் ஹீலியத்தைத் தவிர மற்ற தனிமங்கள் மூழுமை பெற்ற எலக்ட்ரான் அமைப்பைப் பெற்றுள்ளன.

எனவே இவற்றுடன் எளிதில் எலக்ட்ரானைச் சேர்க்கவோ, நீக்கவோ இயலாது. எனவே இவற்றின் வினைபுரியும் தன்மை மிகவும் குறைவாகும்.

P பிரிவு தனிமங்கள்

P பிரிவு தனிமங்கள்

தனிம வரிசை அட்டவணையில் 13ம் தொகுதியிலிருந்து 18ம் தொகுதி வரை சார்ந்திருக்கும் தனிமங்களில், p ஆர்பிட்டால்களில் எலக்ட்ரான்கள் தொடர்ச்சியாக நிரவுதல் செய்யும் தனிமங்களே p தொகுதி தனிமங்கள் எனப்படுகின்றன.

இணைதிறன் கூட்டில் முழுமையாக நிரப்பப்படாத p ஆர்பிட்டாலைப் பெற்றுள்ள தனிமங்கள் p பிரிவு தனிமங்கள் ஆகும்.

இத்தனிமங்கள் பொதுவாக ns2np1-5 என்ற வெளிக்கூடு எலக்ட்ரான் அமைப்பைப் பெற்றுள்ளன. p பிரிவு தனிமங்கள் ஐந்து தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தொகிதியிலும் ஐந்து தனிமங்கள் வீதம் மொத்தம் 25 தனிமங்கள் உள்ளன.

இவற்றில் 15 தனிமங்கள் அலோகங்களும், 10 உலோகங்களாகவும் உள்ளன.

13வது தொகுதியில் போரான், அலுமினியம், கேலியம், இன்டியம் மற்றும் தாலியம் ஆகியவை உள்ளன. இவை போரான் தொகுதி தனிமங்கள் எனப்படும்.

 கார்பன், சிலிக்கான், ஜெர்மானியம், காரீயம் மற்றும் வெள்ளீயம் போன்றவை 14வது தொகுதியில் உள்ளன. இவை கார்பன் தொகுதி எனப்படும்.

 நீர்வடிவ தனிம ஆவர்த்தன அட்டவணையில் 15வது தொகுதியில் அதாவது V-A ல், நைட்ரஜன், பாஸ்பரஸ், ஆண்டிமனி, பிஸ்மத், ஆர்சனிக் பொன்ற தனிமங்கள் உள்ளன. இத்தொகுதி நைட்ரஜன் தொகுதி என அழைக்கப்படுகிறது.

இத்தொகுதியில் நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் ஆகியன அலோகங்கங்களாகும். எனினும் பிஸ்மத் ஒரு உலோகமாகும்.

ஆர்சனிக் அலோகமாக இருப்பினும், உலோகத்திற்குரிய சிறப்புப் பண்புகள் சிலவற்றைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே இத்தொகுதியில் நைட்ரஜனில் இருந்து பிஸ்மத் வரை செல்லச் செல்ல அலைகத் தன்மையில் இருந்து உலோகத் தன்மைக்கு சீரான மாற்றம் காணப்படுகிறது.


2 S தொகுதி தனிமங்கள்

2 S தொகுதி தனிமங்கள்

தனிம வரிசை அட்டவணையில் இரண்டாம் தொகுதியில் பெரிலியம், மெக்னீசியம், கால்சியம், ஸ்ட்ரான்சியம், பேரியம் மற்றும் ரேடியம் ஆகியவை அடங்கி உள்ளன. இத்தனிமங்கள் காரமண் உலோகங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.

 மண் என்ற வார்த்தை பழங்காலத்தில் ஒரு உலோக ஆக்சைடைத் குறிப்பதாகும். ஏனைனில் கால்சியம், ஸ்ட்ரான்சியம் மற்றும் பேரியம் ஆக்சைடுகள் நீர்க்கார கரைசல்களைத் தருவதால் இவைகள் காரமண் உலோகங்கள் என அழைகப்படுகின்றன.

மக்னீசியத்தின் தாதுவான மெக்னசைட்டின் பெயரிலிருந்து மெக்னீசியம் பெறப்பட்டது.

ஆங்கில வேதியியலால் ஹம்ப்ரி டேவி என்பவரால் 1808 ஆம் ஆண்டு தூய மெக்னீசியம் கண்டறியப்பட்டது.

மக்னீசியம் இயற்கையில் தனித்துக் கிடைப்பத்தில்லை. சேர்ந்த நிலையில் அதிக அளவாக புவிப்பரப்பில் காணப்படுகிறது.

மென்னசைட், டோலமைட் எப்சம்  உப்பு, கார்னலைட் ஆகிய வடிவில் காணப்படுகிறது.

கடல்நீரில் கரைந்திருக்கும் C1 மற்றும் Na+ அயனிகளை அடுத்து மூன்றாவதாக மெக்னீசியம் Mg2+ காணப்படுகிறது. எனவே பெருங்கடல்களே மெக்னீசியத்தின் மூலங்களாகும்.

தாவர உலகத்தில் பச்சை நிறத்தையுடைய இலைகளில் குளோரோஃபில் என்ற சேர்மமாக மெக்னீசியம் பரந்து காணப்படுகிறது.


