Friday 30 December 2011

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Wednesday 28 December 2011

செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்


Tuesday 27 December 2011

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Monday 26 December 2011

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Sunday 25 December 2011

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Saturday 24 December 2011

அட்டவனை,


Friday 23 December 2011

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Thursday 22 December 2011

நவீன ஆவர்த்தன அட்டவணையின் சிறப்பம்சங்கள்

நவீன ஆவர்த்தன அட்டவணையின் சிறப்பம்சங்கள்

தனிம வரிசை அட்டவணையில் உள்ள 
கிடைமட்ட வரிசைகள் தொடர்கள் என 
அழைக்கப்படுகின்றன.

ஒரு தொடரில், ஒரே வரிசையாக 
அமைந்த தனிமங்கள் ஒரே இணைதிறன் 
கூட்டைப் பெற்றிருக்கும். 

மொத்தம் 7 தொடர்கள் உள்ளன.

முதல் தொடரில் 2 தனிமங்கள் உள்ளன.

 ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்
 (மிகக்குறுகிய தொடர்).

இரண்டாவது மற்றும் மூன்றாவது தொடர், 
ஒவ்வொன்றிலும் 8 தனிமங்கள் உள்ளன. 
(குறுகிய தொடர்)

நான்காவது மற்றும் ஐந்தாவது தொடர்கள் 
ஒவ்வொன்றும் 18 தனிமங்களைக் 
கொண்டுள்ளன. (நீண்ட தொடர்கள்)

ஆறாவது தொடரில் லாந்தனைடுகளை உ
ள்ளடக்கிய 32 தனிமங்கள் உள்ளன. 
(மிக நீண்ட தொடர்)

ஏழாவது தொடர் ஆக்டினைடு தனிமங்களை 
உள்ளடக்கியது. இது முற்றுப் பெறாத தொடராகும்.

தற்பொழுது ஏழாவது தொடர் 19 தனிமங்களை
 பெற்று பூர்த்தி செய்யப்படாத தொடராக உள்ளது


 நவீன தனிம அட்டவணையில் 18 தொகுதிகள்
 உள்ளன. 

இதில் காணப்படும் செங்குத்துப் பத்திகள் 
தொகுதிகள் ஆகும்.

ஒத்த எலக்ட்ரான் அமைப்புடைய வெளி 
ஆற்றல் கூடுகளைக் கொண்ட தனிமங்கள் 
ஒரே தொகுதியில் செங்குத்து வரிசையில் 
அமைந்துள்ளன.

ஒரே தொகுதியில் உள்ள தனிமங்கள்
 ஒர் குடும்பத் தனிமங்களாக உள்ளன.

 I A முதல் VII A வரையில் உள்ள தனிமங்கள் 
பிரதிநிதித்துவத் தனிமங்கள்.

 I  A தொகுதித் தனிமங்கள் கார 
உலோகங்களாகும். 

II  A தொகுதி தனிமங்கள் கார மண் 
உலோகங்கள் ஆகும்.

VI  A தொகுதித் தனிமங்கள் (16) 
சால்கோஜென் அல்லது ஆக்சிஜன் 
குடும்பத் தனிமங்களாகும்.

VII  A தொகுதித் தனிமங்கள் (17) 
ஹாலஜன் அல்லது உப்பீனிக் 
குடும்பத் தனிமங்களாகும்.

 I B -லிருந்து மற்றும் VII -B மற்றும் 
VIII-வது தொகுதித் தனிமங்கள்
 இடைநிலைத் தனிமங்கள் ஆகும்.

பூஜ்யத் தொகுதி  தனிமங்கள் 
மந்த வாயுக்கள் (அரிய வாயுக்கள்) 
எனப்படும்.

லாந்தனைடுகளும், ஆக்டினைடுகளும்
 ஒரே தொகுதியில் இருந்தாலும் 
அவைகள் அட்டவணைக்குக் கீழே 
தனி அமைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

தனிம வரிசை அட்டவணையும் 
எலக்ட்ரான் கட்டமைப்பும்

தொகுதிகள் I-ல் இருந்து பூஜ்யம் வரை
 உள்ள தனிமங்கள் பொதுவாக 
முதன்மைத் தொகுதி தனிமங்கள் என 
அழைக்கப்படுகின்றன.

