Wednesday 1 January 2014

துருபிடித்தல்

இரசாயனவியல், முறைப்படி துரு என்பது நீரேற்றமடைந்த பெர்ரிக் ஆக்சையு (Fe2O3 3H2O)

உலோகங்களின் மேற்பரப்பு அவற்றின் சேர்மங்களாக மாறி உதிர்வதற்கு அரிமானம் என்று பெயர். இரும்பின் அரிமானத்தை துருப்பிடித்தல் என்று அழைக்கிறோம். துருப்பிடித்தல் ஒரு மெதுவான ஆக்சிஜனேற்றமாகும். 

இரும்பு துருப்பிடிப்பதற்கு ஆக்சிஜனும் (காற்று) நீரும் தேவைப்படுகிறது.

இரும்பாலான பொருட்களின் மேற்பரப்பில் துத்தநாக உலோகத்தை மெல்லிய படலமாக படிய வைத்தால் இரும்பு துருப்பிடிப்பது தவிர்க்கப்படுகிறது. இத்தகைய செயலுக்கு நாகமுலாம் பூசுதல் என்று பெயர்.

மின்சாரத்தின் உதவியுடன் ஒரு உலோகப் பொருளின் மீது இன்னொரு உலோகத்தை பூசுவதற்கு (படிய வைப்பதற்கு) மின் முலாம் பூசல் என்று பெயர்.

 எவர்சில்வர் (துருப்பிடிக்காத எஃகு) என்பது இரும்பின் உலோகக் கலவை. அது எளிதில் துருப்பிடிப்பதில்லை.


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.