கந்தக அமிலம்

கந்தக அமிலம்

இது வேதிப்பொருட்களின் அரசன் என்றழைக்கப் படுகிறது. ஏனனெனில் இது ஒரு முக்கிய வேதிப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

 கடந்த காலங்களில் வேதியியல் அறிஞர்கள் படிக ஜிங்க் சல்பேட்டை சூடுபடுத்தி கந்தக அமிலத்தை தயாரித்தனர். ஜிங்க் சல்பேட் வெள்ளைத் துத்தம் (White Vitriol) ஆகும். எனவே இதிலிருந்து கிடைத்த எண்ணெய் போன்ற திரவத்திற்கு கண்ணாடி எண்ணெய் (Oil of Vitriol) என்று பெயரிட்டனர்.

விவசாயிகளால் பயன்படுத்தப்படும் பல வகையான உரங்கள் கந்தக அமிலத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. நீர்த்த கந்தக அமிலம் கார் பாட்டரிகளிலும் பயன்படுகிறது.

 தொடுமுறையில் சல்ஃபியூரிக் அமிலம் தயாரிக்கப் படுகிறது.

அடர் கந்தக அமிலம் மற்றும் நீர்த்த கந்தக அமிலம் என்ற இரு நிலைகளில் கந்தக அமிலம் பயன்படுத்தப்படுகிறது.

அடர் கந்தக அமிலம் என்பது நிறமற்ற, மணமர்ற, அடர்த்தியான வளிமண்டலத்திலிருந்து நீரை உறிஞ்சக்கூடிய, எண்ணெய் போன்ற நீர்மம். இது அதிக அளவில் அரிக்கக்கூடியது. இதில் 98 சதவீத கந்தக அமிலமும் 2 சதவீத நீரும் உள்ளது.

நீர்த்த கந்தக அமிலம் என்பதில் 10 சதவீத கந்தக அமிலமும், 90 சதவீதம் நீரும் உள்ளது.

 கந்தக அமிலம் அம்மோனியம் சல்பேட் போன்ற உரங்கள் தயாரிக்கவும், செயற்கை இழைகள், பிளாஸ்டிக், கார் பேட்டரி, சாயங்கள்., மருந்துகள் தயாரிக்கவும், பெட்ரோல் சுத்திகரிப்பு செய்யவும், உலோகங்களை தூய்மையாக்கவும், வணிக ரீதியில் கண்ணாடி தயாரிக்கவும், சோப்புக்கள் மற்றும் சலவைப் பொருட்களை பெறுமளவில் தயாரிக்கவும் பயன்படுகிறது.பாகும். உலோகத்தில் டின் மட்டுமே இந்தப் பண்பைக் கொண்டுள்ளது.

கந்தக டை ஆக்சைடு

கந்தக டை ஆக்சைடு

 1770ம் ஆண்டு ஜே.பிரிஸ்ட்லி என்பவரால் அடர் சல்ஃபியூரிக் அமிலத்தை மெர்க்குரியுடன் வினைபுரியச் செய்து சல்ஃபர் டை ஆக்சைடு தயாரிக்கப்பட்டது. இது சல்ஃபியூரிக் அமிலம் என்றழைக்கப்பட்டது.

சல்ஃபர் டை ஆக்ஸைடு ஒரு நச்சுத்தன்மை உடைய நிறமற்ற வாயு, காற்ரை விடக் கனமானது, சல்ஃபர் டை ஆக்ஸைடு எரியவோ அல்லது எரிவதற்கு துணை புரியவோ செய்யாது.

சல்ஃபர் டை ஆக்சைடு வெளுக்கும் செயல் திறனைக் கொண்டுள்ளதற்குக் காரணம் அதன் ஒடுக்கும் பண்பே ஆகும்.

ஈரக்காற்றில் இது பிறவி நிலை ஹைட்ரனைத் தருகிறது.

தொடுமுறையில் சல்ஃபியூரிக் அமிலம் தயாரிக்கவும், சர்க்கரை ஆலைகளில் சர்க்கரை தூய்மையாக்கவும், காகிதங்கள் தயாரிக்கவும் சல்ஃபர் டை ஆக்சைடு பயன்படுகிறது.

மேலும் ஒரு கிருமி நாசினியாகவும், பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுகிறது.

மென்மையான பொருட்களாகிய கம்பளி, பட்டு போன்றவற்றை வெளுக்கப் பயன்படுத்தப்படுகிறது சல்ஃபர் டை ஆக்சைடு.

குளிர் சாதனப் பெட்டிகளில் ப்ரியான்களுக்குப் பதிலாக சல்ஃபர் டை ஆக்சையு குளிரூட்டியாகக் பயன்படுகிறது.

ஆரஞ்சு மற்றும் எலுமிச்சைச் சாறுகளில் பாதுகாக்கும் பொருளாகவும், ஜாம் மற்றும் உலர்ந்த பழஹ்களில் பாக்டீரியா வளர்ச்சியைத் தடுப்பதற்கும் பயன்படுத்தப் படுகிறது.