தனிமங்களின் பண்புகள், அட்டவணையில் 
அவற்றின் இருப்பிடம், எலக்ட்ரான் 
கட்டமைப்பு ஆகியவை ஒன்றுக்கொன்று 
தொடர்புடையவை.

தொகுதி II-ல் உள்ள தனிமங்கள் 2 
வெளி எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளன.

*மக்னீசியம் அணு, அதன் 3-வது 
வெளிக்கூட்டில் இரண்டு எலக்ட்ரான்களைப் 
பெற்றுள்ளது. 

எனவே இது தொதுதி II-ல் வைக்கப்பட்டுள்ளன.

ஆர்கான் வெளிக்கூட்டில் நிலைப்பு 
அமைப்பான எட்டு எலக்ட்ரான்களைப் 
பெற்றுள்ளது. எனவே அது பூஜ்யத்
 தொகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

 ஒரு பொட்டாசியம் அணு அதன் 
வெளிக்கூட்டில் ஒரு எலக்ட்ரானைப் 
பெற்றுள்ளது. எனவே, தொகுதி I-ல் 
தொடர் 4-ல் வைக்கப்படுள்ளது.

ஒரு தனிமத்தின் அணுவின் 
வெளிக்கூட்டில் உள்ள எலக்ட்ரான்களே 
அதன் வேதிப் பண்புக்குக் காரணமாக 
அமைகின்றன. 

இதனால் தான் ஒரு தொகுதியில் உள்ள
 தனிமங்கள் அனைத்தும் பண்புகளில் 
ஒத்திருக்கின்றன.

அரிய வாயுக்கள் மிகவும் நிலைப்புத் 
தன்மையுடைய எலக்ட்ரான் அமைப்பினைப் 
பெற்றிருக்கின்றன. எனவே 
வினைதிறன் அற்றவை.

 தனிம வரிசை அட்டவனையில் ஒர் 
தொகுதியில் கீழ்நோக்கிச் சென்றால் 
அணுக்களின் உருவ அளவு 
அதிகரிக்கிறது. 

தொடரில் வலது நோக்கி நகர்ந்தால் 
உருவ அளவு குறைகிறது.

கீழ்நோக்கி தொகுதிகளில் 
நகர்ந்தாலும், தொடரில் இடது 
நோக்கி நகர்ந்தாலும் தனிமங்களின் 
உலோகப் பண்புகள் அதிகரிக்கின்றன.

உலோகத் தொகுதியில் கீழ்நோக்கி 
நகர்ந்தால் உலோகங்களின் வினைதிறன் 
அதிகமாகிறது.

தொகுதி I -ன் அடிப்படையில் உள்ள 
தனிமம் மிகவும் வினைதிறன் 
உடைய தனிமம் ஆகும்.

ஒர் தொடரின் வலது பகுதியில்
 அலோகங்கள் காணப்படுகின்றன. 

அலோகங்கள் உள்ள தொகுதியில், 
அதிக வினைதிறன் கொண்ட தனிமம் 
தொகுதியின் தலைப்பில் உள்ளது.

ஏழாவது தொகுதியில் முதலாவதாக 
அதிக வினை திறன் கொண்ட 
அலோகம் உள்ளது.

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Wednesday 30 November 2011

நவீன ஆவர்த்தன விதி

நவீன ஆவர்த்தன விதி

 1912-ல் மோஸ்லே என்ற அறிவியலறிஞர் 
தனிமங்களின் இயற்பியல் மற்றும்  
வேதியியல் பண்புகள் அணு எண்களின் 
அடிப்படையில் அமைந்துள்ளன 
என்று அறிந்தார்.

இதன் அடிப்படையில் நவீன ஆவர்த்தன
 விதி உருவானது. 

இவ்விதிப்படி தனிமங்களின் இயற்பியல் 
மற்றும் வேதிப் பண்புகள் அத்
தனிமங்களின் அணு எண்களுக்கு ஏற்ப 
ஆவர்த்தன முறையில் மாற்றமடைகின்றன.

