Saturday 6 April 2013

கார்பன் டை ஆக்சைடு


கார்பன் டை ஆக்சைடு


 கார்பன் டை ஆக்சைடு ஒரு நிறமற்ற மணமற்ற வாயு, காற்றை விடக் கனமானது. நீரில் சிறிதளவே கார்பன் டை ஆக்சைடு கரையும். -78 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குளிர்வித்தால் கார்பன் டை ஆக்சைடு நேரடியாக திண்மமாக மாறும். இத்திண்மத்தை உலர் பணிக்கட்டி என்பர். இது உருகாமல் நேரடியாக கார்பன் டை ஆக்சையாக மாறும்.

கார்பன் டை ஆக்சைடு நீரில் கரைந்து கார்பானிக் அமிலத்தைக் கொடுக்கும். இவ்வமிலம் நீல லிட்மசை சிவப்பாக மாற்றும். மேலும் நீற்றுச் சுண்ணாம்பு நீரை பால் போல் மாற்றும்.
 கார்பன் டை ஆக்சைடு தீயணைக்கும் பொருளாகவும் காற்றேற்றம் பெற்ற குளிர்பானங்களிலும், சலவை சோடா மற்றும் ரொட்டி சோடா தயாரிக்கவும் பயன்படுகிறது. குளிர்சாதனப் பெட்டிகளிலும் உலர் பனிக்கட்டி பயன்படுகிறது. சர்க்கரை தொழிற்சாலைகளில் நீர்ம கார்பன் டை ஆக்சைடு பயன்படுகிறது.

மீத்தேன் என்பது மிக எளிய ஹைட்ரோ கார்பனாகும். இதைக் கொள்ளி வாயு அல்லது சதுப்பு நில வாயு என்றும் அழைப்பர்.

நிலக்கரி வாயுவில் 30 சதவிகிதம் மீத்தேன் உள்ளது. இயற்கை வாயுவில் ஏறத்தாழ 80 சதவீதம் மீத்தேன் உள்ளது.

மீத்தேன் ஒரு சகப்பிணைப்பு மூலக்கூறு ஆகும். ஒரு கார்பன் அணு நான்கு ஹைட்ரஜன் அணுக்களுடன் நான்முகி வடிவத்தில் பிணைக்கப்பட்டுள்ளன.

நீரற்ற சோடியம் அசிடேட் மற்றும் சோடா சுண்ணாம்பு கலவையை கடினமான சோதனைக் குழாயில் சூடுபடுத்தி மீத்தேன் வாயு தயாரிக்கப்படுகிறது.

 மீத்தேன் நீரில் கரையாது என்பதால் நீரின் கீழ்முகப் பெயர்ச்சியினால் சேகரிக்கப்படுகிறது.

மீத்தேன் ஒரு நிறமற்ற மணமற்ற வாயு, காற்ரை விட எடை குறைவானது. காற்றில் நீல நிறச் சுடருடன் எரியும்.

மீத்தேன் கார்பன் பிளாக் செய்யவும், பார்மால்டிஹைடு, மீத்தைல் ஆல்கஹால் மற்றும் குளோரோஃபாம் முதலான பலபொருட்கள் தயாரிக்கவும்,
எரிபொருளாகவும், ஹைபர் முறையில் அம்மோனியா தயாரிக்கவும், ரப்பர் தொழிற்சாலையில் நிரப்பியாகவும் பயன்படுகிறது.

சாணவாயு, தானியங்கி வாகனங்கலில் பயன்படும் இயற்கை வாயு ஆகியவற்றில் மீத்தேன் அதிகம் உள்ளது.

சாக்கடையில் பொருட்கள் அழுகும்பொழுதும், நமது மனிதக் குடலில் செல்லுலோஸ் சிதையும்போது மீத்தேன் உருவாகிறது.
சாக்கடையில் பொருட்கள் அழுகும்பொழுதும், நமது மனிதக் குடலில் செல்லுலோஸ் சிதையும்போது மீத்தேன் உருவாகிறது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.