Wednesday 1 January 2014

தணிமங்களின் வகைகள் தொகுதிகள்

தணிமங்களின் வகைகள் தொகுதிகள்

தனிமங்களின் வகைகள் - s, p, d, f தொகுதிகள்

தொகுதி 1 (கார உலோகங்கள்) மற்றும் தொகுதி 2 (காரமண் உலோகங்கள்) தனிமங்கள் முறையே வெளிக்கூட்டு எலக்ட்ரான் அமைப்பை ns1 மற்றும் ns2எனப்பெற்றிருப்பதால் அவை s தொகுதி தனிமங்கள் எனப்படும். இவை குறைந்த அயனியாக்கும் என்பதால் பி கொண்ட வினைத் திறன் மிக்க உலோகங்கள்.

தொகுதிகள் 13 முதல் 18 வரை உள்ள தனிமங்கள் p தொகுதி தனிமங்கள் ஆகும். s தொகுதி தனிமங்களும் சேர்ந்து இவற்றை முதன்மைத் தொகுதி தனிமங்கள் என்றும் அழைப்பர்.

ஒவ்வொரு தொகுதியிலும் வெளிச்சுற்று எல்க்ட்ரான் அமைப்பு ns2 np1லிருந்து ns2np6 வரை மாறுபடுகிறது. ஒவ்வொரு வரிசையும் மந்தவாயு எலக்ட்ரான் அமைப்புடன் முடிவுறுகிறது.

மந்த வாயுக்கள் மிகக் குறைந்த வினைதிறனைப் பெற்றுள்ளன. மந்த வாயுக்கள் தொகுதிக்கு முன்னதாக இரு முக்கிய வேதியியல் தொகுதிகள் உள்ளன. அவை ஹாலஜன்கள் (தொகுதி 17) மற்றும் சால்கோஜென்கள் (தொகுதி 16) ஆகும்.

தொகுதி 3 முதல் 12 வரை உள்ள தனி வரிசை அட்டவணையின் மையத்தில் உள்ள தனிமங்கள் d தொகுதி தனிமங்கள் அல்லது இடைநிலைத் தனிங்கள் ஆகும்.

அணுக்களின் உட்கூட்டில் உள்ள d ஆர்பிட்டால்கள் எலக்ட்ரான்களால் நிரப்பப்படுகின்றன. எனவே இவை d தொகுதி தனிமங்கள் எனப்படுகின்றன. இவற்றின் வெளிச்சுற்றின் எலக்ட்ரான் அமைப்பு (n-1) d1-10 ns1-2 இவை அனைத்தும் உலோகங்கள் ஆகும். பெரும்பாலும் நிறமுள்ள அயனிகளைத் தருகின்றன.

தனிம வரிசை அட்டவணையின் கீழ்ப்பகுதியில் உள்ள லாந்தனைடுகள் மற்றும் ஆக்டினைடுகள் உள் இடைநிலைத் தனிமங்கள் எனப்படும். இவற்றின் இணைதிறன் கூட்டு எலக்ட்ரான் அமைப்பு (n-2) f1-14 (n-1) d0-1 ns2

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.