சல்ஃபர் டை ஆக்சைடு ஒரு குளோரின் அகற்றியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

சல்ஃபர்

சல்ஃபர்

ப்ரைம்ஸ்டோன் என்ற பெயரில் பைபில் காலத்திலிருந்து சல்ஃபர் எரியும் பொழுது வெறுப்புண்டாக்குகிற, மூச்சுத் திணறக்கூடிய வாயுவை உண்டாக்கும்  பொருளாக சல்ஃபர் அறியப்பட்டிருக்கிறது.

முட்டை, வெங்காயம், வெள்ளைப் பூண்டு ஆகியவற்றில் சல்ஃபர் உள்ளது.

இயற்கையில் சல்ஃபர் தனியாகவும், உலோகங்களுடன் கூடியும் கிடைக்கிறது. இது பெரும்பாலும் உலோக சல்ஃபைடுகளாக காணப்படுகின்றன.

உதாரணமாக கலீனா (Pbs), ஜிங்க் பிளண்டு (Zns), சின்னபார் (Hgs), இரும்புபைரைட்ஸ் (FeS2) போன்றவை.

சல்ஃபரின் அணு எண் 16. இதன் எலக்ட்ரான் அமைப்பு 2,8,6. இதில் இணைதிறன் கூட்டில் 6 எலக்ட்ரான்கள் உள்ளன.

கந்தகம் (சல்ஃபர்) வேறுபட்ட திண்ம படிக வடிவங்களைப் பெற்றுள்ளது. சாய்சதுர சல்ஃபர் (Rhombic Sulphur) ஊசி வடிவ சல்ஃபர் (Monoclinic Sulpur) போன்றவை இந்தப் புற வேற்றுமை வடிவங்கள் ஆகும். கார்பன் மற்றும் பாஸ்பரஸ் இந்தப் பண்பைக் கொண்டுள்ளன.

அமெரிக்காவில் மெக்சிகோ வளைகுடாவில் அதிக அளவில் சல்ஃபர் படிந்துள்ளது. இந்தப் படிவம் பூமிக்கு அடியில் சுமார் 1000-1500 அடி ஆழத்தில் உள்ளது.

சுரங்க முறையில் சல்ஃபரை எடுப்பது 1894-ல் ஹெர்மன் ஃபிராஷ் என்பவரால் ஒரு எளிய முறையில் கண்டுபிடிக்கப்பட்டதால் இம்முறைக்கு ஃபிராஷ் முறை என்று பெயர்.

வெடிமருந்துத் தொழிற்சாலை, காகித தொழிற்சாலை, புகைப்படத் தொழிற்சாலை, சல்ஃபியூரிக் அமிலம் தயாரித்தல் ஆகியவற்றில் சல்ஃபர் பயன்படுகிறது.

 தோள் களிம்புகள் செய்யவும், சல்போனமைடு போன்ற சல்ஃபர் மருந்துகள் தயாரிக்கவும், அழகு நிலையங்களில் முடிக்கு குறிப்பிட்ட வடிவம் தரவும், இரப்பை வல்கனைஸ் செய்யவும் சல்ஃபர் பயன்படுகிறது.

இயற்கை இரப்பரை சல்ஃபருடன் சேர்த்து குறிப்பிட்ட வெப்பநிலையில் தேவையான காலத்திற்கு சூடுபடுத்துவதே இரப்பரை வல்கனைஸ் செய்தல் ஆகும்.

தாவரத்தில் உள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை அழிக்க  சல்ஃபர் ஒரு கிருமிநாசினியாகவும், காளான் கொல்லியாகவும், பூச்சி நாசினியாகவும் பயன்படுகிறது.



அமெரிக்காவில் மெக்சிகோ வளைகுடாவில் அதிக அளவில் சல்ஃபர் படிந்துள்ளது. இந்தப் படிவம் பூமிக்கு அடியில் சுமார் 1000-1500 அடி ஆழத்தில் உள்ளது.

சுரங்க முறையில் சல்ஃபரை எடுப்பது 1894-ல் ஹெர்மன் ஃபிராஷ் என்பவரால் ஒரு எளிய முறையில் கண்டுபிடிக்கப்பட்டதால் இம்முறைக்கு ஃபிராஷ் முறை என்று பெயர்.

வெடிமருந்துத் தொழிற்சாலை, காகித தொழிற்சாலை, புகைப்படத் தொழிற்சாலை, சல்ஃபியூரிக் அமிலம் தயாரித்தல் ஆகியவற்றில் சல்ஃபர் பயன்படுகிறது.

 தோள் களிம்புகள் செய்யவும், சல்போனமைடு போன்ற சல்ஃபர் மருந்துகள் தயாரிக்கவும், அழகு நிலையங்களில் முடிக்கு குறிப்பிட்ட வடிவம் தரவும், இரப்பை வல்கனைஸ் செய்யவும் சல்ஃபர் பயன்படுகிறது.

இயற்கை இரப்பரை சல்ஃபருடன் சேர்த்து குறிப்பிட்ட வெப்பநிலையில் தேவையான காலத்திற்கு சூடுபடுத்துவதே இரப்பரை வல்கனைஸ் செய்தல் ஆகும்.

தாவரத்தில் உள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை அழிக்க  சல்ஃபர் ஒரு கிருமிநாசினியாகவும், காளான் கொல்லியாகவும், பூச்சி நாசினியாகவும் பயன்படுகிறது.

