Wednesday 1 January 2014

ஹைட்ரஜன்

ஹைட்ரஜன்

தனிம வரிசை அட்டவணையில் ஹைட்ரஜன் முதல் தனிமமாக உள்ளது. ஹைட்ரஜன் நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற வாயு.

எல்லா வாயுக்களைக் காட்டிலும், இது இலேசானதாக உள்ளதால் விரவும் தன்மை அதிகம். நீரில் கரையாது. ஹைட்ரஜன் அமிலத்தன்மையோ அல்லது காரத் தன்மையோ அற்றது.

 தாவரங்கலிலிருந்து கிடைக்கும் எண்ணெய் இரட்டைப் பிணைப்புக் கொண்ட நிறைவுறாச் சேர்மம். ஹைட்ரஜனை சேர்க்கும்பொழுது அது நிறைவுற்று வனஸ்பதியாக மாறுகிறது. இதுவே எண்ணெய்களில் ஹைட்ரஜனேற்றம் ஆகும்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிகளில் நீர்ம ஹைட்ரஜன் ராக்கெட் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.

ஹைட்ரஜன் அதிக லகோரி மதிப்பைப் பெற்றுள்ளது. ஹைட்ரஜன் எரியும் பொழுது எந்த எரிபொருளையும் காட்டிலும் அதிக ஆற்றலைத் தருகிறது. எனவே பிற்காலத்தில் இது ஒரு எரிபொருளாகப் பயன்படுத்தப்படலாம். இது எந்த வித மாசையும் ஏற்படுத்தாது.

ஹைட்ரஜன் உலோகங்களை உருக்கி இணைப்பதற்கு பன்படுத்தப்படுகிறது.


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.