Wednesday 1 January 2014

சல்ஃபர்

சல்ஃபர்

ப்ரைம்ஸ்டோன் என்ற பெயரில் பைபில் காலத்திலிருந்து சல்ஃபர் எரியும் பொழுது வெறுப்புண்டாக்குகிற, மூச்சுத் திணறக்கூடிய வாயுவை உண்டாக்கும்  பொருளாக சல்ஃபர் அறியப்பட்டிருக்கிறது.

முட்டை, வெங்காயம், வெள்ளைப் பூண்டு ஆகியவற்றில் சல்ஃபர் உள்ளது.

இயற்கையில் சல்ஃபர் தனியாகவும், உலோகங்களுடன் கூடியும் கிடைக்கிறது. இது பெரும்பாலும் உலோக சல்ஃபைடுகளாக காணப்படுகின்றன.

உதாரணமாக கலீனா (Pbs), ஜிங்க் பிளண்டு (Zns), சின்னபார் (Hgs), இரும்புபைரைட்ஸ் (FeS2) போன்றவை.

சல்ஃபரின் அணு எண் 16. இதன் எலக்ட்ரான் அமைப்பு 2,8,6. இதில் இணைதிறன் கூட்டில் 6 எலக்ட்ரான்கள் உள்ளன.

கந்தகம் (சல்ஃபர்) வேறுபட்ட திண்ம படிக வடிவங்களைப் பெற்றுள்ளது. சாய்சதுர சல்ஃபர் (Rhombic Sulphur) ஊசி வடிவ சல்ஃபர் (Monoclinic Sulpur) போன்றவை இந்தப் புற வேற்றுமை வடிவங்கள் ஆகும். கார்பன் மற்றும் பாஸ்பரஸ் இந்தப் பண்பைக் கொண்டுள்ளன.

அமெரிக்காவில் மெக்சிகோ வளைகுடாவில் அதிக அளவில் சல்ஃபர் படிந்துள்ளது. இந்தப் படிவம் பூமிக்கு அடியில் சுமார் 1000-1500 அடி ஆழத்தில் உள்ளது.

சுரங்க முறையில் சல்ஃபரை எடுப்பது 1894-ல் ஹெர்மன் ஃபிராஷ் என்பவரால் ஒரு எளிய முறையில் கண்டுபிடிக்கப்பட்டதால் இம்முறைக்கு ஃபிராஷ் முறை என்று பெயர்.

வெடிமருந்துத் தொழிற்சாலை, காகித தொழிற்சாலை, புகைப்படத் தொழிற்சாலை, சல்ஃபியூரிக் அமிலம் தயாரித்தல் ஆகியவற்றில் சல்ஃபர் பயன்படுகிறது.

 தோள் களிம்புகள் செய்யவும், சல்போனமைடு போன்ற சல்ஃபர் மருந்துகள் தயாரிக்கவும், அழகு நிலையங்களில் முடிக்கு குறிப்பிட்ட வடிவம் தரவும், இரப்பை வல்கனைஸ் செய்யவும் சல்ஃபர் பயன்படுகிறது.

இயற்கை இரப்பரை சல்ஃபருடன் சேர்த்து குறிப்பிட்ட வெப்பநிலையில் தேவையான காலத்திற்கு சூடுபடுத்துவதே இரப்பரை வல்கனைஸ் செய்தல் ஆகும்.

தாவரத்தில் உள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை அழிக்க  சல்ஃபர் ஒரு கிருமிநாசினியாகவும், காளான் கொல்லியாகவும், பூச்சி நாசினியாகவும் பயன்படுகிறது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.