Sunday 24 July 2011

தனிம வரிசை வகைபாடு

தனிம வரிசை வகைபாடு

தனிமங்கள் பலவற்றைக் கண்டுபிடித்த 
பின்னர், சில வேதியியல் அறிஞர்கள் 
தனிமங்களை அவற்றின் பண்புகளின் 
அடிப்படையில் வரிசைப்படுத்த முயன்றனர்.

1869-ல் இரஷ்ய நாட்டு அறிஞர் மெண்டலீப் 
முதல் தனிம வரிசை அட்டவணையைத் 
தயாரித்தார். 

இது தனிமங்களின் அணு நிறைகளை 
அடிப்படையாகக் கொண்டது.

பின்னர் மோஸ்லே என்பவர் தனிமங்களின் 
அணு எண்களைக் கண்டறிந்தார்.

தனிமங்களின் அணு எண்களே, 
அணு நிறைகளைக் காட்டிலும் 
முக்கிய அடிப்படைப் பண்பு எனக் 
கண்டறிந்தார். 

இவர் நவீன ஆவர்த்தன விதியைக் கூறினார்.

பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னர்,
அறிவியலறிஞர்கள் ஒத்த தனிமங்களை 
ஒன்றாகத் தொகுத்தனர். 
வேறுபட்ட தனிமங்கள் பிரிக்கப்பட்டன.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.