Saturday 4 January 2014

கிராஃபைட்

கிராஃபைட்

கிராபைட்டில் கார்பன் அணுக்கள் தட்டையான அடுக்குகளாக அமைந்துள்ளன. ஒவ்வொரு அடுக்கும் கார்பன் அணுக்கள் அடங்கிய அறுகோண வளையங்களால் ஆனது.

ஒவ்வொரு கார்பன் அணுவும் மற்ற மூன்று கார்பன் அணுக்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது.

கிராபைட்டின் பல்வேறு அடுக்குகளுக்கிடையே உள்ள பிணைப்பு விசை வலுவிழந்த வாண்டர்வால்ஸ் விசை ஆகும். இந்த அடுக்குகள் ஒன்றின் மீது ஒன்றும் நழுவும் தன்மை உடையது.

இதனால் தான் கிராபைட் மென்மையாகவும் வழவழப்பாகவும் காணப்படுகிறது. இப்பண்பினால் தான் கிராபைட்டை எந்திரங்களில் உயவுப்பொருளாக பயன்படுத்துகிறோம்.

கிராபைட் கருஞ்சாம்பல் நிறமுடையது, மின்சாரத்தை நன்கு கடத்தும், கிராபைட்டின் உருகுநிலை 3700 டிகிரி செல்சியஸ் ஆகும்.

மின்கலங்களில் மின்வாய்களாகவும், இயந்திரங்களில் உயவுப்பொருளாகவும், பென்சில் லெட் செய்யவும், வண்ணங்கள் (பூச்சு) தயாரிக்கவும், அணுக்கரு உலைகளில் நியூட்ரானை உறிஞ்சும் பொருளாகவும் (Moderator) கிராபைட் பயன்படுகிறது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.