Saturday 28 December 2013

ஒட்சிசனேற்ற எண் அல்லது ஒட்சிசன்னேற்ற நிலை

ஒட்சிசனேற்ற எண் அல்லது ஒட்சிசன்னேற்ற நிலை

ஒரு மூலக்கூறில், பிற எல்லா அணுக்களும் அயனிகளாக வெளியேறிய பின் அணுவின் மீதுள்ள எஞ்சிய மின்னூட்டமே தனிமத்தின் ஒட்சிசனேற்ற எண் ஆகும்.

எல்லா சேர்மங்கலிலும் ஃப்ளோரினின் ஒட்சிசனேற்ற எண் - 1 ஆக அமைகிறது. பொதுவாக எல்லா சேர்மங்களிலும் ஹைட்ரஜனி ன் ஒட்சிசனேற்ற எண் +1 ஆகும்.

எல்லா சேர்மங்களிலும் ஒட்சிசனின் ஒட்சிசனேற்ற எண் -2 ஆகும். எனினும் H2O2, BaO2, Na2O2 போன்ற பெர்ஒட்சைடுகளி ல் ஒட்சிசனின் ஒட்சிசனேற்ற எண் -1 ஆகும்.

 உலோக ஹைட்ரைடுகளில்ல ஹைட்ரஜனின் ஒட்சிசனேற்ற எண் -1 ஆகும்.

Cr2O72-யில் காணும் குரோமியத்தின்  ஒட்சிசனேற்ற எண் +6 ஆகும்.

ஒரு இரசாயன வினையில் ஒரு தனிமத்தின் ஒட்சிசனேற்ற எண் அதிகரித்தால் அது ஒட்சிசனேற்றம் ஆகும். 

ஒரு இரசாயன வினையில் ஒரு தனிமத்தின் ஒட்சிசனேற்ற எண் குறைந்தால் அது ஆக்சிஜன் ஒடுக்கமாகும்.

MnO2 + 4HCl --> MnCl2 + Cl2 + 2H2O

மேற்கூறிய வினையில் மாங்கனீசு + 4ல் இருந்து, +2 ஒட்சிசனேற்ற எண்ணாக குறைகிறது. எனவே MnO2 ஒடுக்கத்திற்கு உட்படுவதால் இது ஒரு ஒட்சிசனேற்றி ஆகும். 

HCl ல் உள்ள குளோரினின் ஒட்சிசனேற்ற எண் -1லிருந்து பூச்சியத்திற்கு உயர்கிறது. எனவே ஒட்சிசனேற்றம் பெறுவதால் இது ஒரு ஒடுக்கியாகும்.


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.