Thursday 2 January 2014

அல்ஃபா கதிரியக்கம்

ஆல்ஃபா கதிரியக்கம்

அல்ஃபா துகள்கள் ( துகள்கள்) ஹீலியத்தின் (2He4) உட்கருவைப் பெற்றவை. ஹைட்ரஜனின் அணு நிறையை விட 4 ம"்ஙகு கனமானது.

அதிகயளவில் காணப்படும் U-238 ஐசோடோப்பு அல்ஃபா கதிர்கள் முக்கிய மூலம் ஆகும். இவை கதிரியக்கத் தனிமங்கள் வெளியிடும் மிகப் பெரிய துகள்  ஆகும்.

அல்ஃபா துகள்களுக்கு ஊடுருவும் திறன் மிகக் குறைவு. மேலும் அதிக நிறையும் அதிக திசைவேகத்தையும் பெற்றிருப்பதால் இவறஅறின் இயக்க ஆற்றல் அதிகமாகும்.

எனவே இவை செயற்கை தனிமங்களை உருவாக்கப் பயன்படும் தாக்கிகளாகப் பயன்படுகின்றன.

காற்றினை தொடர்ந்து அயனியாக்குவதால் இதன் ஆற்றல் விரைவாகக் குறைந்துவிடுகிறது. இதனால் இவை காற்றில் சிறிது தூரத்திலேயே தடுத்து நிறுத்தப் படுகின்றன. இத்துகள்கள் காற்றில் அதிகபட்ச தூரம் எவ்வளவு கடக்குமோ அதை அல்ஃபா கதிரின் இயக்க எல்லை என்று அழைக்கிறோம்.

அல்ஃபா கதிர்கள் மின் சுமை பெற்றவையாதலால் அவை மின் மற்றும்
காந்தப் புலங்களினால் விலக்கமடைகின்றன. புகைப்படத்தாளை அல்ஃபா கதிர்கள் பாதிக்கின்றன.

கதிரியக்க தனிமத்திலிருந்து ஒரு அல்ஃபா கதிர் வெளியாகையில் அதன் நிறையில் 4 அலகுகளும், அதன் மின் சுமையில் 2 அலகுகளும் குறைகின்றன. புதிதாக உருவாகும் தனிமம் வேதிப்பண்புகளில் வேறுபட்டுக் காணப்படுகிறது. இதுவே கதிரியக்க மாற்றம் எனப்படும். இதனைக் கண்டறிந்தவர் சாடி என்ற அறிஞர் ஆவார்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.