Tuesday 30 April 2013

நிலக்கரி

நிலக்கரி

 இயற்கையில் மடிந்து மண்ணாகிய உயிரிப் படிவங்களிலும், பெட்ரோலியம், நிலக்கரி மறஅறும் பீட் ஆகியவைகளிலும் ஹைட்ரோ கார்பன்கள் காணப்படுகின்றன.

நிலக்கரி இயற்கையில் பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது. இந்தியாவின் தொழில் வர்த்தகத்துக்குத் தேவையான ஆற்றலில் 67 சதவிகித ஆற்றல் நிலக்கரி மூலம் கிடைக்கிறது.

 பெட்ரோலியம் என்பது கருப்பு நிறம் கொண்ட பாகுநிலை மிகுந்த திரவமாகும். கார்பன் மற்றும் ஹைட்ரஜன் தனிமங்களை உள்ளடக்கிய பல்வேறு சிக்கலான சேர்மங்கள் இதில் உள்ளன.

பெட்ரோலியத்திலிருந்து பெட்ரோலிய வாயு, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் போன்றவற்றைப் பெறலாம். இவை எரிபொருளாகப் பயன்படுகின்றன.

ஹைட்ரோ கார்பன்களின் முக்கிய மூலம் நிலக்கரியாகும். பிட்டுமினஸ் நிலக்கரியைக் காற்றின்றி வெப்பப்படுத்தும் போது (கார்பன் மயமாதல்) நிலக்கரித் தார் ஆவியாகவும், கல்கரி வீழ்படிவாகவும் கிடைக்கிறது.

 நிலக்கரித் தாரைப் பின்னக் காய்ச்சி வடிக்கும்போது பலவிதப் பொருட்கள் கிடைக்கின்றன.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.