Wednesday 1 January 2014

கந்தக அமிலம்

கந்தக அமிலம்

இது வேதிப்பொருட்களின் அரசன் என்றழைக்கப் படுகிறது. ஏனனெனில் இது ஒரு முக்கிய வேதிப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

 கடந்த காலங்களில் வேதியியல் அறிஞர்கள் படிக ஜிங்க் சல்பேட்டை சூடுபடுத்தி கந்தக அமிலத்தை தயாரித்தனர். ஜிங்க் சல்பேட் வெள்ளைத் துத்தம் (White Vitriol) ஆகும். எனவே இதிலிருந்து கிடைத்த எண்ணெய் போன்ற திரவத்திற்கு கண்ணாடி எண்ணெய் (Oil of Vitriol) என்று பெயரிட்டனர்.

விவசாயிகளால் பயன்படுத்தப்படும் பல வகையான உரங்கள் கந்தக அமிலத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. நீர்த்த கந்தக அமிலம் கார் பாட்டரிகளிலும் பயன்படுகிறது.

 தொடுமுறையில் சல்ஃபியூரிக் அமிலம் தயாரிக்கப் படுகிறது.

அடர் கந்தக அமிலம் மற்றும் நீர்த்த கந்தக அமிலம் என்ற இரு நிலைகளில் கந்தக அமிலம் பயன்படுத்தப்படுகிறது.

அடர் கந்தக அமிலம் என்பது நிறமற்ற, மணமர்ற, அடர்த்தியான வளிமண்டலத்திலிருந்து நீரை உறிஞ்சக்கூடிய, எண்ணெய் போன்ற நீர்மம். இது அதிக அளவில் அரிக்கக்கூடியது. இதில் 98 சதவீத கந்தக அமிலமும் 2 சதவீத நீரும் உள்ளது.

நீர்த்த கந்தக அமிலம் என்பதில் 10 சதவீத கந்தக அமிலமும், 90 சதவீதம் நீரும் உள்ளது.

 கந்தக அமிலம் அம்மோனியம் சல்பேட் போன்ற உரங்கள் தயாரிக்கவும், செயற்கை இழைகள், பிளாஸ்டிக், கார் பேட்டரி, சாயங்கள்., மருந்துகள் தயாரிக்கவும், பெட்ரோல் சுத்திகரிப்பு செய்யவும், உலோகங்களை தூய்மையாக்கவும், வணிக ரீதியில் கண்ணாடி தயாரிக்கவும், சோப்புக்கள் மற்றும் சலவைப் பொருட்களை பெறுமளவில் தயாரிக்கவும் பயன்படுகிறது.பாகும். உலோகத்தில் டின் மட்டுமே இந்தப் பண்பைக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.