Wednesday 1 January 2014

2 S தொகுதி தனிமங்கள்

2 S தொகுதி தனிமங்கள்

தனிம வரிசை அட்டவணையில் இரண்டாம் தொகுதியில் பெரிலியம், மெக்னீசியம், கால்சியம், ஸ்ட்ரான்சியம், பேரியம் மற்றும் ரேடியம் ஆகியவை அடங்கி உள்ளன. இத்தனிமங்கள் காரமண் உலோகங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.

 மண் என்ற வார்த்தை பழங்காலத்தில் ஒரு உலோக ஆக்சைடைத் குறிப்பதாகும். ஏனைனில் கால்சியம், ஸ்ட்ரான்சியம் மற்றும் பேரியம் ஆக்சைடுகள் நீர்க்கார கரைசல்களைத் தருவதால் இவைகள் காரமண் உலோகங்கள் என அழைகப்படுகின்றன.

மக்னீசியத்தின் தாதுவான மெக்னசைட்டின் பெயரிலிருந்து மெக்னீசியம் பெறப்பட்டது.

ஆங்கில வேதியியலால் ஹம்ப்ரி டேவி என்பவரால் 1808 ஆம் ஆண்டு தூய மெக்னீசியம் கண்டறியப்பட்டது.

மக்னீசியம் இயற்கையில் தனித்துக் கிடைப்பத்தில்லை. சேர்ந்த நிலையில் அதிக அளவாக புவிப்பரப்பில் காணப்படுகிறது.

மென்னசைட், டோலமைட் எப்சம்  உப்பு, கார்னலைட் ஆகிய வடிவில் காணப்படுகிறது.

கடல்நீரில் கரைந்திருக்கும் C1 மற்றும் Na+ அயனிகளை அடுத்து மூன்றாவதாக மெக்னீசியம் Mg2+ காணப்படுகிறது. எனவே பெருங்கடல்களே மெக்னீசியத்தின் மூலங்களாகும்.

தாவர உலகத்தில் பச்சை நிறத்தையுடைய இலைகளில் குளோரோஃபில் என்ற சேர்மமாக மெக்னீசியம் பரந்து காணப்படுகிறது.


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.