Wednesday 1 January 2014

அமோனியா

அமோனியா

அமோனியா இயற்கையில் கிடைக்கும். அமோனியம் குளோரைடிலிருந்து பெறப்படுகிறது.

கிரேக்க வார்த்தையில் அமோனியம் குளோரைடுக்கு சால் அமோனியேக் என்று பெயர். 1774-ல் ஜோசப் பிரிஸ்ட்லி என்பவர் நீர்த்த சுண்ணாம்பைச் சால் அமோனியாவுடன் சேர்த்து சூடு செய்து அமோனியைவைத் தயாரித்தார்.

அமோனியம் சல்பேட் மற்றும் அமோனியம் பாஸ்பேட் போன்ற உரங்கள் பெருமளவில் தயாரிப்பதற்கு அமோனியா ஒரு முக்கியமான வேதிச் சேர்மமாகப் பயன்படுத்தப்படுகிறது. இது பிளாஸ்டிக் மற்றும் நைலான் தயாரிக்கவும் பயன்படுகிறது.

அமோனியா பெருமளவில் ஹேபர் முறையில் தயாரிக்கப் படுகிறது. முதல் உலகப் போரின் போது பிரஸ் ஹேபர் என்ற ஜெர்மன் விஞ்ஞானி இம்முறையைக் கண்டுபிடித்ததால் இம்முறைக்கு அவரது பெயர் வழங்கப்பட்டது.

அமோனியா ஒரு நிறமற்ற வாயு. அது மூக்கைத் துளைக்கும் மணம் கொண்டது. நீரை விட இலேசானது. மிக அதிகமாக நீரில் கரையும் தன்மை கொண்டது.

நீரில் செறிவு கொண்ட அம்மோனியா கரைசலுக்கு நீர்ம அம்மோனியா என்று பெயர்.

ஆஸ்ட்வால்ட் முறையில் நைட்ரிக் அமிலம் அதிக அளவில் தயாரிக்கவும், சால்வே முறையில் சலவை சோடா மற்றும் சமையல் சோடா தயாரிக்கவும், அமோனியம் சல்பேட், அமோனியம் பாஸ்பேட் மற்றும் யூரியா போன்ற உரங்கள் தயாரிக்கவும், பிளாஸ்டிக் தயாரிக்கவும் சாயங்கள் மற்றும் மருந்துகள் தயாரிக்கவும் அமோனியா பயன்படுகிறது.

 நீர்ம அமோனியா கிரிஸ் மற்றும் எண்ணெயில் கரையும். இதனால் சமையல் முறையில் சுத்தம் செய்ய பன்படுகிறது. ஐஸ் தயாரிக்கும் கலத்தில் நீர்ம அமோனியா குளிர்விப்பானாக பன்படுகிறது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.