Thursday 22 December 2011

நவீன ஆவர்த்தன அட்டவணையின் சிறப்பம்சங்கள்

நவீன ஆவர்த்தன அட்டவணையின் சிறப்பம்சங்கள்

தனிம வரிசை அட்டவணையில் உள்ள 
கிடைமட்ட வரிசைகள் தொடர்கள் என 
அழைக்கப்படுகின்றன.

ஒரு தொடரில், ஒரே வரிசையாக 
அமைந்த தனிமங்கள் ஒரே இணைதிறன் 
கூட்டைப் பெற்றிருக்கும். 

மொத்தம் 7 தொடர்கள் உள்ளன.

முதல் தொடரில் 2 தனிமங்கள் உள்ளன.

 ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்
 (மிகக்குறுகிய தொடர்).

இரண்டாவது மற்றும் மூன்றாவது தொடர், 
ஒவ்வொன்றிலும் 8 தனிமங்கள் உள்ளன. 
(குறுகிய தொடர்)

நான்காவது மற்றும் ஐந்தாவது தொடர்கள் 
ஒவ்வொன்றும் 18 தனிமங்களைக் 
கொண்டுள்ளன. (நீண்ட தொடர்கள்)

ஆறாவது தொடரில் லாந்தனைடுகளை உ
ள்ளடக்கிய 32 தனிமங்கள் உள்ளன. 
(மிக நீண்ட தொடர்)

ஏழாவது தொடர் ஆக்டினைடு தனிமங்களை 
உள்ளடக்கியது. இது முற்றுப் பெறாத தொடராகும்.

தற்பொழுது ஏழாவது தொடர் 19 தனிமங்களை
 பெற்று பூர்த்தி செய்யப்படாத தொடராக உள்ளது


 நவீன தனிம அட்டவணையில் 18 தொகுதிகள்
 உள்ளன. 

இதில் காணப்படும் செங்குத்துப் பத்திகள் 
தொகுதிகள் ஆகும்.

ஒத்த எலக்ட்ரான் அமைப்புடைய வெளி 
ஆற்றல் கூடுகளைக் கொண்ட தனிமங்கள் 
ஒரே தொகுதியில் செங்குத்து வரிசையில் 
அமைந்துள்ளன.

ஒரே தொகுதியில் உள்ள தனிமங்கள்
 ஒர் குடும்பத் தனிமங்களாக உள்ளன.

 I A முதல் VII A வரையில் உள்ள தனிமங்கள் 
பிரதிநிதித்துவத் தனிமங்கள்.

 I  A தொகுதித் தனிமங்கள் கார 
உலோகங்களாகும். 

II  A தொகுதி தனிமங்கள் கார மண் 
உலோகங்கள் ஆகும்.

VI  A தொகுதித் தனிமங்கள் (16) 
சால்கோஜென் அல்லது ஆக்சிஜன் 
குடும்பத் தனிமங்களாகும்.

VII  A தொகுதித் தனிமங்கள் (17) 
ஹாலஜன் அல்லது உப்பீனிக் 
குடும்பத் தனிமங்களாகும்.

 I B -லிருந்து மற்றும் VII -B மற்றும் 
VIII-வது தொகுதித் தனிமங்கள்
 இடைநிலைத் தனிமங்கள் ஆகும்.

பூஜ்யத் தொகுதி  தனிமங்கள் 
மந்த வாயுக்கள் (அரிய வாயுக்கள்) 
எனப்படும்.

லாந்தனைடுகளும், ஆக்டினைடுகளும்
 ஒரே தொகுதியில் இருந்தாலும் 
அவைகள் அட்டவணைக்குக் கீழே 
தனி அமைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

தனிம வரிசை அட்டவணையும் 
எலக்ட்ரான் கட்டமைப்பும்

தொகுதிகள் I-ல் இருந்து பூஜ்யம் வரை
 உள்ள தனிமங்கள் பொதுவாக 
முதன்மைத் தொகுதி தனிமங்கள் என 
அழைக்கப்படுகின்றன.

தனிமங்களின் பண்புகள், அட்டவணையில் 
அவற்றின் இருப்பிடம், எலக்ட்ரான் 
கட்டமைப்பு ஆகியவை ஒன்றுக்கொன்று 
தொடர்புடையவை.

தொகுதி II-ல் உள்ள தனிமங்கள் 2 
வெளி எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளன.

*மக்னீசியம் அணு, அதன் 3-வது 
வெளிக்கூட்டில் இரண்டு எலக்ட்ரான்களைப் 
பெற்றுள்ளது. 

எனவே இது தொதுதி II-ல் வைக்கப்பட்டுள்ளன.

ஆர்கான் வெளிக்கூட்டில் நிலைப்பு 
அமைப்பான எட்டு எலக்ட்ரான்களைப் 
பெற்றுள்ளது. எனவே அது பூஜ்யத்
 தொகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

 ஒரு பொட்டாசியம் அணு அதன் 
வெளிக்கூட்டில் ஒரு எலக்ட்ரானைப் 
பெற்றுள்ளது. எனவே, தொகுதி I-ல் 
தொடர் 4-ல் வைக்கப்படுள்ளது.

ஒரு தனிமத்தின் அணுவின் 
வெளிக்கூட்டில் உள்ள எலக்ட்ரான்களே 
அதன் வேதிப் பண்புக்குக் காரணமாக 
அமைகின்றன. 

இதனால் தான் ஒரு தொகுதியில் உள்ள
 தனிமங்கள் அனைத்தும் பண்புகளில் 
ஒத்திருக்கின்றன.

அரிய வாயுக்கள் மிகவும் நிலைப்புத் 
தன்மையுடைய எலக்ட்ரான் அமைப்பினைப் 
பெற்றிருக்கின்றன. எனவே 
வினைதிறன் அற்றவை.

 தனிம வரிசை அட்டவனையில் ஒர் 
தொகுதியில் கீழ்நோக்கிச் சென்றால் 
அணுக்களின் உருவ அளவு 
அதிகரிக்கிறது. 

தொடரில் வலது நோக்கி நகர்ந்தால் 
உருவ அளவு குறைகிறது.

கீழ்நோக்கி தொகுதிகளில் 
நகர்ந்தாலும், தொடரில் இடது 
நோக்கி நகர்ந்தாலும் தனிமங்களின் 
உலோகப் பண்புகள் அதிகரிக்கின்றன.

உலோகத் தொகுதியில் கீழ்நோக்கி 
நகர்ந்தால் உலோகங்களின் வினைதிறன் 
அதிகமாகிறது.

தொகுதி I -ன் அடிப்படையில் உள்ள 
தனிமம் மிகவும் வினைதிறன் 
உடைய தனிமம் ஆகும்.

ஒர் தொடரின் வலது பகுதியில்
 அலோகங்கள் காணப்படுகின்றன. 

அலோகங்கள் உள்ள தொகுதியில், 
அதிக வினைதிறன் கொண்ட தனிமம் 
தொகுதியின் தலைப்பில் உள்ளது.

ஏழாவது தொகுதியில் முதலாவதாக 
அதிக வினை திறன் கொண்ட 
அலோகம் உள்ளது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.