புறவேற்றுமை வடிவத்துவம்

புறவேற்றுமை வடிவத்துவம்

 புறவேற்றுமை வடிவத்துவம் என்பது அலோகத்திற்கு உரிய ஒரு சிறப்புப் பண்* புறவேற்றுமை வடிவத்துவம் என்பது அலோகத்திற்கு உரிய ஒரு சிறப்புப் பண்பாகும். உலோகத்தில் டின் மட்டுமே இந்தப் பண்பைக் கொண்டுள்ளது.

ஒரு தனிமம் வேறுபட்ட இயற்பியல் பண்புகளையும், ஒத்த வேதிப் பண்புகளையும் கொண்ட, நிலை மாறுபாடின்றி வேறுபட்ட வடிவங்களில் நிலவும் தன்மை புறவேற்றுமை வடிவத்துவம் எனப்படும்.

 ஒரு தனிமத்தின் இத்தகைய வேறுபட்ட வடிவங்கள் அதன் புறவேற்றுமை வடிவங்கள் என அழைக்கப்படுகின்றன.


ஒரு தனிமம் வேறுபட்ட இயற்பியல் பண்புகளையும், ஒத்த வேதிப் பண்புகளையும் கொண்ட, நிலை மாறுபாடின்றி வேறுபட்ட வடிவங்களில் நிலவும் தன்மை புறவேற்றுமை வடிவத்துவம் எனப்படும்.

ஒரு தனிமத்தின் இத்தகைய வேறுபட்ட வடிவங்கள் அதன் புறவேற்றுமை வடிவங்கள் என அழைக்கப்படுகின்றன.

கந்தக டை ஆக்சைடு

கந்தக டை ஆக்சைடு

 1770ம் ஆண்டு ஜே.பிரிஸ்ட்லி என்பவரால் அடர் சல்ஃபியூரிக் அமிலத்தை மெர்க்குரியுடன் வினைபுரியச் செய்து சல்ஃபர் டை ஆக்சைடு தயாரிக்கப்பட்டது. இது சல்ஃபியூரிக் அமிலம் என்றழைக்கப்பட்டது.

சல்ஃபர் டை ஆக்ஸைடு ஒரு நச்சுத்தன்மை உடைய நிறமற்ற வாயு, காற்ரை விடக் கனமானது, சல்ஃபர் டை ஆக்ஸைடு எரியவோ அல்லது எரிவதற்கு துணை புரியவோ செய்யாது.

சல்ஃபர் டை ஆக்சைடு வெளுக்கும் செயல் திறனைக் கொண்டுள்ளதற்குக் காரணம் அதன் ஒடுக்கும் பண்பே ஆகும்.

ஈரக்காற்றில் இது பிறவி நிலை ஹைட்ரனைத் தருகிறது.

தொடுமுறையில் சல்ஃபியூரிக் அமிலம் தயாரிக்கவும், சர்க்கரை ஆலைகளில் சர்க்கரை தூய்மையாக்கவும், காகிதங்கள் தயாரிக்கவும் சல்ஃபர் டை ஆக்சைடு பயன்படுகிறது.

மேலும் ஒரு கிருமி நாசினியாகவும், பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுகிறது.
* மென்மையான பொருட்களாகிய கம்பளி, பட்டு போன்றவற்றை வெளுக்கப் பயன்படுத்தப்படுகிறது சல்ஃபர் டை ஆக்சைடு.

குளிர் சாதனப் பெட்டிகளில் ப்ரியான்களுக்குப் பதிலாக சல்ஃபர் டை ஆக்சையு குளிரூட்டியாகக் பயன்படுகிறது
.
ஆரஞ்சு மற்றும் எலுமிச்சைச் சாறுகளில் பாதுகாக்கும் பொருளாகவும், ஜாம் மற்றும் உலர்ந்த பழஹ்களில் பாக்டீரியா வளர்ச்சியைத் தடுப்பதற்கும் பயன்படுத்தப் படுகிறது.

சல்ஃபர் டை ஆக்சைடு ஒரு குளோரின் அகற்றியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

அமோனியா

அமோனியா

அமோனியா இயற்கையில் கிடைக்கும். அமோனியம் குளோரைடிலிருந்து பெறப்படுகிறது.

கிரேக்க வார்த்தையில் அமோனியம் குளோரைடுக்கு சால் அமோனியேக் என்று பெயர். 1774-ல் ஜோசப் பிரிஸ்ட்லி என்பவர் நீர்த்த சுண்ணாம்பைச் சால் அமோனியாவுடன் சேர்த்து சூடு செய்து அமோனியைவைத் தயாரித்தார்.

அமோனியம் சல்பேட் மற்றும் அமோனியம் பாஸ்பேட் போன்ற உரங்கள் பெருமளவில் தயாரிப்பதற்கு அமோனியா ஒரு முக்கியமான வேதிச் சேர்மமாகப் பயன்படுத்தப்படுகிறது. இது பிளாஸ்டிக் மற்றும் நைலான் தயாரிக்கவும் பயன்படுகிறது.

