Wednesday 1 January 2014

ரூதர்ஃபோர்டின் சிதறல் சோதனை

ரூதர்ஃபோர்டின் சிதறல் சோதனை

எலக்ட்ரான்கள் மற்றும் புரோட்டான்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதை அறிவதற்காக 1911ம் ஆண்டு ரூதர்ஃபோர்டு சிதறும் சோதனையை நடத்தினார்.

இவரின் கருத்துப்படி அணுவின் பருமனை ஒப்பிடும் போது, உட்கரு அடைத்துக் கொள்ளும் பருமன் மிகச்சிறியது.

அணுவின் ஆரம் 10 -10 m எனப்படும்போது உட்கருவின் ஆரம் 10 -15 m ஆகும்.

மேலும் இவரது கருத்தின்படி ஒர் அணுவின் மையப்பகுதில் நுண்ணிய நேர்மின்னூட்டமுடைய உட்கரு உள்ளது. உட்கருவின் நேர்மின்னூட்டத்திற்கு புரோட்டான்களே காரணமாகும்.

புரோட்டான்கள் மற்றும் புரோட்டான்களின் நிறையைப் போலவே பெற்றுள்ள  நடுநிலைத் துகள்களைப் பொறுத்து உட்கருவின் நிறை அமைகிறது. இவ்வகை  நடுநிலைத்துகளே நியூட்ரான் ஆகும்.

1932-ல் சாட்விக் என்பவர் நியூட்ரான்களைக் கண்டறிந்தார்.

 உட்கருவினைச் சுற்றி எல்கட்ரான்கள் பல்வேறு வட்ட வடிவப் பாதைகளில் வேகமாக இயங்குகின்றன.

இவ்வட்ட வடிவ கோளப் பாதைகள் ஆர்பிட் அல்லது வளையங்கள் என அழைக்கப்படுகின்றன.

ஒர் அணுவில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அதில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கைக்குச் சமம்.

 ஒர் அணுவில் காணும் புரோட்டான்களின் எண்ணிக்கையே அவ்வணுவின் அணு எண்ணாகும். எலக்ட்ரான்கள் மற்றும் உட்கரு ஒன்றுடன் ஒன்று மின்னியக்கு விசையால் கவரப்பட்டு ஒருங்கே உள்ளன.

ரூதர்ஃபோர்டின் அணுமாதிரியின் குறைபாடு அணுக்களின் நிலைப்புத் தன்மையை விளக்க முடியாததாகும். மேலும் எலக்ட்ரான் அமைப்பைப் பற்றி எதுவும் கூறவில்லை.

எலக்ட்ரான்கள் எவ்வாறு உட்கருவைச் சுற்றி அமைகின்றன மற்றும் எலக்ட்ரான்களின் ஆற்றல்கள் அமைகின்றன என்பது போன்றவற்றை விளக்க இயலவில்லை.


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.