தனிமங்களை அவற்றின் அணு எண்களின் 
ஏறுவரிசையி்ல் அமைத்தால்
 ஒத்த பண்புகளையுடைய தனிமங்கள் 
சீரான இடைவெளிக்குப் பின் அமைகின்றன.

 இதுவே ஆவர்த்தனத் தன்மை எனப்படுகிறது.

அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட
 தனிம வரிசை அட்டவணை நீள் வரிசை 
அட்டவணை ஆகும்.

தனிமங்கள் அவற்றின் எலக்ட்ரான் 
அமைப்பின் அடிப்படையில் 1. மந்தவாயு 
தனிமங்கள் 2. பிரதிநிதித்துவ தனிமங்கள்
 3. இடைநிலைத் தனிமங்கள் 4. உள் 
இடைநிலைத் தனிமங்கள் என 
வகைப்படுத்தப்பட்டுள்ளன.

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Saturday 5 November 2011

Monday 31 October 2011

மெண்டலீஃப் அட்டவணையின் குறைபாடுகள்

மெண்டலீஃப் அட்டவணையின்
குறைபாடுகள்

ஹைட்ரஜனிற்கு முறையான இடம் 
தரப்படவில்லை.

அதிக அணு நிறையைப் பெற்ற தனிமங்கள்
 குறைந்த அணு நிறையைப் பெற்ற 
தனிமங்களுக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ளன.

அணு எண் 57 முதல் 71 வரை உள்ள 15 
தனிமங்கள் லாந்தனைடுகள் அல்லது 
அரிய மண் தனிமங்கள் என்று அழைக்கிறோம்.

 இவை III B தொகுதியில் 6-வது தொடரில் 
அமைக்கப்பட்டுள்ளன.

இதே போன்று ஆக்டினைடுகள் எனப்படும் 
மற்றொரு வகை தனிமங்களுக்கு தனிம 
வரிசை அட்டவணையில் சரியான இடம் 
அளிக்கப்படவில்லை.

தனிமங்களின் ஐசோடோப்புக்கள் அ
த்தனிமங்கள் இருக்கும் இடத்திலேயே 
காணப்படுகின்றன. 

ஆனால் மெண்டலீஃபின் கொள்கைப்படி 
அவற்றின் அணுநிறைக்கேற்ப வெவ்வேறு 
இடத்தில் வைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

வேதிப்பண்புகளின் அடிப்படையில் ஒத்த 
பண்புகளை உடைய தனிமங்களான காப்பர்
, மெர்குரி போன்றவை வெவ்வேறு 
தொகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் வேறுபட்ட பண்புகளையுடைய 
தனிமங்களான காப்பர், சில்வர், கோல்டு 
ஆகியவை ஒரே தொகுதியில் அமைக்கப்பட்டுள்ளன.

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


Sunday 30 October 2011

மெண்டலீஃப் அட்டவணையின் பயன்கள்

மெண்டலீஃப் அட்டவணையின் 
பயன்கள்

புதிய தனிமங்கள் இருக்கும் என முன்பே 
அறிந்து கூறப்பட்டது. 

அட்டவணையில் சில காலியிடங்கள் 
இருந்தன. 

இக்காலியிடங்கள், அதுவரை 
கண்டுபிடிக்கப் படாத புதிய 
தனிமங்கள் இப்பூமியில் உள்ளதை உணர்த்தின.

இத்தனிமங்களை மெண்டலீஃப், ஈகா-
அலுமினியம், ஈகா-சிலிக்கான் என 
அழைத்தார். 

பின்னர் அவை கண்டுபிடிக்கப்பட்ட 
முறையே காலியம், ஜெர்மேனியம் 
என அழைக்கப்பட்டன.

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Wednesday 31 August 2011

மெண்டலீஃபீன் தனிம வரிசை வகைபாடு

மெண்டலீஃபீன் தனிம 
வரிசை வகைபாடு

இரஷ்ய அறிவியலார் டிமிட்ரி மெண்டலீஃப் 
மற்றும் ஜெர்மன் அறிவியலாளர் லோதர் 
மேயர் ஆகியோர் தனிம வரிசை 
அட்டவணையை தனித்தனியே 
உருவாக்கினார்கள்.