அமோனியா பெருமளவில் ஹேபர் முறையில் தயாரிக்கப் படுகிறது. முதல் உலகப் போரின் போது பிரஸ் ஹேபர் என்ற ஜெர்மன் விஞ்ஞானி இம்முறையைக் கண்டுபிடித்ததால் இம்முறைக்கு அவரது பெயர் வழங்கப்பட்டது.

அமோனியா ஒரு நிறமற்ற வாயு. அது மூக்கைத் துளைக்கும் மணம் கொண்டது. நீரை விட இலேசானது. மிக அதிகமாக நீரில் கரையும் தன்மை கொண்டது.

நீரில் செறிவு கொண்ட அம்மோனியா கரைசலுக்கு நீர்ம அம்மோனியா என்று பெயர்.

ஆஸ்ட்வால்ட் முறையில் நைட்ரிக் அமிலம் அதிக அளவில் தயாரிக்கவும், சால்வே முறையில் சலவை சோடா மற்றும் சமையல் சோடா தயாரிக்கவும், அமோனியம் சல்பேட், அமோனியம் பாஸ்பேட் மற்றும் யூரியா போன்ற உரங்கள் தயாரிக்கவும், பிளாஸ்டிக் தயாரிக்கவும் சாயங்கள் மற்றும் மருந்துகள் தயாரிக்கவும் அமோனியா பயன்படுகிறது.

 நீர்ம அமோனியா கிரிஸ் மற்றும் எண்ணெயில் கரையும். இதனால் சமையல் முறையில் சுத்தம் செய்ய பன்படுகிறது. ஐஸ் தயாரிக்கும் கலத்தில் நீர்ம அமோனியா குளிர்விப்பானாக பன்படுகிறது.

ஹைட்ரஜன்

ஹைட்ரஜன்

தனிம வரிசை அட்டவணையில் ஹைட்ரஜன் முதல் தனிமமாக உள்ளது. ஹைட்ரஜன் நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற வாயு.

எல்லா வாயுக்களைக் காட்டிலும், இது இலேசானதாக உள்ளதால் விரவும் தன்மை அதிகம். நீரில் கரையாது. ஹைட்ரஜன் அமிலத்தன்மையோ அல்லது காரத் தன்மையோ அற்றது.

 தாவரங்கலிலிருந்து கிடைக்கும் எண்ணெய் இரட்டைப் பிணைப்புக் கொண்ட நிறைவுறாச் சேர்மம். ஹைட்ரஜனை சேர்க்கும்பொழுது அது நிறைவுற்று வனஸ்பதியாக மாறுகிறது. இதுவே எண்ணெய்களில் ஹைட்ரஜனேற்றம் ஆகும்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிகளில் நீர்ம ஹைட்ரஜன் ராக்கெட் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.

ஹைட்ரஜன் அதிக லகோரி மதிப்பைப் பெற்றுள்ளது. ஹைட்ரஜன் எரியும் பொழுது எந்த எரிபொருளையும் காட்டிலும் அதிக ஆற்றலைத் தருகிறது. எனவே பிற்காலத்தில் இது ஒரு எரிபொருளாகப் பயன்படுத்தப்படலாம். இது எந்த வித மாசையும் ஏற்படுத்தாது.

ஹைட்ரஜன் உலோகங்களை உருக்கி இணைப்பதற்கு பன்படுத்தப்படுகிறது.


அலுமினியம்

அலுமினியம்

அலுமினியம் சில்வர் போன்ற வெண்மை நிறம் கொண்டது. இது உறுதியானதும், குறைந்த எடையும் கொண்டது.

அலுமினியத்தின் முக்கியத் தாதுக்கள் பாக்சைட் (A12O3. 2H2O),  கிரையோலைட் (Na3A1F6), கோரண்டம் (A12O3) ஆகியன.

பாக்சைட் தீதுவிலிருந்து அலுமினியம் மின்னாற் பகுத்தல் முறையில் பிரித்தெடுக்கப் படுகிறது. அலுமினியத்தை ஹோப் செல் மூலம் தூய்மைப்படுத்துவர்.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உலோகங்கள் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து ஒன்றோடு ஒன்று உருக்கும்போது கிடைப்பதே உலோகக் கலவையாகும்.

பிஸ்மத் லெட், டின் மற்றும் காட்மியத்தின் கலவையை மர உலோகம் (Wood Metal) என்கிறோம். இது காகித உற்பத்தித் தொழிலில் அச்சு உலோகமாக பயன்படுகிறது.


இரும்பு

இரும்பு

உலோகங்களின் ராஜா என்று இரும்பு ்ழைக்கப்படுகிறது. இரும்பின் தாதுக்கள் ஹேமடைட் (Fe2O3), மாக்னடைட் (Fe3O4), இரும்பு பைரைட்டுகள் (FeS2).

வார்ப்பிரும்பு பொதுவாக முக்கியமான தாதுவான ஹேமடைட் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.

எஃகு பெசிமர் முறையில் அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது. வார்ப்பிரும்பில் 2 முதல் 5 சதவீதம் வரையிலும், தேனிரும்பில் 0.1 முதல் 0.2 சதவீதம் வரையிலும், எஃகில் 0.2 முதல் 2 சதவீதம் வரையிலும் கார்பன் காணப்படும்.


