Wednesday 1 January 2014

ஹைட்ரஜனின் ஐசோடோப்புகள்

ஹைட்ரஜனின் ஐசோடோப்புகள்

ஒரே அணு எண்களையும் வெவ்வேறு நிறை எண்களையும் உடைய ஒரே தனிமத்தின் அணுக்கள் ஐசோடோப்புக்கள் எனப்படும்.

ஹைட்ரஜனுக்கு புரோட்டியம், டியூட்ரியம், டிரிட்டியம் என மூன்று ஐசோடோப்புக்கள் காணப்படுகின்றன.

இயற்கையில் காணப்படும் மொத்த ஹைட்ரனில் 99.98 சதவீதம் சாதாரண ஹைட்ரஜனாகிய புரோட்டியமே உள்ளது. இதன் அணு நிறை 1.

டியூட்ரியம் அல்லது கன ஹைட்ரஜன் இயற்கையில் மிகச்சிறிதளவே காணப்படுகிறது. இயற்கையில் காணப்படும் ஹைட்ரஜனில் இவற்றின் விகிதமானது 1: 6000.

டிரிட்டியம் உயர் வாயு மண்டலத்தில் மின்காந்த நுண்ணலைகளால் தூண்டப்படும் உட்கரு வினைகளில் தொடர்ச்சியாக உருவாவதாகும். இது கதிரியக்கத் தன்மை கொண்ட ஐசோடோப்பு ஆகும். இதன் அரை ஆயுட்காலம் - 12.3 ஆகும்.

புரோட்டியத்தின் அணுநிறை 1. டியூட்ரியத்தின் அணு நிறை 2. டிரிட்டியத்தின் அணுநிறை 3 ஆகும்.

செயற்கைக் கதிரியக்கத்தை ஏற்படுத்த அதிவேக டியூட்ரான்கள் பயன்படுகின்றன. வேதிவினைகளின் வழிமுறைகளை அறியும் சுவடறிவானாகப் பயன்படுகிறது.

கனநீர் எனப்படும் டியூட்ரியம் ஆக்சைடு அணுக்கரு உலைகளில் நியூட்ரான் வேகத்தைக் குறைக்க மட்டுப்படுத்தியாகப் பயன்படுகிறது.

லித்தியத்தை மெதுவாகச் செல்லும் நியூட்ரான்களைக் கொண்டு தாக்குவதால் டிரிட்டியம் கிடைக்கிறது. அணுக்கரு பிணைப்பு வினைகளில் டிரிட்டியம் பயன்படுகிறது.


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.