மெண்டலீஃப் தனிமங்களை அவற்றின் 
அணுநிறையின் ஏறு வரிசையில் அமைத்தார்.

 அவர் ஒரு ஆவர்த்தன விதையைக் 
கொடுத்தார். 

அது மெண்டலீஃபின் ஆவர்த்தன
 விதி எனப்பட்டது.

 தனிமங்களின் பண்புகள் அவற்றின் 
அணு நிறையின் அடிப்படையில் 
ஆவர்த்தன முறையில் மாற்றம்
அடைகின்றன. 

மெண்டலீஃபின் ஆவர்த்தன 
அட்டவணையில் தனிமங்கள் 
அவற்றின் அணு எடைகளின் 
ஏறுவரிசையில் அமைந்துள்ளன.

செங்குத்தாக அமைந்துள்ள பத்திகள்,
 தொகுதிகள் என அழைக்கப்பட்டன.

 இவை I முதல் VIII மற்றும் பூஜ்யம் 
எனக் குறிக்கப்பட்டன.

 பூஜ்யத் தொகுதி தனிமங்கள் 
மெண்டலீஃபின் காலத்தில் 
கண்டுபிடிக்கப் படவில்லை.

*I முதல் VII வரையிலான ஒவ்வொரு 
தொகுதியும் இரண்டு உட்தொகுதிகளாக 
A,  B என பிரிக்கப்பட்டுள்ளன.

* VIII -வது தொகுதி மூன்று உட்தொகுதி
களைப் பெற்றிருக்கிறது.

 ஒவ்வொரு உட்தொகுதியிலும் மூன்று 
தனிமங்கள் உள்ளன.

பூஜ்யத் தொகுதி மந்த வாயுக்களைப் 
பெற்றுள்ளது.

ஏழு கிடைமட்ட வரிசைகள் தொடர்கள்
 எனப்படுகின்றன. 

இவை 1 முதல் 7 எண்ணால் பெயரிடப்பட்டுள்ளன. 

முதல் தொடரில் இரண்டு தனிமங்கள் 
உள்ளன (H, He).

 இரண்டாவது மற்றும் மூன்றாவது 
தொடர்கள் (குறுகிய தொடர்) 
ஒவ்வொன்றிலும் 8 தனிமங்கள் 
காணப்படுகின்றன.

நான்காவது மற்றும் ஐந்தாவது 
தொடர்கள் (நீண்ட தொடர்) 32 
தனிமங்கள் உள்ளன.

ஏழாவது தொடர் முழுமையாக 
நிரம்பாமல் உள்ளது. இதில் 19 
தனிமங்கள் உள்ளன.
 (டிரான்ஸ் யுரேனியம் தனிமங்கள்).

இவற்றில் பெரும்பான்மையான 
தனிமங்கள் செயற்கை முறையில் 
தயார்க்கப்பட்டவை.

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Tuesday 30 August 2011

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


Monday 29 August 2011

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Sunday 28 August 2011

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Saturday 20 August 2011

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Friday 19 August 2011

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Sunday 31 July 2011

நிலக்கரி மற்றும் பெற்றோலியம்


ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Saturday 30 July 2011

எண்ம விதி

எண்ம விதி

நியூலாண்ட் என்னும் அறிஞர் தனிமங்களை 
அவற்றின் அணுநிறைகளின் ஏறுவரிசையில் 
அடுக்கியபொழுது, இசையில் எவ்வாறு 
முதல் சுரமும் எட்டாவது சுரமும் 
ஒத்திருக்குமோ அதே போன்று ஒரு 
தனிமத்தின் பண்புகளுக்கும் அதிலிருந்து 
எட்டாவதாக அமைந்த தனிமத்தின் 
பண்புகளுக்கும் இடையே ஒப்புமை 
இருப்பதை உணனர்ந்தார்.

 இவ்விதி கல்சியத்திற்குப் பின்வரும் 
தனிமங்களுக்குப் பொருந்தவில்லை. 
பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 
மந்த வாயுக்களுக்கும் இவ்விதி 
பொருந்தவில்லை.

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Friday 29 July 2011

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Thursday 28 July 2011

வினாவிடை, -3

மியுரியாடிக் அமிலம் என்பது எந்த அமிலத்தின் வேறுபெயர் ?