உலோகப் போலிகள்

உலோகப் போலிகள் 

உலோகம் மற்றும் அலோகப் பண்புகளைக் கொண்டுள்ள சில தனிமங்களுக்கு உலோகப் போலிகள் என்று பெயர். பிஸ்மத், சிலிகான், ஜெர்மானியம், ஆர்சனிக், ஆண்டிமணி, டெல்லூரியம் மற்றும் பொலேனியம் ஆகியவை உலோகப் போலிகளாகும்.



கார்பன் டை ஆக்சைடு

கார்பன் டை ஆக்சைடு
கார்பன் டை ஆக்சைடு ஒரு நிறமற்ற மணமற்ற வாயு

காற்றை விடக் கனமானது. 

நீரில் சிறிதளவே கார்பன் டை ஆக்சைடு கரையும். 

78 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குளிர்வித்தால் 
கார்பன் டை ஆக்சைடு நேரடியாக திண்மமாக 
மாறும். 

இத்திண்மத்தை உலர் பணிக்கட்டி என்பர். 

இது உருகாமல் நேரடியாக கார்பன் டை 
ஆக்சையாக மாறும்.

கார்பன் டை ஆக்சைடு நீரில் கரைந்து கார்பானிக் 
அமிலத்தைக் கொடுக்கும். 

இவ்வமிலம் நீல லிட்மசை சிவப்பாக மாற்றும். 

மேலும் நீற்றுச் சுண்ணாம்பு நீரை பால் போல் 
மாற்றும்.

கார்பன் டை ஆக்சைடு தீயணைக்கும் 
பொருளாகவும் காற்றேற்றம் பெற்ற 
குளிர்பானங்களிலும், சலவை சோடா 
மற்றும் ரொட்டி சோடா தயாரிக்கவும் 
பயன்படுகிறது. 

குளிர்சாதனப் பெட்டிகளிலும் உலர் 
பனிக்கட்டி பயன்படுகிறது. 

சர்க்கரை தொழிற்சாலைகளில் நீர்ம 
கார்பன் டை ஆக்சைடு பயன்படுகிறது.


துருபிடித்தல்

இரசாயனவியல், முறைப்படி துரு என்பது நீரேற்றமடைந்த பெர்ரிக் ஆக்சையு (Fe2O3 3H2O)

உலோகங்களின் மேற்பரப்பு அவற்றின் சேர்மங்களாக மாறி உதிர்வதற்கு அரிமானம் என்று பெயர். இரும்பின் அரிமானத்தை துருப்பிடித்தல் என்று அழைக்கிறோம். துருப்பிடித்தல் ஒரு மெதுவான ஆக்சிஜனேற்றமாகும். 

இரும்பு துருப்பிடிப்பதற்கு ஆக்சிஜனும் (காற்று) நீரும் தேவைப்படுகிறது.

இரும்பாலான பொருட்களின் மேற்பரப்பில் துத்தநாக உலோகத்தை மெல்லிய படலமாக படிய வைத்தால் இரும்பு துருப்பிடிப்பது தவிர்க்கப்படுகிறது. இத்தகைய செயலுக்கு நாகமுலாம் பூசுதல் என்று பெயர்.

மின்சாரத்தின் உதவியுடன் ஒரு உலோகப் பொருளின் மீது இன்னொரு உலோகத்தை பூசுவதற்கு (படிய வைப்பதற்கு) மின் முலாம் பூசல் என்று பெயர்.

 எவர்சில்வர் (துருப்பிடிக்காத எஃகு) என்பது இரும்பின் உலோகக் கலவை. அது எளிதில் துருப்பிடிப்பதில்லை.


தங்கம்

தூய தங்கம் மென்மையானது. எனவே அது ஆபரணங்கள் செய்ய ஏற்றதல்ல. சிறிதளவு காப்பர் அல்லது வெள்ளியை தங்கத்துடன் கலந்தால் கடினத்தன்மை கூடுகிறது.

தங்கத்தின் தூய்மையை அளந்தறிய கரட் என்ற அலகு பயன்படுத்தப்படுகிறது. 24 பங்கு எடையுள்ள உலோகக் கலவையில் எத்தனை பங்கு எடை தங்கம் உள்ளது என்பதை இது குறிக்கும்.

24 கரட் தங்கம் தூய தங்கமாகும். 22 கரட் ஆபரண தங்கத்தில் 22 பங்கு எடை தங்கமும் 2 பங்கு எடை காப்பரும் கலந்துள்ளது. 18 கரட் ஆபரண தங்கத்தில் 18 பங்கு எடை அளவு தங்கமும் 6 பங்கு எடை அளவு காப்பரும் உள்ளது. 
தற்பொழுது தங்கத்தின் தூய்மையை சதவீதத்தில் குறிப்பிடுகிறார்கள்.

உதாரணமாக 22 கரட் தங்கததின் தூய்மையை 91.6 சதவீதம் அல்லது எளிமையாக 916 என்று குறிப்பிடுகிறார்கள்.


ஹைட்ரஜன்

ஹைட்ரஜன் பெராக்சைடு

எல்.ஜே. தெனார்டு என்பவரால் 1813 ஆம் ஆண்டு ஹைட்ரஜன் பெராக்சைடு (H2O2) தயாரிக்கப்பட்டது. நீர்த்த அமிலத்தை பேரியம் பெராக்சைடில் வினைப்படுத்தி ஹைட்ரஜன் பெராக்சைடு தயாரிக்கப்பட்டது. வாயு மண்டலத்திலும் ஒரு சில தாவரங்களிலும் H2O2 மிகச்சிறிதளவு காணப்படுகிறது.

