Tuesday 12 July 2011

ஹைட்ரோ கார்பன்

மீத்தேன் என்பது மிக எளிய ஹைட்ரோ 
கார்பனாகும். 

இதைக் கொள்ளி வாயு அல்லது சதுப்பு 
நில வாயு என்றும் அழைப்பர்.

நிலக்கரி வாயுவில் 30 சதவிகிதம் மீத்தேன் 
உள்ளது. 

இயற்கை வாயுவில் ஏறத்தாழ 80 சதவீதம் மீ
த்தேன் உள்ளது.

மீத்தேன் ஒரு சகப்பிணைப்பு மூலக்கூறு ஆகும். 

ஒரு கார்பன் அணு நான்கு ஹைட்ரஜன் 
அணுக்களுடன் நான்முகி வடிவத்தில் 
பிணைக்கப்பட்டுள்ளன.

 நீரற்ற சோடியம் அசிடேட் மற்றும் சோடா 
சுண்ணாம்பு கலவையை கடினமான 
சோதனைக் குழாயில் சூடுபடுத்தி 
மீத்தேன் வாயு தயாரிக்கப்படுகிறது.

மீத்தேன் நீரில் கரையாது என்பதால் 
நீரின் கீழ்முகப் பெயர்ச்சியினால் 
சேகரிக்கப்படுகிறது.

மீத்தேன் ஒரு நிறமற்ற மணமற்ற வாயு, 
காற்ரை விட எடை குறைவானது.
 காற்றில் நீல நிறச் சுடருடன் எரியும்.

மீத்தேன் கார்பன் பிளாக் செய்யவும்,
 பார்மால்டிஹைடு, மீத்தைல் ஆல்கஹால் 
ற்றும் குளோரோஃபாம் முதலான 
பலபொருட்கள் தயாரிக்கவும், 

எரிபொருளாகவும், ஹைபர் முறையில் 
அம்மோனியா தயாரிக்கவும்

ரப்பர் தொழிற்சாலையில் நிரப்பியாகவும்
 பயன்படுகிறது.

சாணவாயு, தானியங்கி வாகனங்கலில்
 பயன்படும் இயற்கை வாயு ஆகியவற்றில் 
மீத்தேன் அதிகம் உள்ளது.

சாக்கடையில் பொருட்கள் அழுகும்பொழுதும்,
 நமது மனிதக் குடலில் செல்லுலோஸ் 
சிதையும்போது மீத்தேன் உருவாகிறது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.