விடை : ஹைட்ரோகுளோரிக் அமிலம்

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Wednesday 27 July 2011

டாபர்னீரின் மும்மை விதி

டாபர்னீரின் மும்மை விதி

 தனிமங்களின் அணு நிறைக்கும், 
வேதிப்பண்புகளுக்கும் இடையேயான 
தொடர்பை இவர் கண்டறிந்தார்.

ஒத்த பண்ணபுகளைப் பெற்ற தனிமங்களை 
மும்மூன்று தனிமங்களாகத் தொகுக்கலாம் 
என்றும், அவைகள் மும்மைகள் (Triads) என்று 
அழைக்கப்படலாம் என்றும் தெரிவித்தார்.

 தனிமங்களின் ஒரு மும்மையில் உள்ள 
மையத் தனிமத்தின் அணு நிறை மற்ற
 இரண்டு தனிமங்களின் அணு நிறைகளின் 
சராசரியாக அமையும். இதுவே மும்மை
 விதியாகும். 

இவ்விதி சில தனிமங்களுக்கு மட்டுமே 
பொருந்தியது.

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Tuesday 26 July 2011

வினாவிடை-2

சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் எது?

விடை : பார்மிக் அமிலம்.

செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்


Monday 25 July 2011

நீர்


திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Sunday 24 July 2011

தனிம வரிசை வகைபாடு

தனிம வரிசை வகைபாடு

தனிமங்கள் பலவற்றைக் கண்டுபிடித்த 
பின்னர், சில வேதியியல் அறிஞர்கள் 
தனிமங்களை அவற்றின் பண்புகளின் 
அடிப்படையில் வரிசைப்படுத்த முயன்றனர்.

1869-ல் இரஷ்ய நாட்டு அறிஞர் மெண்டலீப் 
முதல் தனிம வரிசை அட்டவணையைத் 
தயாரித்தார். 

இது தனிமங்களின் அணு நிறைகளை 
அடிப்படையாகக் கொண்டது.

பின்னர் மோஸ்லே என்பவர் தனிமங்களின் 
அணு எண்களைக் கண்டறிந்தார்.

தனிமங்களின் அணு எண்களே, 
அணு நிறைகளைக் காட்டிலும் 
முக்கிய அடிப்படைப் பண்பு எனக் 
கண்டறிந்தார். 

இவர் நவீன ஆவர்த்தன விதியைக் கூறினார்.

பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னர்,
அறிவியலறிஞர்கள் ஒத்த தனிமங்களை 
ஒன்றாகத் தொகுத்தனர். 
வேறுபட்ட தனிமங்கள் பிரிக்கப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Saturday 23 July 2011

ஈத்தைன் அல்லது அசிட்டிலின்

ஈத்தைன் அல்லது அசிட்டிலின்

ஈத்தைன் நிறமற்ற, நறுமணமுடைய வாயு. 

இது நீரில் கரையாது.

ஈத்தைனுடைய சிறிது ஆக்சிஜன் சேர்த்து
 தனி உலையில் எரித்தால் மிக அதிக 
அளவு வெப்பத்தைக் கொடுக்கும்.

ஆக்சி-அசிட்டிலீன் சுவாலை கிடைக்கிறது.

 இச்சுடர் உலோகங்களை வெட்டவும், 
ஒட்டவும் பயன்படுகிறது.

ஈத்தைன் அல்லது அசிட்டிலீனின் 
மூலக்கூறு வாய்பாடு C2Hஆகும்.

 பாலிவினைல் அசிட்டேட் மற்றும் 
செயற்கை இரப்பர் ஆகியவை 
தயாரித்தலில் அசிட்டிலின் 
துவக்கப் பொருளாக பயன்படுகிறது.

தொழில்துறையில் முக்கியச் 
சேர்மங்களான அசிட்டால்டிஹைடு, 
அசிட்டிக் அமிலம், அசிட்டோன், 
எத்தனால் மற்றும் பென்சீன் 
தயாரித்தலில் துவக்கப் 
பொருளாக பயன்படுகிறது.