ஹைட்ரஜன் பெராக்சைடில் ஆக்சிஜனேற்றப் பண்பால் ஒரு சிறந்த வலிமை மிக்க வெழுப்பானாகவும், தீமையற்ற கிருமி நாசினி மற்றும் தொற்று நீக்கியாகவும் பயன்படுகிறது. மிருதுவான பொருட்களான பட்டு, கம்பளி, முடி ஆகியவை ஹைட்ரஜன் பெராக்சைடினால் வெளுக்கப்படுகிறது.

பாக்டீரியாவை அழிப்பதில் புரை தடுப்பானாக, கிருமி நாசினியாக, காயங்கள், காதுகள், பற்கள் இவற்றைக் கழுவி சுத்தம் செய்யவும் பயன்படுகிறது. இராக்கெட்டுகளில் உந்துவிசையை ஏற்படுத்த உதவுகிறது.

திரவ நிலையில் உள்ள ஹைட்ரஜன் எரிபொருள்

ஹைட்ரஜன் சாதாரணமாக H2 மூலக்கூறுகளால் ஆன நிறமற்ற மணமற்ற வாயுவாகும். வியாபார ரீதியாக பெருமளவு தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜனில் சுமார் 40 சதவீதம் அம்மோனியா தயாரிக்கவும், அதே அளவு பெட்ரோலியம் சுத்திகரித்தலிலும் பயன்படுகிறது.

எதிர்காலத்தில் இதைவிட அதிக அளவில் ஹைட்ரஜன் ஒர் எரிபொருளாகப் பயன்படுகிறது.

நீர்ம ஹைட்ரஜன் H2 ஒரு சிறந்த இராக்கெட் எரிபொருளாகும். அதை எரிக்கும்போது மற்ற எரிப்பொருட்களை விட ஒரு கிராமிற்கும் அதிக வெப்பத்தைத் தருகிறது.

ஹைட்ரஜன் காற்றில் எரியும்போது கிடைப்பது நீரே ஆகும். எனவே படிம எரிபொருட்களான இயற்கை வாயு, பெட்ரோலியம் மற்றும் நிலக்கரியை விட ஹைட்ரஜனை எரிப்பதில் சிறந்த பலன் கிடைக்கிறது.

அமில மழை ஏற்படாமல் தடுப்பதற்கும், சுற்றுப்புறம் மாசடைதலைத் தடுப்பதற்கும் ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தலாம்.

கன நீர்

கன நீர்

இது டியூட்ரியம் ஆக்சைடு எனவும் அழைக்கப்படுகிறது. கன ஹைட்ரஜனின் ஆக்சைடு கன நீர் ஆகும். கன நீர் 1932ம் ஆண்டு யூரே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. சோதனை மூலம் சாதாரண நீரில் மிகச்சிறிதளவு கனநீர்  இருப்பதைக் காட்டினார்.

பொதுவாக கனநீர் தாவரங்கள், விலங்குகள் போன்றவற்றின் வளர்ச்சியைத் தடை செய்கிறது. கனநீரில் புகையிலை விதைகள் முளைப்பதில்லை. சிறு மீன்கள், தலைப்பிரட்டை மற்றும் எலிகள் தூய கன நீரை உட்கொண்டால் இறந்து விடுகின்றன.


ஹைட்ரஜனின் ஐசோடோப்புகள்

ஹைட்ரஜனின் ஐசோடோப்புகள்

ஒரே அணு எண்களையும் வெவ்வேறு நிறை எண்களையும் உடைய ஒரே தனிமத்தின் அணுக்கள் ஐசோடோப்புக்கள் எனப்படும்.

ஹைட்ரஜனுக்கு புரோட்டியம், டியூட்ரியம், டிரிட்டியம் என மூன்று ஐசோடோப்புக்கள் காணப்படுகின்றன.

இயற்கையில் காணப்படும் மொத்த ஹைட்ரனில் 99.98 சதவீதம் சாதாரண ஹைட்ரஜனாகிய புரோட்டியமே உள்ளது. இதன் அணு நிறை 1.

டியூட்ரியம் அல்லது கன ஹைட்ரஜன் இயற்கையில் மிகச்சிறிதளவே காணப்படுகிறது. இயற்கையில் காணப்படும் ஹைட்ரஜனில் இவற்றின் விகிதமானது 1: 6000.

டிரிட்டியம் உயர் வாயு மண்டலத்தில் மின்காந்த நுண்ணலைகளால் தூண்டப்படும் உட்கரு வினைகளில் தொடர்ச்சியாக உருவாவதாகும். இது கதிரியக்கத் தன்மை கொண்ட ஐசோடோப்பு ஆகும். இதன் அரை ஆயுட்காலம் - 12.3 ஆகும்.

புரோட்டியத்தின் அணுநிறை 1. டியூட்ரியத்தின் அணு நிறை 2. டிரிட்டியத்தின் அணுநிறை 3 ஆகும்.

