Wednesday 1 January 2014

P பிரிவு தனிமங்கள்

P பிரிவு தனிமங்கள்

தனிம வரிசை அட்டவணையில் 13ம் தொகுதியிலிருந்து 18ம் தொகுதி வரை சார்ந்திருக்கும் தனிமங்களில், p ஆர்பிட்டால்களில் எலக்ட்ரான்கள் தொடர்ச்சியாக நிரவுதல் செய்யும் தனிமங்களே p தொகுதி தனிமங்கள் எனப்படுகின்றன.

இணைதிறன் கூட்டில் முழுமையாக நிரப்பப்படாத p ஆர்பிட்டாலைப் பெற்றுள்ள தனிமங்கள் p பிரிவு தனிமங்கள் ஆகும்.

இத்தனிமங்கள் பொதுவாக ns2np1-5 என்ற வெளிக்கூடு எலக்ட்ரான் அமைப்பைப் பெற்றுள்ளன. p பிரிவு தனிமங்கள் ஐந்து தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தொகிதியிலும் ஐந்து தனிமங்கள் வீதம் மொத்தம் 25 தனிமங்கள் உள்ளன.

இவற்றில் 15 தனிமங்கள் அலோகங்களும், 10 உலோகங்களாகவும் உள்ளன.

13வது தொகுதியில் போரான், அலுமினியம், கேலியம், இன்டியம் மற்றும் தாலியம் ஆகியவை உள்ளன. இவை போரான் தொகுதி தனிமங்கள் எனப்படும்.

 கார்பன், சிலிக்கான், ஜெர்மானியம், காரீயம் மற்றும் வெள்ளீயம் போன்றவை 14வது தொகுதியில் உள்ளன. இவை கார்பன் தொகுதி எனப்படும்.

 நீர்வடிவ தனிம ஆவர்த்தன அட்டவணையில் 15வது தொகுதியில் அதாவது V-A ல், நைட்ரஜன், பாஸ்பரஸ், ஆண்டிமனி, பிஸ்மத், ஆர்சனிக் பொன்ற தனிமங்கள் உள்ளன. இத்தொகுதி நைட்ரஜன் தொகுதி என அழைக்கப்படுகிறது.

இத்தொகுதியில் நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் ஆகியன அலோகங்கங்களாகும். எனினும் பிஸ்மத் ஒரு உலோகமாகும்.

ஆர்சனிக் அலோகமாக இருப்பினும், உலோகத்திற்குரிய சிறப்புப் பண்புகள் சிலவற்றைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே இத்தொகுதியில் நைட்ரஜனில் இருந்து பிஸ்மத் வரை செல்லச் செல்ல அலைகத் தன்மையில் இருந்து உலோகத் தன்மைக்கு சீரான மாற்றம் காணப்படுகிறது.


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.