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Friday 22 July 2011

இரசாயனவியல், -12 th


வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Thursday 21 July 2011

எத்திலீன்

எத்திலீன்

ஈத்தீனின் பொதுப்பெயர் எத்திலீன். 

இதன் மூலக்கூறு வாய்ப்பாடு C2H4 
ஆகும்.

பெரிய அல்கேன் மூலக்கூறை 
வெப்பத்தின் உதவியால் சிறிய 
ஹைட்ரோ கார்பன்களாக சிதைக்கும் 
முறை கிராக்கிங் எனப்படும்.

எத்திலீன் பழங்களைக் கனிய 
வைக்கவும், 

பாலிதீன், பாலி புரப்பிலீன் மற்றும் P
VC (பாலி வினைல் குளோரைடு) 
தயாரிக்கவும் பயன்படுகிறது.

எத்திலீன் டை குளோரைடு, செயற்கை 
இரப்பரான தயோக்கால் தயாரிப்பில் 
பயன்படுகிறது. 

கிளைக்கால் தயாரித்தலிலும் பயன்படுகிறது.

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Wednesday 20 July 2011

மூலகங்களை

மூலகங்களை அட்டம விதிப்படி
ஒழுங்குபடுத்திய விஞ்ஞானி
நியூலந் ஆவார் .

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Tuesday 19 July 2011

காற்றில் சார்ஜ் ஆகும் பற்றரி-1-2

தொடர்ச்சி


அத்துடன் அது பற்றரியின் காபனில்
செயல்பட்டு சக்தியை அதிகரிக்கும் .
சாதாரண பற்றரிகளை விட இது எடை
குறைவானது.சாதாரண பற்றரிகளில்
இரசாயப்பொருட்களாக லித்தியம்,
கோபால்ட் ஒக்சைட் ஆகியவை
இருக்கும் இவற்றுக்குப் பதிலாக
இந்த பற்றரியில் போராஸ் காபன்
இடம் பெற்றுள்ளது அத்துடன்
மற்றைய பற்றரிகளை விட மிகச்
சிறிதானதும்எடை குறைந்ததுமான
இதை கைத்தொலைபேசி(செல்போன்)
மடக்கு கணணி(லப்டப்)உட்பட பல
இலக்ரோனிக் சாதனங்களில் பயன்
படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள்
தெரிவித்து உள்ளனர்.     

செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்


Monday 18 July 2011

காற்றில் சார்ஜ் ஆகும் பற்றரி-1-1

காற்றில் சார்ஜ் ஆகும் பற்றரி 

கண்டுபிடிப்பு - 1 


உலகிலே முதன் முறையாக காற்றின்
மூலம் சார்ஜ் ஆகக்கூடிய பற்றறியை
அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள்
கண்டுபிடித்துள்ளனர் .அத்துடன் இதற்கு
"ஸ்டைர்" என்ற பெயரிட்டுள்ளனர்.இந்த
பற்றரி மீது அமைக்கப்பட்டுள்ள வலை
போன்ற பகுதி வழியாக காற்றிலுள்ள
ஒட்சிசன் பற்றரிக்குள் கிரகிக்கப்படும் .

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்

Sunday 17 July 2011

ஹைட்ரோ கார்பன்கள்

ஹைட்ரோ கார்பன்கள்

கார்பன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியவற்றால் ஆக்கப்பட்ட எளிய கரிமச் சேர்மங்கள் ஹைட்ரோ கார்பன்கள் எனப்படுகின்றன. 

இவற்றில் கார்பன் நான்கு இணைதிறனையும், ஹைட்ரஜன் ஒரு இணைதிறனையும் உடையன.

கரிமச் சேர்மங்கள் இரு முக்கிய வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 
அவை: 
1.  திறந்த சங்கிலித் தொடர் அல்லது அலிபாட்டிச் சேர்மங்கள்
2. மூடிய அமைப்புள்ள அல்லது வளையச் சேர்மங்கள்

 கார்பன் அணுக்களின் நான்கு இணைதிறன்களும் நான்கு அணுக்கள் அல்லது  தொகுதிகளுடன் ஒற்றைப் பிணைப்பின் மூலம் பிணைக்கப்பட்டிருப்பதால் இத்தகைய கார்பன்கள் உள்ள சேர்மங்கள் நிறைவுற்ற ஹைட்ரோ கார்பன்கள் எனப்படுகின்றன. 