செயற்கைக் கதிரியக்கத்தை ஏற்படுத்த அதிவேக டியூட்ரான்கள் பயன்படுகின்றன. வேதிவினைகளின் வழிமுறைகளை அறியும் சுவடறிவானாகப் பயன்படுகிறது.

கனநீர் எனப்படும் டியூட்ரியம் ஆக்சைடு அணுக்கரு உலைகளில் நியூட்ரான் வேகத்தைக் குறைக்க மட்டுப்படுத்தியாகப் பயன்படுகிறது.

லித்தியத்தை மெதுவாகச் செல்லும் நியூட்ரான்களைக் கொண்டு தாக்குவதால் டிரிட்டியம் கிடைக்கிறது. அணுக்கரு பிணைப்பு வினைகளில் டிரிட்டியம் பயன்படுகிறது.


1 s தொகுதி தனிமங்கள்

1 s தொகுதி தனிமங்கள்

ஆவர்த்தன அட்டவணையில் ஹைட்ரஜன் முதல் தனிமமாகும். உட்கருவில் ஒரு புரோட்டானையும் மற்றும் வெளிச்சுற்றில் ஓர் எலக்ட்ரானையும் கொண்டது.


உலோகங்களின் பயன்கள்-4

 இந்த உலோகக் கலவை தொலைபேசிக் கம்பிகளில் பயன்படுகிறது.

தங்கமும், பிளாட்டினமும் நீர், காற்று, அமிலம் மற்றும் காரங்களால் பாதிக்கப்படுவதில்லை.

எனவே இவை உயர்வகை உலோகங்கள் எனப்படுகின்ரன. மின் சாதனங்கள் தயாரிக்கவும் பிளாட்டினம் பயன்படுகிறது.

உலோகங்களின் பயன்கள்-3

உரங்கள் மற்றும் பட்டாசுகள் செய்ய பாஸ்பரஸ் பயன்படுகிறது. பாஸ்பரஸ் தாவரங்களின் முக்கிய சத்துப் பொருளாகவும், விலங்குகளின் வலுவான எலும்பு மற்றும் பற்களுக்குத் தேவையான முக்கியப் பொருளாகவும் விளங்குகிறது.

ஒரு சிறந்த பூஞ்சைக் கொல்லியாக சல்பர் பயன்படுகிறது. மேலும் இரப்பருடன் சல்பரை சேர்த்து வல்கனைசிங் செய்யப் பயன்படுகிறது.

சிலிகான் ஒரு குறைகடத்தி என்பதால் டிரான் சிஸ்டர்களில் பயன்படுகிறது. மேலும் அது சிலிகான் வெண்கலம் எனப்படும் உலோகக் கலவையைத் தயாரிக்கப் பயன்படுகிறது.


அலோகங்களின் பயன்கள்

அலோகங்களின் பயன்கள்

அலோகங்களில் நிலக்கரி எரிபொருளாகவும், வைரம் மற்றும் கிராபைட் போன்றவை பல்வேறு துறைகளில் பயன்படுகிறது.

உலோகங்களின் பயன்கள்-2

உலோகங்களின் பயன்கள்

உலோகங்கங்கள் ஆக்சிஜனுடன் வினைபுரிந்து ஆக்சைடுகளைத் தருகின்றன. பொதுவாக உலோக ஆக்சைடுகள் காரத்தன்மை உடையவை.

சோடியம் குளிர்ந்த நீருடன் தீவிரமாக வினைபுரியும் இரும்பும், துத்தநாகமும் நீராவியுடன் மெதுவாக வினைபுரிகின்றன.

ஆனால் வெள்ளி, காப்பர் மற்றும் நிக்கல் முதலிய உலோகங்கள் நீருடன் வினைபுரிவதில்லை.

கார்பன், சல்பர் மற்றும் பாஸ்பரஸ் போன்ற அலோகங்கள் காற்றில் எரிந்து அவற்றின் ஆக்சைடுகளைத் தருகின்றன.

உலோகங்களின் பயன்கள்-1


உலோகங்களின் பயன்கள்

இரும்பாலான பொருட்களை துருப்பிடிக்காமல் பாதுகாக்க துத்தநாகம் பயன்படுகிறது.

மின்சேமிப்புக் கலங்களில் லெட்(காரீயம்) பயன்படுகிறது. சமையல் பாத்திரங்களின் மீது முலாம் பூச வெள்ளீயம் பயன்படுகிறது.

பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வரும் டியூராலுமின் மற்றும் மாக்னாலியம் போன்ற உலோகக் கலவைகளில் அலுமினியம் உள்ளது.

அலுமினி்யம் சமையல் பாத்திரங்கள் செய்யவும், மின் கம்பிகள், அலுமினியத் தகடுகள் மற்றும் பூச்சு (Paint) தயாரிக்கவும் பயன்படுகிறது.


காரத்தின் சமான நிறை

காரத்தின் சமான நிறை

 ஒரு காரத்தின் சமான நிறை என்பது அதன் நிறையில் எவ்வளவு பங்கில், ஒர் இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய ஹைட்ராக்சில் தொகு ுள்ளதோ அதுவே அதன் சமான நி்றை எனப்படும்.

KOH -ன் சமான நிறை 56 ஆகும்.


புதன்கிழமை