Friday 27 December 2013

ஒட்சிசன் ஒடுக்கம் - ஒட்சிசன்ஏற்றம் வினைகள்

ஒட்சிசன் ஒடுக்கம் - ஒட்சிசன்ஏற்றம் வினைகள்

ஒட்சிசனை சேர்த்தல் அல்லது ஹைட்ரஜனை நீக்கல் ஒட்சிசனேற்றம் ஆகும். ஹைட்ரஜனை சேர்த்தல் அல்லது ஒட்சிசனை நீக்கல் ஒடுக்கமாகும்.

 இலத்திரன் கொள்கையின்படி ஒரு இரசாயண வினையில் ஈடுபடும் அணு, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இலத்திரன்களை இழந்தால் , ஒட்சிசனேற்றம் எனப்படும். 

இவ்வாறு ஏற்படும்  இலத்திரன்இழப்பு அப்பொருளின் நேர் மின்னூட்டத்தை அதிகரித்தும், எதிர் மின்னூட்டத்தைக் குறைக்கவும் செய்யும்.

இரசாயனவினைகளில் இலத்திரன்களை இழக்கும் பொருட்கள் ஒடுக்கும் பொருட்கள் ்ல்லது ஒடுக்கிகளாகும்.

ஆக்சிஜன் ஒடுக்கம் என்பது ஒரு இரசாயன வினையில் பங்கு பெறும் அணு அல்லது அணுத்தொகுதிகள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இலத்திரன்களைப் பெற்றுக்கொண்டால் அதுவே ஒடுக்கமாகும். இவ்வாறு இலத்திரன்களைப் பெறுவதால் பொருட்களின் மேல் உள்ள நேர் மின்னூட்டம் குறைந்தும், எதிர் மின்னூட்டம் அதிகரிக்கவும் செய்கிறது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.