Wednesday 31 August 2011

மெண்டலீஃபீன் தனிம வரிசை வகைபாடு

மெண்டலீஃபீன் தனிம 
வரிசை வகைபாடு

இரஷ்ய அறிவியலார் டிமிட்ரி மெண்டலீஃப் 
மற்றும் ஜெர்மன் அறிவியலாளர் லோதர் 
மேயர் ஆகியோர் தனிம வரிசை 
அட்டவணையை தனித்தனியே 
உருவாக்கினார்கள்.

மெண்டலீஃப் தனிமங்களை அவற்றின் 
அணுநிறையின் ஏறு வரிசையில் அமைத்தார்.

 அவர் ஒரு ஆவர்த்தன விதையைக் 
கொடுத்தார். 

அது மெண்டலீஃபின் ஆவர்த்தன
 விதி எனப்பட்டது.

 தனிமங்களின் பண்புகள் அவற்றின் 
அணு நிறையின் அடிப்படையில் 
ஆவர்த்தன முறையில் மாற்றம்
அடைகின்றன. 

மெண்டலீஃபின் ஆவர்த்தன 
அட்டவணையில் தனிமங்கள் 
அவற்றின் அணு எடைகளின் 
ஏறுவரிசையில் அமைந்துள்ளன.

செங்குத்தாக அமைந்துள்ள பத்திகள்,
 தொகுதிகள் என அழைக்கப்பட்டன.

 இவை I முதல் VIII மற்றும் பூஜ்யம் 
எனக் குறிக்கப்பட்டன.

 பூஜ்யத் தொகுதி தனிமங்கள் 
மெண்டலீஃபின் காலத்தில் 
கண்டுபிடிக்கப் படவில்லை.

*I முதல் VII வரையிலான ஒவ்வொரு 
தொகுதியும் இரண்டு உட்தொகுதிகளாக 
A,  B என பிரிக்கப்பட்டுள்ளன.

* VIII -வது தொகுதி மூன்று உட்தொகுதி
களைப் பெற்றிருக்கிறது.

 ஒவ்வொரு உட்தொகுதியிலும் மூன்று 
தனிமங்கள் உள்ளன.

பூஜ்யத் தொகுதி மந்த வாயுக்களைப் 
பெற்றுள்ளது.

ஏழு கிடைமட்ட வரிசைகள் தொடர்கள்
 எனப்படுகின்றன. 

இவை 1 முதல் 7 எண்ணால் பெயரிடப்பட்டுள்ளன. 

முதல் தொடரில் இரண்டு தனிமங்கள் 
உள்ளன (H, He).

 இரண்டாவது மற்றும் மூன்றாவது 
தொடர்கள் (குறுகிய தொடர்) 
ஒவ்வொன்றிலும் 8 தனிமங்கள் 
காணப்படுகின்றன.

நான்காவது மற்றும் ஐந்தாவது 
தொடர்கள் (நீண்ட தொடர்) 32 
தனிமங்கள் உள்ளன.

ஏழாவது தொடர் முழுமையாக 
நிரம்பாமல் உள்ளது. இதில் 19 
தனிமங்கள் உள்ளன.
 (டிரான்ஸ் யுரேனியம் தனிமங்கள்).

இவற்றில் பெரும்பான்மையான 
தனிமங்கள் செயற்கை முறையில் 
தயார்க்கப்பட்டவை.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.