ஏனெனில் அவை மேலும் சில அணுக்களுடனோ அல்லது தொகுதிகளுடனோ பிணைப்பு ஏற்படுத்த முடியாது.

கார்பன் அணுக்கள் தமிமிடையே பல பிணைப்புக்களால் (குறைந்த அளவு ஒரு இரட்டைப் பிணைப்பு அல்லது முப்பிணைப்பு) பிணைக்கப்பட்டிருந்தால் அத்தகைய சேர்மங்கள் நிறைவுறா ஹைட்ரோ கார்பன்கள் எனப்படும்.

நிறைவுற்ற ஹைட்ரோ கார்பன்கள் CnH2n+2 (n-ன் மதிப்பு = 1,2,3,4...) என்ற பொதுவான வாய்ப்பாட்டால் குறிக்கப்படுகின்றன.

ஆல்கேன்களில் முதல் சேர்மம் மீத்தேன். 

மீத்தேனின் வாய்பாடு CH4+ 

இரண்டாவது சேர்மம் ஈத்தேன். 
இதன் வாய்ப்பாடு C2H6 . 

மற்றவைகளை ஒப்பிடுகையில் இவை
நிலைத்தன்மை உடையவை.

 ஏனெனில் அவை நிறைவுத் தன்மை
 உடையவை. 

எனவே அவை பாரஃபீன்கள் என 
அழைக்கப்படுகின்றன.

நிறைவுறா ஹைட்ரோ கார்பன்களான 
அல்கீன்கள் CnH2n என்ற பொதுவான 
வாய்ப்பாட்டால் குறிக்கப்படுகிறது. 

இவை ஒலிஃபீன்கள் என்றும் 
அழைக்கப்படுகின்றன. 

எளிய ஒலிஃபீனின் வாய்ப்பாடு 
C2H4 இதன் சாதாரணப் பெயர் எத்திலீன்.

அல்கீன்கள், கார்பன் அணுக்களுக்
கிடையே ஒன்று அல்லது அதற்கு
 அதிகமான இரட்டைப் பிணைப்பைக் 
கொண்டுள்ளன.

இரு அணுக்களுக்கிடையே இரு 
எலக்ட்ரான் இணை பங்கிடப்பட்டு 
இரு சகப்பிணைப்பு ஏற்பட்டால், 
அவ்வணுக்கள் இரட்டைப் பிணைப்பால் 
சேர்ந்துள்ளன என அறியலாம்.

நிறைவுறா ஹைட்ரோ கார்பன்களின் 
மற்றொரு வகை அல்கைன்களாகும். 

அதன் பொதுவான வாய்ப்பாடு CnH2n-2 
இதன் சிறப்பம்சம் இதிலுள்ள கார்பன் - கார்பன் அணுக்களுக்கிடையேயான முப்பிணைப்பாகும்.
* ஆல்கைன் வரிசையில் முதல் சேர்மத்தின் 
வாய்ப்பாடு C2H2 ஆகும். இது அசிட்டிலின் 
எனப்படும். 

எனவே அல்கைன்கள், அசிட்டிலீன்கள் 
என்றும் அழைக்கப்படுகின்றன.


ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Saturday 16 July 2011

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Friday 15 July 2011

வினா விடை-1

1.வெடிப்பொருட்கள் தயாரிப்பதிற்கு பயன்படும் 
   உணவுப்பொருள் எது?

  நிலக்கடலை (கச்சான்) 

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Thursday 14 July 2011

நிலக்கரி


வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Wednesday 13 July 2011

பெட்ரோலியம்

பெட்ரோலியம்

பெட்ரோலியம் என்பற்கு பாறைகளின் எண்ணெய் என்று பொருள் பெட்ரோலியத்தில் ஹைட்ரோ கார்பன்கள் அடங்கிய இயற்கை வாயுக்களும் கசடு எண்ணெயும் அடங்கும்.

