Wednesday 1 January 2014

ஹைட்ரஜன்

ஹைட்ரஜன் பெராக்சைடு

எல்.ஜே. தெனார்டு என்பவரால் 1813 ஆம் ஆண்டு ஹைட்ரஜன் பெராக்சைடு (H2O2) தயாரிக்கப்பட்டது. நீர்த்த அமிலத்தை பேரியம் பெராக்சைடில் வினைப்படுத்தி ஹைட்ரஜன் பெராக்சைடு தயாரிக்கப்பட்டது. வாயு மண்டலத்திலும் ஒரு சில தாவரங்களிலும் H2O2 மிகச்சிறிதளவு காணப்படுகிறது.

ஹைட்ரஜன் பெராக்சைடில் ஆக்சிஜனேற்றப் பண்பால் ஒரு சிறந்த வலிமை மிக்க வெழுப்பானாகவும், தீமையற்ற கிருமி நாசினி மற்றும் தொற்று நீக்கியாகவும் பயன்படுகிறது. மிருதுவான பொருட்களான பட்டு, கம்பளி, முடி ஆகியவை ஹைட்ரஜன் பெராக்சைடினால் வெளுக்கப்படுகிறது.

பாக்டீரியாவை அழிப்பதில் புரை தடுப்பானாக, கிருமி நாசினியாக, காயங்கள், காதுகள், பற்கள் இவற்றைக் கழுவி சுத்தம் செய்யவும் பயன்படுகிறது. இராக்கெட்டுகளில் உந்துவிசையை ஏற்படுத்த உதவுகிறது.

திரவ நிலையில் உள்ள ஹைட்ரஜன் எரிபொருள்

ஹைட்ரஜன் சாதாரணமாக H2 மூலக்கூறுகளால் ஆன நிறமற்ற மணமற்ற வாயுவாகும். வியாபார ரீதியாக பெருமளவு தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜனில் சுமார் 40 சதவீதம் அம்மோனியா தயாரிக்கவும், அதே அளவு பெட்ரோலியம் சுத்திகரித்தலிலும் பயன்படுகிறது.

எதிர்காலத்தில் இதைவிட அதிக அளவில் ஹைட்ரஜன் ஒர் எரிபொருளாகப் பயன்படுகிறது.

நீர்ம ஹைட்ரஜன் H2 ஒரு சிறந்த இராக்கெட் எரிபொருளாகும். அதை எரிக்கும்போது மற்ற எரிப்பொருட்களை விட ஒரு கிராமிற்கும் அதிக வெப்பத்தைத் தருகிறது.

ஹைட்ரஜன் காற்றில் எரியும்போது கிடைப்பது நீரே ஆகும். எனவே படிம எரிபொருட்களான இயற்கை வாயு, பெட்ரோலியம் மற்றும் நிலக்கரியை விட ஹைட்ரஜனை எரிப்பதில் சிறந்த பலன் கிடைக்கிறது.

அமில மழை ஏற்படாமல் தடுப்பதற்கும், சுற்றுப்புறம் மாசடைதலைத் தடுப்பதற்கும் ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.