Saturday 31 August 2013

கார உலோகங்கள்





கார உலோகங்கள்

கார உலோகங்கள் பளபளப்பானவை, வெண்ணிற மானவை, மிருதுவானவே. அனைத்து கார உலோகங்களும் +1 ஆக்சிஜனேற்ற நிளையைப் பெற்றுள்ளன. ஏனெனில் அவை வெளிக்கூட்டில் உள்ள ஒற்றை எலக்ட்ரானை எளிதாக இழக்கின்றன.

கார உலோகத் தொகுதியின் இறுதியில் உள்ள பிரான்சியம் கதிரியக்கத் தனிமமாகும்.

கார உலோகங்கள் புன்சன் சுடரில் குறிப்பிட்ட நிறத்தை அளிக்கின்றன. லித்தியம் அடர்சிவப்பு நிறத்தையும், சோடியம் மஞ்சள் நிறத்தையும். ரூபிடியம், சீசியம் ஆகியவைஊதா நிறத்தையும் தருகின்றன.

எல்லா கார உலோகங்களும் திண்ம நிலையில் வலுக்குறைந்த பிணைப்பைப் பெற்றிருப்பதால் குறைவான உருகுநிலையும், கொதிநிலையும் பெற்றுள்ளன.

கார உலோகங்களை கத்தியால் வெட்ட இயலும். கார உலோகங்கள் வீரியம் மிகுந்தவை. எனவே இயற்கையில் சேர்மங்களாக மட்டுமே காணப்படுகின்றன.

 கார உலோகத் தொகுதியில் லித்தியத்திலிருந்து சீசியத்திற்கு கீழ்நோக்கிச் செல்லும்போது அணுப்பருமன் அதிகரிக்கிறது. இதே காரணத்தால் அணு ஆரமும், அயனி ஆரமும் படிப்படியாக உயருகின்றன.

கார உலோகங்களின் அயனியாக்கும் ஆற்றல் மற்றவைகளை விடக் குறைவு. கார உலோகங்கள் ஒரு இணைத்திறன் எலக்ட்ரான்களை இழந்து ஒடுக்க வினைகளைத்தருகின்றன. எனவே இவை சிறந்த ஒடுக்கிகளாகச் செயல்படுகின்ரன.

கார உலோகங்களின் வினைதிறன் லித்தியத்திலிருந்து சீசியம் வரை கீழே செல்லும்போது அதிகரிக்கிறது.

சோடியம் டெளன் முறையின் மூலம் பிரித்தெடுக்கப்படுகிறது. சோடியம் லேசான உலோகக் கலவை தயாரிப்பிலும் சில அரிய மண் உலோகங்களை அதன்ஆக்சைடுகளிலிருந்து தயாரிக்கும்போதும் ஆக்சிஜன் நீக்கியாகப் பயன்படுகிறது.

ஐசோப்ரினை பலபடியாக்கி செயற்கை இரப்பர் தயாரிப்பில் சோடியம் வினையூக்கியாகப் பயன்படுகிறது.


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.