 பெட்ரோலியம் என்பது பல்வேறு ஹைட்ரோ கார்பன்களும் (கார்பன் மற்றும் ஹைட்ரஜனின் சேர்மங்கள்) மேலும் ஆக்சிஜன், நைட்ரஜன் மற்றும் கந்தகத்தைக் கொண்ட கரிம சேர்மங்கள் சிலவற்றையும் உடைய சிக்கலான கலவையாகும்.

பெட்ரோலியத்திலிருந்து பெட்ரோலிய வாயு, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் போன்றவற்றைப் பெறலாம். இவை எரிபொருளாகப் பயன்படுகின்றன.

சுமார் 100-200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கடல்வாழ் நுண்ணுயிர்த் தாவரங்களும், விலங்குகளும், பாறைகள் மற்றும் படிவங்களில் கலந்து ஆக்சிஜன் இன்றி அதிக வெப்பம், அழுத்தத்திற்கு உட்பட்டு பெட்ரோலியமாக கடலுக்கடியில் மாறியுள்ளன.

பெட்ரோலியத்தின் பகுதிப் பொருட்களை அவற்றின் வேறுபட்ட கொதிநிலைகளை அடிப்படையாகக் கொண்டு பிரித்து மாசுக்களை நீக்குவதற்கு சுத்திகரித்தல் என்று பெயர்.

பெட்ரோலியம் என்பது கருப்பு நிறம் கொண்ட பாகுநிலை மிகுந்த திரவமாகும். கார்பன் மற்றும் ஹைட்ரஜன் தனிமங்களை உள்ளடக்கிய பல்வேறு சிக்கலான சேர்மங்கள் இதில் உள்ளன.

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Tuesday 12 July 2011

ஹைட்ரோ கார்பன்

மீத்தேன் என்பது மிக எளிய ஹைட்ரோ 
கார்பனாகும். 

இதைக் கொள்ளி வாயு அல்லது சதுப்பு 
நில வாயு என்றும் அழைப்பர்.

நிலக்கரி வாயுவில் 30 சதவிகிதம் மீத்தேன் 
உள்ளது. 

இயற்கை வாயுவில் ஏறத்தாழ 80 சதவீதம் மீ
த்தேன் உள்ளது.

மீத்தேன் ஒரு சகப்பிணைப்பு மூலக்கூறு ஆகும். 

ஒரு கார்பன் அணு நான்கு ஹைட்ரஜன் 
அணுக்களுடன் நான்முகி வடிவத்தில் 
பிணைக்கப்பட்டுள்ளன.

 நீரற்ற சோடியம் அசிடேட் மற்றும் சோடா 
சுண்ணாம்பு கலவையை கடினமான 
சோதனைக் குழாயில் சூடுபடுத்தி 
மீத்தேன் வாயு தயாரிக்கப்படுகிறது.

மீத்தேன் நீரில் கரையாது என்பதால் 
நீரின் கீழ்முகப் பெயர்ச்சியினால் 
சேகரிக்கப்படுகிறது.

மீத்தேன் ஒரு நிறமற்ற மணமற்ற வாயு, 
காற்ரை விட எடை குறைவானது.
 காற்றில் நீல நிறச் சுடருடன் எரியும்.

மீத்தேன் கார்பன் பிளாக் செய்யவும்,
 பார்மால்டிஹைடு, மீத்தைல் ஆல்கஹால் 
ற்றும் குளோரோஃபாம் முதலான 
பலபொருட்கள் தயாரிக்கவும், 

எரிபொருளாகவும், ஹைபர் முறையில் 
அம்மோனியா தயாரிக்கவும்

ரப்பர் தொழிற்சாலையில் நிரப்பியாகவும்
 பயன்படுகிறது.

சாணவாயு, தானியங்கி வாகனங்கலில்
 பயன்படும் இயற்கை வாயு ஆகியவற்றில் 
மீத்தேன் அதிகம் உள்ளது.

சாக்கடையில் பொருட்கள் அழுகும்பொழுதும்,
 நமது மனிதக் குடலில் செல்லுலோஸ் 
சிதையும்போது மீத்தேன் உருவாகிறது.

செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்


Monday 11 July 2011

ஆவர்த்தன அட்டவனை


ஆவர்த்தன அட்டவணை

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Sunday 10 July 2011

கபிள் விண்வெளித் தொலைநோக்கி



ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்