Wednesday 1 January 2014

கந்தக டை ஆக்சைடு

கந்தக டை ஆக்சைடு

 1770ம் ஆண்டு ஜே.பிரிஸ்ட்லி என்பவரால் அடர் சல்ஃபியூரிக் அமிலத்தை மெர்க்குரியுடன் வினைபுரியச் செய்து சல்ஃபர் டை ஆக்சைடு தயாரிக்கப்பட்டது. இது சல்ஃபியூரிக் அமிலம் என்றழைக்கப்பட்டது.

சல்ஃபர் டை ஆக்ஸைடு ஒரு நச்சுத்தன்மை உடைய நிறமற்ற வாயு, காற்ரை விடக் கனமானது, சல்ஃபர் டை ஆக்ஸைடு எரியவோ அல்லது எரிவதற்கு துணை புரியவோ செய்யாது.

சல்ஃபர் டை ஆக்சைடு வெளுக்கும் செயல் திறனைக் கொண்டுள்ளதற்குக் காரணம் அதன் ஒடுக்கும் பண்பே ஆகும்.

ஈரக்காற்றில் இது பிறவி நிலை ஹைட்ரனைத் தருகிறது.

தொடுமுறையில் சல்ஃபியூரிக் அமிலம் தயாரிக்கவும், சர்க்கரை ஆலைகளில் சர்க்கரை தூய்மையாக்கவும், காகிதங்கள் தயாரிக்கவும் சல்ஃபர் டை ஆக்சைடு பயன்படுகிறது.

மேலும் ஒரு கிருமி நாசினியாகவும், பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுகிறது.
* மென்மையான பொருட்களாகிய கம்பளி, பட்டு போன்றவற்றை வெளுக்கப் பயன்படுத்தப்படுகிறது சல்ஃபர் டை ஆக்சைடு.

குளிர் சாதனப் பெட்டிகளில் ப்ரியான்களுக்குப் பதிலாக சல்ஃபர் டை ஆக்சையு குளிரூட்டியாகக் பயன்படுகிறது
.
ஆரஞ்சு மற்றும் எலுமிச்சைச் சாறுகளில் பாதுகாக்கும் பொருளாகவும், ஜாம் மற்றும் உலர்ந்த பழஹ்களில் பாக்டீரியா வளர்ச்சியைத் தடுப்பதற்கும் பயன்படுத்தப் படுகிறது.

சல்ஃபர் டை ஆக்சைடு ஒரு குளோரின் அகற்றியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.